Wednesday, July 1, 2009
கோழை நாட்டின் குடிமக்கள் நாம் !!
கோழை நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள கொஞ்சம் வெட்க்கமாகத்தான் இருக்கிறது. ஒரு நாடு லட்ச கணக்கில் படை வீரர்களையும் , கோடிகணக்கில் ஆயுதங்களையும் வைத்திருப்பதால் மட்டும் வல்லரசாக மாறிவிடுவதில்லை . அதனை ஆளும் தலைவர்களின் தைரியமும் ,மன உறுதியும் தான் அது வல்லரசா இல்லை புல்லரசா என்பதை முடிவு செய்கிறது.
9/11 தீவிரவாதிகள் தாக்குதலிற்கு பிறகு அமெரிக்கா இந்த போரில் எங்களோடு இல்லாதவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என கூறி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது . அதில் வெற்றியும் கண்டு வருகிறது.
சீனா தன் பக்கத்து நாடான திபெத்தை ஆக்கிரமித்து இன்று வரை அதனை அடிமை படுத்தி வருகிறது . உலக நாடுகள் எல்லாம் ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள டீக்கடை பெஞ்சில் ஒரு சாதா டீயும் ரெண்டு மெது வடையும் சாப்பிட்டு கொண்டு உள்ளன . அதை போல் தைவானையும் சுதந்திர நாடக அங்கிகரிக்காமல் அதனை பயமுறுத்திக்கொண்டே உள்ளது.
தம்மாதுண்டு இலங்கையும் மகா பயங்கர ,கொடுர, கொலைகளை லட்சகணக்கில் செய்து விட்டு , உலக நாடுகள் என்று சொல்லப்படும் பத்தாம் பசலிகளுக்கு குச்சி மிட்டாயும் , கோன் ஐசும் கொடுத்து கொண்டு உள்ளது.
தீவிரவாதிகளின் சொர்க்க பூமியான பாகிஸ்த்தான் எல்லா விதமான தீவிரவாத செயல்களையும் தன் பக்கத்து நாடான இந்தியாவிற்கு செய்தது விட்டு அதனை சமாதான பேச்சு வார்த்தைக்கு வரும் படி வாய் கூசாமல் கூப்பிடுகிறது.
அதை செய்வோம் இதைசெய்வோம் என்ற ஜப்பான், அமெரிக்கா , தென் கொரிய
நாடுகளுக்கு பெப்பே காட்டி அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா. எங்கள் எல்லை பகுதிக்குள் வேறு நாட்டு போர் விமானங்கள் பறந்ததால் அதனை போருக்கு விட்ட அழைப்பாகவே கருதுவோம் என்று தைரியமாகவே கூறியுள்ளது .
ஈரானும் இப்போது எதிர்ப்பையும் மீறி அணுகுண்டு தயாரிக்க போகிறது.
ஆனால் மகா பராக்கிரம இந்தியாவோ தன் நாட்டு மக்களின் வம்சா வழியினரை கொல்ல ஆயுதமும் , பணமும் பயிற்சியும் அளித்தது .
எத்தனை முறை தாக்குதல் நடத்தினாலும் தாங்குவோம் ஆனால் திருப்பி தக்க மாட்டோம் என்று (தாக்குதல நடத்திய தீவிரவாதிகளை பிடிப்பதற்கு முயலாமல் ) பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒத்து கொள்கிறது.
(தன் நாட்டு பிரதமரை ஒரு குட்டி நாட்டின் போர் வீரன் தாக்கிய போது பெரிய அளவில் அலட்டி கொள்ளாமல் பரந்த மனதுடன் இருந்த நாடாயிற்றே !)
தன் நாட்டு மக்கள் மீது வெளி நாட்டில் எத்தனை முறை தாக்குதல் நடந்தாலும் அதனை பற்றி கோபமாக அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே உள்ளது.
இந்தியாவின் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது நம் ரத்தத்தில் ஊரியதுதான் என்பது புரியும். தைமூர் படையெடுப்பின் போதும் , முஸ்லீம் மன்னர்கள் படை எடுப்பின் போதும் ஒரு இந்திய மன்னன் மற்றொரு மன்னனுக்கு உதவி புரியாமால் பிறகு அவனும் தோற்பதும் வாடிக்கையாக இருந்தது. கடைசியாக வந்த ஆங்கிலேயர்களுக்கும் இந்தியனை பிரித்தாள்வதற்கு நாமே வழி வகுத்து கொடுத்தோம்.
பழைய குறுநில மன்னர்கள் அரசனுக்கு கப்பம் கட்டியும் போர் நேரத்தில் படைகளை கொடுத்தும் உதவினர். சில சமயம் பேரரசரின் எதிரிகளுக்கும் தன்னுடைய சுய லாபத்திற்காக உதவி புரிந்து கவிழ்த்தனர்.
இப்போதும் குறு நில மன்னர்களாக மாநில கட்சிகள் மற்றும் சிறு சிறு கட்சிகள் தேர்தல் நேரத்தில் தன் சுய லாபத்திற்காக மத்திய அரசிற்கு ஆதரவு அளிப்பதும் அல்லது விளக்கி கொள்வதுமாக உள்ளனர். தேச நலன் என்பது பள்ளி, கல்லூரி பாடங்களிலும் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளிலுமே காண முடிகிறது.
அரசாங்கத்தை ஆள்பவர்களும் குறுகிய கால வோட்டு தந்திரங்களை செய்வதிலேயே காலத்தை கழிப்பதால் நீண்ட கால திட்டங்களை இந்திய பாதுகாப்பிற்காக தீட்டுவதில்லை.
பாகிஸ்தானுடன் போர் வேண்டாம். குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்க பட்டத்தையாவது இந்திய அரசின் தலைமை கண்டிக்கலாமே.
இந்தியா இப்போது வளர்ந்த நாடக உருவெடுத்து உள்ளது . உலக பணக்காரர்களில் இந்தியர்கள் இடம் பிடிக்கின்றனர். உலகத்தின் மிக பெரிய வாங்கும் சக்தி கொண்ட பொருளாதார சந்தையாக இந்தியா மாறியுள்ளது . உலகின் எந்த மூலையிலும் தயாராகும் பொருட்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர அந்த நாட்டின் நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். வெளி நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் தங்கள் சிறந்த அறிவின் காரணமாகவே பெரிய பொறுப்புகளில் உள்ளனர். இந்தியர்களை அறிவு ஜீவிகளாக உலகம் பார்ப்பதும் இப்போதுதான்.
ஆனால் இந்தியாவை ஆளும் தலைவர்களின் மன நிலை தான் இன்னும் ஏழ்மை மற்றும் கோழை நிலையிலேயே உள்ளது. அவர்கள் இந்தியா என்கிற வளர்ந்த நாட்டின் தலைவர்களை போல நடந்து கொள்வதும், சிந்திப்பதும் இல்லை.
வெளியுறவு கொள்கை என்பது நம் நாட்டை சேர்ந்ததாக இல்லாமல் பிற நாடுகளின் கொள்கைகளை சார்ந்தே உள்ளது. 26/11 தாக்குதலிற்கு பிறகு போர் மேகம் சூழ்ந்த பிறகு அது அமெரிக்காவின் அல்கொய்தாவிற்கு எதிரான போரை பாதிக்கும் என்று போரை நிறுத்தியது . இப்போது மன்மோகன் சர்தாரியை சந்தித்ததும் அமெரிக்காவின் நிர்பந்தத்தினாலேயே .
இலங்கைக்கு சீனா உதவி செய்வதாலேயே , இந்தியாவும் அதற்கு உதவுகிறது என்பது வடிகட்டின முட்டாள் தனமாகவே உள்ளது . இலகையை அடக்க விடுதலை புலிகளை இந்தியா ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி இருக்க வேண்டும். எப்படி அமெரிக்கா சீனாவிற்கு செக் வைக்க இந்தியாவையும் , இந்தியாவிற்கு செக் வைக்க பாகிஸ்தானையும் பயன் படுத்துகிறதோ , அப்படிதான் இந்தியாவும் செய்திருக்க வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடாமல் இருக்க செய்யும் தகிடு தத்தங்களில் ஒரு சிறு பகுதியை வெளியுறவு கொள்கை வகுப்பதில் நம் ஆட்சியாளர்கள் செய்தாலே இந்தியா தன் பிராந்தியத்தில் ஒரு வல்லமை உள்ள ஒரு நாடக இருக்க முடியும்.
இந்தியாவை சுற்றி சக்கர வியுகம் வகுத்து கொண்டு இருக்கும் சீனாவை எப்படி கையாள போகிறது இந்தியா. எல்லா நாடுகளும் தங்கள் மக்களுக்கு வெளி நாட்டில் நடக்கும் கொடுமைகளை மிக தீவீர மாக எடுத்து கொள்கிறது. ஆனால் இந்தியாவோ இன்னமும் மௌனம் காக்கிறது.
அஹிம்சை வழியில் நடந்து சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி தனி மனிதனாக தான் அதை செய்தார் . ஆனால் ஒரு நாடு அஹிம்சை நாடாக (அதுவும் இப்போதைய சூழலில்) இருக்கவே முடியாது.
இந்தியர்களும் கோபப்படுவார்கள் என்பது உலகிற்கு ( குறைந்த பட்சம் ஆஸ்திரேலியாவிற்காவாவது ) தெரியப்படுத்துவது அவசியம். இந்தியாவின் வெளியுறவு கொள்கை ஒரு வளர்ந்த நாட்டின் வெளியுறவு கொள்கையை போலவே இருக்க வேண்டும் .
இல்லாவிட்டால் ஒரு கோழை நாட்டின் குடிமக்கள் என்பதை எண்ணி வெட்கப்படுவதை தவிர வேறு வழி இல்லை நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு .
Labels:naattu nadappu
வீரமும் விவேகமும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தங்களின் கட்டுரை நிச்சயம் பாராட்டபட வேண்டியது அல்ல! கொண்டாடபட வேண்டியது.ஒவ்வொரு இந்தியணின் இதயத்துள் பொங்கி எழும் உணர்வுகளை நீங்கள் வார்த்தக்யாக்கி வரிகளாக்கியுள்ளீர்கள்!ஆனால் அதிகாரவர்க்கம் என்கிற அரைவேக்காட்டு கூட்டம் மக்களின் உணர்வுகளை என்று மதித்துள்ளது?.......பாவம் வெளிநாடுகளில் அடிபடுவது எண்ணவோ அப்பாவி இந்திய,தமிழ் வம்சாவளியிணர் தானே!......இந்தியாவின் ஆளும் வர்க்கத்திணரின் வாரிசுகளை,தெருவில் விட்டு நாயை அடிப்பதுபோல் ஆஸ்திரேலியர்கள்,சிங்களவர்கள்,பாகிஸ்தானியர்கள் அடித்திருந்தால் கொஞ்சமாவது இவர்களுக்கு சூடுசொரணை இருந்திருக்கும்.
இந்தியாவை சுற்றி அத்தணை நாடுகளும் எகத்தாளமிடதொடங்கிவிட்டண.இன்னும் கொஞ்ச நாளில்,பூடானும்,மாலத்தீவும் கூட இந்தியாவை மிரட்ட தொடங்கிவிடும்.
சூடு சொரணையற்றவர்கள்களை ஆட்சியில் அமர்த்திய நாமே முதல் குற்றவாளிகள்.ஆள்பவர்களை சொல்லி என்ன புண்ணியம்.
தங்கள் வருகைக்கு நன்றி !!
நாம் நம்முடைய ஆற்றாமையை இப்படி கொட்டி தீர்ப்பதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை
Post a Comment