Saturday, July 25, 2009
முனியம்மா
முனியம்மா வேலைக்கு சென்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகி விட்டது . அதுவும் இல்லாமல் இன்று இடியாய் ஒரு செய்தி அவள் மண்டையை தாக்கியது . அது அவளுக்கு எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிவதாக மருத்துவமனையில் கூறியதுதான்.
ஆட்டோ டிரைவரான அவளுடைய கணவன் மாரியப்பன் கடந்த ஆண்டு ஒரு லாரி விபத்தில் பலியாக அது முதல் தனி மரமாய் இருக்க வேண்டிய சுழல் .இந்த சூழலில்தான் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாய் காசிவிசுவநாதன் வீட்டிற்கு செல்லவேண்டி இருந்தது .
காசி விசுவநாதன் அந்த ஊரில் பணக்காரன் மட்டும் அல்ல அரசியல் செல்வாக்கும் கொண்டிருந்தான். வேலைக்கு சென்ற கொஞ்ச நாளிலே காசி விசுவநாதனின் எண்ணம் நன்றாக தெரிய ஆரம்பித்தது . மனைவி இல்லாத நேரங்களில் மிகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான் . ஒரு நாள் வெளிப்படையாய் சொல்லியே விட்டான் இங்க பார் நீ இங்க தொடர்ந்து வேல பாக்கனும்னா , அப்படி இப்படி இருந்து தான் ஆகணும் என்கிட்டே வேலை செய்யற எல்லாத்துக்கும் அதான். நீ சின்ன பொண்ணா இருக்கியேன்னு பாக்கறேன் .நீயே விருப்பப்பட்டு வரணும் என்ன புரியிதா என்று கூறினான் .
அடுத்த நாள் முனியம்மா வேலைக்கு செல்ல வில்லை . ஆனால் வீடு தேடி ஆள் வந்தது அம்மா கூப்பிடுகிறார்கள் என்று . இதைப்போல் முனியம்மா நிற்பதும் பிறகு ஆள் வந்து கூப்பிடுவதும் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை அவன் அவளை பலாத்காரமாய் கற்பழிக்க முயற்சிக்கவே அன்று ஓடி வந்தவள் இனி அங்கு வேலைக்கு செல்லவே கூடாது என நினைத்தாள் .
இதற்கு இடையில் தான் திடீரென உடம்பு ரொம்ப அசதியாகவும் , ஜொரமும் வரவே ஜி ஹெச் சென்று பார்த்த போது அங்கு ரத்தம் பரிசோதித்து பார்த்தவர்கள் இன்று முடிவை சொன்னார்கள் . முதலில் டாக்டர் நீ என்ன செய்கிறாய் , உன் கணவன் என்ன செய்கிறான் என கேட்டு விட்டு அவன் இறந்து விட்டான் என்று சொன்னதும் முனியம்மாவை ஒரு வித அற்பமாய் பார்த்து விட்டு,
ம்மா உனக்கு எய்ட்ஸ் நோயோட அறிகுறி தெரியுது நீ இனிமே ரொம்ப பத்திர மாக நடந்து கொள்ள வேண்டும் . கொஞ்சம் கட்டு பாடொடு வாழ்ந்தால் .... என சொல்லிக்கொண்டு போனார் ஆனால் எதுவும் அவளின் காதில் விழவில்லை . இடியே விழுந்த பின் விளக்கம் கேட்டு என்ன பயன் .
வீட்டுக்கு வந்த பின்பும் முனியம்மாவின் மனது ஒரு சூனியாமாகவே இருந்தது . தன்னுடைய கணவன் மாரியின் மீது தான் ஆத்திரம் வந்தது . தண்ணி அடிப்பதும் பல பெண்களோடு சகவாசம் வைத்திருப்பதும் தான் அவனுடைய அன்றாட வாழ்க்கையின் நெறிமுறையாக இருந்தது. அவன் இருந்த போதுதான் சுகப்பட வில்லை என்றால் செத்தும் கெடுத்து விட்டானே என்கிற கோபம் வந்தது . இந்த கோபம் பொதுப்படையாய் ஆண்கள் மீதே ஏற்பட்டது . இப்படி தன் வாழ்க்கை வீணாகி விட்டதே என நினைத்து படுத்து கொண்டிருந்தாள் .
அப்போது வீட்டு வாசலின் வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தாள். காசி விசுவநாதன் வீட்டில் இருந்து ஆள் வந்திருந்தான் . அம்மா கூப்பிட்டார்கள் என்று சொன்னான்.
இதுவரை கொண்டிருந்த ஆத்திரங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தவளாய் ஒரு முடிவோடுகிளம்பினாள் . அதில் ஒரு பழி வாங்கும் வேகம் இருந்தது.
...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த கதை சுத்த அபத்தம்.
வித்தியாசமாக சிந்திக்கிறேன் என்றுவிட்டு இது போன்ற அபத்தங்களை தயவு செய்து எழுத வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான கருத்து ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கையில்.
தங்கள் கருத்திற்கு நன்றி
நல்லாருக்கு - கத
முடிவு நச்சுன்னு இருக்கு
வாழக தொடர்க நல்வாழ்த்துகள்
Post a Comment