Monday, July 20, 2009

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!



இப்ப செய்தித்தாளை எடுத்தால் குறைந்தது ஒரு செய்தியாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பிரகஸ்பதிகளை பற்றி வந்து விடுகிறது. லஞ்சம் என்பது நம் கலாசாரத்துடன் ஊறிய ஒன்று. இதைப் போய் பொறி வைக்கிறேன் பிடிக்கிறேன் என்று கிளம்பினால் அப்புறம் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கும் நம் அரசு ஊழியர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் .

ஒருமுறை என் நண்பர் ஒருவரின் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிய போது தரகர் ஒரு ஜாதகத்தை கொடுத்தார் கூடவே இவர் வணிக வரி துறையில் வேலை செய்கிறார் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் என்றார். அவருக்குத்தான் அந்த பெண்ணை கட்டி கொடுத்தார்கள். ஒருவேளை அந்த மாப்பிள்ளை நேர்மையாக இருந்திருப்பாரேயானால் பெண் கிடைத்திருக்குமா ? கிடைத்திருக்கும் என்ன கொஞ்சம் நாள் ஆகும். ஏனென்றால் அவர்தான் பிழைக்க தெரியாத ஆள் ஆயிற்றே !

சில வருடங்களுக்கு முன்பு நான் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய ஒரு தனியார் நிறுவனத்திற்காக மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரியை சந்தித்த போது , எங்கள் நிறுவனத்தின் பொருளை வாங்க பத்து சதவித கமிஷன் கேட்டு "வேண்டுமென்றால் அந்த தொகையை உங்கள் விலையில் கூட்டியே கொடுங்கள் கவர்மென்ட் சொத்து புள்ள இல்லாத சொத்துதானே" என்றார். ஆஹா என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு. எனக்கு ஒரு புது மொழியை சொல்லிகொடுத்த திலகம் அவர்.

அனால் அவரைப்போல் பெருந்தன்மையாய் தமிழக அரசின் ஊழியர் இருக்க வில்லை . டெண்டரில் மிக குறைவாக விலை கொடுத்து பெற்ற ஆர்டர்ருக்கான
பேமென்டை லஞ்சம் கொடுத்தால்தான் தருவேன் என்று தீபாவளிக்கு மோதிரம் கேட்டு முறுக்கிக் கொள்ளும் புது மாப்பிள்ளையாய் அடம் பிடித்தார் . அப்புறம் வேறு வழி?...கொடுத்தோம். பெற்றோம்.

இதை தவிர ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின்
பொஞ்சாதி ,புள்ளைகள் பேரில் இருக்கும் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் செய்து தர சொல்லும் குணசாலிகள் ஒருபுறம் .

அந்த கால கட்டத்தில் எனக்கு அரசு ஊழியர்கள் என்றாலே கம்பெனிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்வி செல்லும் எச்சகல சிங்கங்களாகத்தான் தோன்றும் . (எச்சகல நாய் என்றால் அவர்களுக்கு கோபம் வந்து விடும் அதனால் தான் சிங்கம்) . இப்போது அரசு ஊழியர்களுடனான தொடர்பு அற்று போனாலும் நிகழ்வு மறந்து விட வில்லை.

இப்போது அரசாங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகாரிகள் முதல்கொண்டு , பியுன்கள் வரை பிடித்து கொண்டிருப்பதாக காட்டினாலும் . இது பெருங்கடலின் ஒரு துளியில் நூற்றில் ஒன்றுதான். லஞ்ச ஒழுப்பு துறையின் மூலமாக லஞ்சத்தை நிச்சயம் ஒழித்து விட முடியாது. இதன் மூலம் லஞ்சம் வாங்கும் முறை தான் மாறுமே ஒழிய , லஞ்சம் வாங்குவது குறையாது. புரையோடி போன புண்ணுக்கு வெளி மருந்து சரிவராது. புண்ணின் மூலத்தை கண்டு அழிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் மனநிலையே அதன் மூலம். அரசாங்கம் லஞ்சத்திற்கு எதிரார ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை எல்லா ஊடக மூலமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் சிறுவர்களிடம் தங்கள் தாய் தகப்பனிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியை வாங்க செய்ய வேண்டும் . நேர்மையாய் வேலை செய்யும் ஊழியருக்கு சிறந்த அரசு ஊழியர் என்கிற பட்டத்தை தர வேண்டும். அதனை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். லஞ்சத்திற்கு எதிரான விளம்பரத்தில் லஞ்சம் வாங்குபவர்களை சமுதாயம் வெறுப்பதாக காட்ட வேண்டும் . லஞ்சம் வாங்காதவர்களை கதாநாயகர்களாக மக்கள் அனைவரும் அவர்களை விரும்புவதாக காட்ட வேண்டும். கூடுமானால் அதற்கு என்று ஒரு பிரபல நடிகரையோ ,அல்லது முக்கிய பிரமுகரையோ (நிச்சயம் அரசியல்வாதிகளை கூடாது) பயன் படுத்தாலாம்.

ஒரு சாதாரண பாத்திரம் வளக்கும் பவுடருக்கு விளம்பரம் செய்து மக்கள் மன நிலையை மற்ற முடியும் என்றால் . இதில் முடியாதா ?

ஒரு முக்கிய விஷயம்:
என்னை போன்ற குட்டாளிக்கே இப்படி எல்லாம் யோசனை தோன்றும் போது தாங்கள் கை கழுவுவதை , கால் கழுவுவதை கூட விளம்பரம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன ? தெரியும் ஆனால் ஏன் நிறைவேற்ற மாட்டேன் என்கிறார்கள் .

தேவுடா ..இதை நான் எழுதிதான் தெரிய வேண்டுமா என்ன ?.


லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!

......ஹி ..ஹி . ஹி ஹு ஹு ஹு . வர்ட்டா .

1 comment:

cheena (சீனா) said...

ஏன் யாருமே மறுமொழி போடல

லஞ்சம் கொடுக்கணுமா

லஞ்சம் வாங்குபவர்கள் கொடுப்பவர்களைக் குறை கூறுகிறார்கள் -- கொடுப்பவர்களோ அவர்களைக் குறை கூறுகிறார்கள்

என்ன செய்வது

ஒரு நாள் மாறும் - காத்திருப்போம்

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா