Tuesday, June 30, 2009

மேல் மாடி காலி அதி சீக்கிரத்தில் !!!

நானும் யோசித்து யோசித்து மண்டை வலித்ததுதான் பாக்கி , உருப்புடியா ஏதாவது தோனனுமே! ம்ம் ஹும். ஒண்ணுத்தையும் காணோம். ஒரு நாலு பதிவு போட்டதுக்கே , காவிரி ஆத்து படுக்கையாய் மண்டை வறண்டு போனதை என்னத்த சொல்ல . எதை பத்தி எழுதலாம்னு நானும் யோசிக்க எதுவுமே எனக்கு திருப்பதி அளிக்காமல் இத்தனை நாளையும் ஓட்டியாச்சி!

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்துக்கு பிறகு இந்திய செய்திகள் எனக்கு முக்கியம் இல்லாமல் போய்விட்டது. பேச்சிவார்த்தையை கோழைத்தனமாக இந்தியா துவக்கியமைக்கு , மேற்கு வங்கம் மாவோயிஸ்டுகள் பிரச்சனை , ஆஸ்திரேலேயாவில் இந்தியமாணவர்கள் தாக்கப்பட்ட விஷயம் , கிரிக்கெட் போன்ற பல இருந்தாலும் எழுததான் பிடிக்க வில்லை.

சென்ற முறை மாடலிங் பற்றி எழுதியபோது மேலும் பல விஷயங்களை அடுத்த பதிவில் சொல்வதாக ரொம்ப சவுடாலா எழுதி இருந்தேன் . ஆனால் அதற்கு ஒரு மவராசன் கூட பின்னுட்டம் இடாததால் , போவாத ஊருக்கு வழி காட்டாதடா பேராண்டின்னு ஒன்னு விட்ட பாட்டி கனவில் வந்து சொல்ல , விட்டு விட்டேன் .

சமீபத்தில் அரசு பேருந்தில் இருபத்து கிலோமீட்டர் வேகத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற கதையை எழுதலாம் என்றால் அதற்குள் வேறு ஒரு பதிவர் , இதை போன்ற ஒரு அனுபவத்தை தனியார் பேருந்தில் அனுபவித்ததை எழுதி இருந்தார் . அதனால் அதையும் எழுத முடியவில்லை . என்னடா என்னோட நிலமா இப்படி ஆயிடுச்சே
அப்படின்னு திரும்பவும் யோசிக்க ஆரம்பித்து உள்ளேன் . ம் எதை பத்தி எழுதலாம் (மண்டையை பிச்சி கொண்டு)

நீங்கதான் சொல்லுங்களேன்.


மொத்ததில விஷயமே இல்லாத ஒரு விஷயத்தை நானும் எழுதினுகீரன் . நீங்களும் அத்த படிச்சிகினுகீரிங்க .
எனிக்கிதான் வேல இல்லினா வுங்க்ளுக்க்மா ?
கோச்சிக்காதிங்க சும்மா தான்


அப்பாடா!!! ஒரு வழியாய் பதிவு போட ஒரு மேட்டர் ரெடி!

Saturday, June 6, 2009

ஐ .நா. சபைக்கு கண்ணீர் அஞ்சலி.


கண்ணீர் அஞ்சலி

ஐக்கியம் இல்லாத நாடுகளின் சபைக்கு !

கண்களிருந்தும் குருடராய் இருக்கும்
உறுப்பு நாடுகளுக்கு!

செயல் படாத கைப்பாவை தலைவருக்கு !

உயிரோடு இருப்பதாய் நினைத்து செத்து கொண்டிருக்கும் இந்த நிலைக்காக !

கண்ணீர் அஞ்சலி!!!

Wednesday, June 3, 2009

நீங்கள் விளம்பர மாடல் ஆகப்போரீங்களா ?



விளம்பரத்தில் வரும் அழகழகான ஆண் ,பெண் ,குழந்தை நட்சத்திரங்களை பார்க்கும் போது நாமும் அதில் நடிக்கலாமே என்கிற எண்ணம் உங்களுக்கு வருகிறதா? அப்ப ஹை ச லக்கா லக லக இப்பவே நீங்கள் மாடல் தான் .
என்ன கொஞ்சம் சிரத்தை எடுத்து கொள்ள வேண்டிஇருக்கும் .

அதனால் என்ன எடுத்துட்டா போச்சி !
என கூறுகிறீர்களா !

முதலில் நீங்கள் என்ன வாக போகிறீர்கள் என்பதை உங்கள் வயதை பொறுத்து முடிவு பண்ணி கொள்ளுங்கள் .

ஆணோ ,பெண்ணோ உடல் நல்ல கட்டில் இருப்பது அவசியம் !
தொப்பை வயிறோடு முன்னணி பாத்திரங்களில் நடிக்க முடியாது.
பெண்களுக்கு வயிறு பிளாட் ஆகா இருப்பது மிக முக்கியம்.
நல்ல தூக்கம் இருந்தால் தான் முகத்தில் கலை இருக்கும். இல்லாவிட்டால் கண்ணுக்கு கிழே கருமை படுவதை தவிர்க்க முடியாது . கண் விழிப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் விட்டமின் இ மாத்திரை போட்டு கொள்வது நல்லது.
டான்ஸ் , யோகா , சண்டை பயிற்சி போன்றவற்றில் நல்ல திறமை இருப்பது கூடுதல் தகுதி வழங்கும் .
மாடலாக வர வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வித ஆயத்தமும் இன்றி இருப்பது தமிழகத்தில்தான் அதிகம் .
மும்பையில் இதை தொழிலாக நினைப்பவர்கள் அதற்கான எல்லா விதமான பயிற்சியும் பெற்று வருகின்றனர் .

மிக முக்கிய விஷயமான போட்டோ மற்றும் அதனை வைத்து சான்ஸ் தேடுவது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஈழ பிரச்சனையும் என் தேசப்பற்றும்

இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு சம்பவம் நடந்தாலோ அல்லது நடப்பதாக கேள்விபட்டாலோ நான் கொதித்து போய்விடுவது சகஜம் . நாள்முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பேன் .

மும்பை குண்டு வெடிப்பு , விமான கடத்தல் ,கார்கில் போர் , பாராளுமன்ற தாக்குதல் , மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற சமயங்களில் பல நாட்களில் இதே நினைப்பாகவே இருந்ததுண்டு . இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் அதனால் நம் நாட்டிற்கு என்ன இழப்பு ஏற்பாட்டாலும் , நம் மீது விழுந்திருக்கும் " கோழை நாடு" என்கிற அவப் பெயரை மாற்றியே ஆக வேண்டும் என் நினைப்பேன்.

நம் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் ஒவ்வொரு முறையும் பூச்சாண்டி காட்டிவிட்டு வழக்கம் போல தங்கள்
"மாமுல் " வாழ்க்கையில் தங்களை அர்ப்பணித்து கொண்டிருப்பர். (சென்ற வருடம் மும்பையில் தீவீர வாதிகள் தாக்குதலுக்கு பிறகு நம் வெளியுறவு துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் எல்லா ஆப்ஷன்களும் பரிசிலனையில் உள்ளன என சொல்லியே காலத்தை ஒட்டினாரே அதுபோல ).

இதே கோபம்தான் எனக்கு இலங்கை பிரச்சினையிலும் ஏற்பட்டது . இந்திய அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என் நினைத்தேன் . ஆனால கடைசிவரை தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல் பட்டு இப்போது ஐ .நா. சபையிலும் இலங்கையை காப்பாற்ற அரும் பாடு பட்டு வருவது எனக்கு மிகவும் அதிக மன உளைச்சலை கொடுக்க ஆரம்பித்தது . அது தவிர வட இந்தியா சானல்களும் தமிழர்களுக்கு எதிராகவே செய்தியை வெளியிட்டு வந்தன .இலங்கை பிரச்சனையில் இந்தியா சக இந்தியனின் உணர்வுகளை மதிக்க வில்லை என்றே கருத ஆரம்பித்து விட்டேன் .


இப்போது இந்தியாவிற்கு எதிரான செய்தியை பார்க்கிறேன் ஆனால் அது ஏன் என் மனதை பாதிக்கவில்லை என்று தெரியவில்லை . ஒரு வேளை என் தேச பற்று இலங்கை பிரச்சனையால் தேய்ந்து விட்டதா ?

நான் இப்போது படித்த,பார்த்த செய்தி :

மும்பை தாக்குதல் தீவீரவாதிகளுக்கு மூளையாக இருந்து செயல் பட்ட
லஸ்கர் தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் முகமது சயீத் என்பவன் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டான் என்பதே .

Tuesday, June 2, 2009

சென்னையில் ஆம்னி பஸ்கள் ஏன் அராஜக பஸ்களாக தோன்றுகின்றன?

சென்னையிலும் மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் இருக்கும் ஆம்னி பஸ்கள் பண்டிகை மற்றும் விழா காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அராஜகம் செய்வதாக தினசரிகளில் படிப்பதுண்டு அதற்கான காரணங்கள்தான் என்ன?

வேறென்ன சொல்ல வழக்கமாக நம் அரசாங்க இயந்திரத்தின் கோளாறான நிர்வாகம்தான் . பொதுவாக எந்த ஒரு முதலாளியும் தன் நிறுவனம் நஷ்டத்தில் இயக்க விரும்புவதில்லை . அரசாங்க நிறுவனங்களில் கூட நிறுவனம் தான் நஷ்டத்தில் இயங்குமே ஒழிய நிறுவன முதலாளிகளான அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ நஷ்டத்தில் இருப்பதில்லை. சரி விஷயத்திற்கு வருவோம் .

எனக்கு தெரிந்து தென்னிந்தியாவில் தமிழகத்தில் தான் வாகனங்களின் மீதான வரி அதிகம் விதிக்கப்படுகிறது . ஒரு சீட்டுக்கு ஆயிரம் ருபாய் என் முப்பத்தாறு சீட்டுக்கு முப்பத்தாறாயிரம் ருபாய் கட்ட வேண்டி யுள்ளது . இதுவே பாண்டியில் ஒரு சீட்டுக்கு ஐநூறு ரூபாயும் , கர்நாடகத்தில் எழுநூற்று ஐம்பது ரூபாயும் வசுலிக்கப்படுகிறது . (இதனால் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இந்தமாநிலங்களில் தனது வண்டிக்கான பதிவை செய்து கொள்கின்றன ) இதை
தவிர டீசல் , வண்டிக்கான செலவு என் பார்த்தால் அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. இதுவும் வண்டியின் எல்லா சீட்டுகளும் நிரம்பினால்தான் இந்த கணக்கு. இதில் அதிகாரியின் வீட்டு கல்யாணத்திற்கு வண்டி , ஆளும் கட்சியின் கூட்டங்களுக்கான வண்டிகள் என இலவச சேவைகள் என்பது தனி கணக்கு .

இதை தவிர நடு ரோட்டில் நிறுத்தி வண்டியை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு தண்டம் என பல வழிகளில் இவர்களுக்கு சோதனை தான் . தனியார் பேருந்து வைத்து இருக்கும் முதலாளிகளின் எண்ணிக்கை குறைவு ( நம் நாட்டில் கூட்டமாக செய்ததால் கொலையும் புனிதம்) தவிர அவர்களிடம் ஒற்றுமை இன்மை ( கட்சி சார்ந்திருக்கும் சில முதலாளிகள் அரசை எதிர்த்து கேட்க வருவதில்லை) போன்ற வற்றால் இந்த தொழில் பலவிதங்களில் நசுக்கப்பட்டு வருகிறது.

இதைபோன்று எந்த விதமான தொந்தரவும் இல்லாத அரசாங்க பேருந்துகள் இந்த முறை தீபாவளி, பொங்கல் விடுமுறை நாட்களில் பேருந்து கட்டணத்தை சாதாரண நாட்களை விட அதிகமா வசுலித்திருப்பது எந்த விததிதில் நியாயம் என்று தான் தெரிய வில்லை.

Monday, June 1, 2009

ராஜபக்சேவிற்கு என் பரிசு !


இந்தியாவிற்கு வர இருக்கின்ற ராஜபக்சேவிற்கு ,
பல்லாயிர
கணக்கான அப்பாவிகளின்
ரத்தம்
குடித்த சாதனையை பாராட்டி என் சிறிய பரிசு.
(இது
அவனுக்கு போதாதுதான் ஆனால் ஊடக மரியாதையை கருதி இத்துடன் நிறுத்த வேண்டி உள்ளது .)

இதை
படிக்கும் நீங்களும் உங்கள் மனதிற்கு பொருத்தமானதாக தோன்றும் பரிசினை அளித்து வலைமுழுதும் பரப்பலாம் .

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா