Wednesday, July 8, 2009

முட்டாள் தனமான சட்டங்கள் -முடங்கும் சமுதாயம் !

வெட்டு ஒன்னு
துண்டு ரெண்டு

தனி மனித உரிமை என்னும் மாய வலையில் சிக்கி கொள்வது சுலபம் வெளி வருவதுதான் கடினம். அது தான் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டு
உள்ளது. தனி மனித உரிமை பற்றி பேசினால் பேசுபவர் முற்போக்கான எண்ணம் கொண்டவர் எதிர்த்து பேசுபவர்கள் பழமைவாதிகள் இது தான் இன்றைய நிலை.

தனி மனித உரிமையை பற்றி பேசுவது தவறான விஷயம் இல்லை என்றாலும் அது எங்கு எந்த சமயத்தில் பேசப்படுகின்றது என்பதில் தான் மிகப்பெரிய சர்ச்சை அல்லது தவறு இருப்பதாக நான் கருதுகின்றேன்.

விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பதாக திருமணத்தை நிறுத்திய போலீசார் பெண்ணை அவள் காதலனிற்கு திருமணம் செய்து வைத்தனர் . மண்டபத்தில் இருந்த மாப்பிள்ளை வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ( பெற்று வளர்த்து படிக்க வைத்த பெற்றோருக்கு அவளின் திருமணத்தை நடத்த உரிமை இல்லை. சட்டமும் , காவல் துறையும் தான் அந்த பெண்ணின் காலம் முழுவதும் அவர்களுக்கு உண்டான நல்லதுக்கும்,கெட்டதுக்கும் வந்து நிற்க போகிறது. இது ஒரு புறம் என்றால் அந்த மாப்பிள்ளை மன நிலை எப்படி இருந்து இருக்கும் . ஒரு வேலை அவனுக்கு வேறு பெண் அந்த நேரத்தில் கிடைக்காமல் போயிருந்தால் அவன் படும் மன வேதனைக்கு சட்டம் என்ன பதில் சொல்ல போகிறது. ஆண் என்றாலே அவன் எந்த அவமானத்தையும் தாங்கி கொண்டுதான் ஆகா வேண்டுமா ?)

ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு சென்னை தி. நகரில் டுஷன் சென்டர் வைத்து நடத்தி வந்த ஒருவர் தன் மனைவியை அவளின் கள்ள காதலனுடன் படுக்கை அறையில் பார்த்து விட்டு மனைவியையும், அவனையும் காவல் நிலையம் கொண்டு செல்ல அங்கு அந்த பெண் எனக்கு இவரோடு வாழ பிடிக்கவில்லை என்று கூறி எழுதி கொடுத்து விடுகிறாள் . அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அவள் தன் கள்ள காதலனோடு சென்று விடுகிறாள். இது தான் தனி மனித உரிமை .

ரோட்டில் ஒருவர் காணமல் போன தன் மனைவியை தன் மாமனார், மாமியாரோடு சேர்ந்து தேடி பெங்களூரில் அவளின் தோழி வீட்டில் கண்டு பிடித்து கூட்டிக்கொண்டு வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவளை அவளின் லெசிபியன் தோழி இரண்டே நாளில் திரும்பவும் வந்து கூட்டி செல்கிறாள் . போலீசில் புகார் கொடுத்தால் இது அவளின் தனிப்பட்ட விஷயம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுகின்றனர். இதையே ஒரு ஆண் செய்தால் அது கடுமையான குற்றம் . என்ன சட்டம் டா இது.

நீலாங்கரையில் ஒருவன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயல்கிறான் . அவனிடம் விசாரித்ததில் . என் மனைவி என் மீது பொய்யான புகார் கொடுத்து இருக்கிறாள். அதை வைத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து என்னை கைது செய்ய போவதாக கூறுகிறார்கள் என்று கூறியவர் நான் கூலி வேலை செய்பவன் சாப்பாட்டுக்கே நாங்கள் கஷ்டப்படும் போது அவளிடம் விலை உயந்த செல்போன் எப்படி வந்தது என்று கேட்டு சண்டை போட்டதுக்கு என் மீது வரதட்சனை புகார் கொடுத்துள்ளாள் . என்று கூறுகிறான் .

இது இப்படி இருக்க சமீபத்தில்
என்னுடைய அண்ணன் வீட்டிற்கு நெய்வேலி பக்கத்தில் உள்ள ஊருக்கு போன போது அவர்களுக்கு பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் எப்போதும் சண்டை நடப்பதை பார்த்து ஏன் அவர்கள் வீட்டில் அப்படி சண்டை நடக்கிறது என்று கேட்ட போது , அந்த வீட்டின் ஆளிற்கு ரெண்டு மனைவிகளாம். அக்கா தங்கையையே கட்டிகொண்டானாம் . முதல் மனைவி பிரசவத்திற்கு சென்ற போது அவளின் தங்கை யோடு ஓடி போய் விட்டானாம் . இப்போது அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் முதல் மனைவிக்கு எப்போதும் அடி உதை தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது தனி மனித உரிமை எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு போய் சேராமல், அது லிப்ஸ் டிக்கிற்கும், பாப் கட்டிங்கிற்கும் இடையில் மாட்டி கொண்டதாக தான் தெரிகிறது.

இந்த பெண்ணுரிமை அல்லது தனி மனித உரிமை என்ற கருத்து குடும்ப அமைப்பே இல்லாத வெளி நாடுகளின் தாக்கத்தினால் உண்டானதாக தான் தெரிகிறது. வெளி நாட்டில் ஒரே கணவனுடன் வாழும் பெண் மணிகள் மிக மிக குறைவு. அவர்களுக்கு குழந்தையின் வாழ்க்கை ஒரு பொருட்டே இல்லை . முதல் கணவனிடம் ஒரு பிள்ளை , இரண்டாவது கணவனிடம் ஒரு பிள்ளை என பெண்ணும் , முதல் மனைவியின் மூலமாக ஒரு பிள்ளை, மூன்றாவது மனைவியின் மூலமாக ஒரு பிள்ளை என் ஆணும் வாழலாம்.

அவர்கள் தான் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என்று ஒரு நாள் கொண்டாடிவிட்டு போய்விடுவர். அவர்கள் நாட்டில் வேண்டுமானால் தனி மனித உரிமை பொருத்தமாக இருந்து இருக்காலாம். நம் நாட்டில் அப்படி இல்லை இங்கு பெண்கள் திருமண வாழ்க்கையை புனிதமாக பார்க்கின்றனர். பிள்ளைகளை செல்வமாக பார்க்கின்றனர். தன் பிள்ளைக்காக எத்தனையோ விஷயத்தை தியாகம் செய்கின்றனர் . இங்கு குடும்ப உறவு என்பது ஒரு அழுத்தமான பிணைப்பாக உள்ளது. பிள்ளைகளுக்காக அவ்வளவு செய்கிறவர்கள் அவர்களிடம் இருந்து கொஞ்சம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும். ஒரு சாதாரண விளையாட்டிற்கே பல விதிகள் இருக்கும் போது சமுதாயத்திற்கு ஏன் இருக்க கூடாது

ஒரு முறை பத்திரிக்கையாளர் மதனிடம் வெளிநாட்டில் பெண்கள் கல்யாணம் ஆனால் கூட தங்கள் உடம்பை கச்சிதமாக வைத்து கொள்கிறார்களே ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகிவிட்டால் பெண்கள் குண்டாகி விடுகிறார்களே என்று கேட்ட போது அவர் வெளி நாட்டு பெண்களுக்கு எப்போது விகாரத்து ஆகும் என்று தெரியாதாகையால் அவர்கள் அடுத்த கல்யாணத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டியுள்ளது என கூறி இருந்தார்.

வெளி நாட்டு நாடோடிகளை பார்த்து நாம் நம் சட்டங்களை மாற்றினால் நம் நாட்டின் குடும்ப அமைப்பை நாமே சிதைப்பதை போன்று இருக்கும்.

தனி மனித உரிமையின் உச்ச கட்டம் இனி ஆணும், ஆணும் , பெண்ணும், பெண்ணும், டும், டும், டும்.

6 comments:

Anonymous said...

loosappa nee?
sorry ...pls read!

Law is correct. But people do not follow. You didnt mention any lawpoint to say it is incorrect. There is a law to punish severely for bribe. How many times you have seen the law being used?

I will explain each of your blame! (numbers are relevant para)
3. What will you do as a Police in this case? Arrest the girl aa? whats the point in getting her married with someone she doesnt like. After marriage if she elopes with her lover, it will be still bad. Because of our culture, police hesitate to be against girls

4. that wife with illicit relationship is a mistake. do you mean to say, the wife/husband whoever having illegal affair should be executed? how will you prove it? Such law doesnt exist anywhere US or UK

5. Who said when males do samething, it is a mistake? how do you know? Infact, there are more male-male cases than lesbian.

6. Yes, some women are misusing the law

7. two-wife problem doesnt exist in western countries because they are faithful to the current partner they have. they will change wife/husband often but they will not have too many. This cannot be controlled by law.

in short, tell the rule that you want to be in place. when each one gives respect to their partner (especially husband to wife) problem will be solved.

Barari said...

poonaikku mani kattivitteerkal.athu sari pinnoottamitta satta vallunar een olinthu kondu pinnoottamida vendum.meyira maattaiyum meya vida maattaanga o------maattaiyum o--------vida maattaanga.

Anonymous said...

appdi illa Barari - ennoda google account lock aayiduchi. work aagala! neengalachum ennoda question ku answer pannunga. what rule you want to change? in what way?

payapulla said...

Dear Mr.anoni,

I am telling in normal condition parents have rights to choose a life partner for their children. suppose if they force a girl to marry a elderly person for money or any other reason she can resist. As far as i am concerned most of the love marriages are failed compared to arranged marriages because in love Marriage there is no commitments.

If a married man has a illigal contact with another woman and he forego his family , he will be punished under law , but when it comes to woman they are not even detered by law.

I am not telling when male have gay partner it is mistake while women has lesibian partner is good I am talking about how a law treat men and women in a same situation. men are treated as illigal, women are not taking into considaration.

I am not aware of western law but i assume that they would be impartial among men and women. Here a girl can make or breake men's life using current law.

I agree with you both should respect each other's feeling at the same time women should know that men are always ahead of women when it comes to thinking.

My beloved anoni should know one thing. In these modern days women have changed. They are more cunning than ever before.They kill their fathers, mothers, husbands for money, sex and power. You could have read these sort of incedents in news papers . Thats why i am emphasising law should not be enacted in favour women merely believing them. There should be provisions which deter them action,if their allegations are proved wrong.

cheena (சீனா) said...

மறு மொழி பூரா ஆங்கிலத்தில் இருக்கு - ஏன்னு தெரில

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா