Friday, July 24, 2009

வாசனை - சிறுகதை


நுகர்வோர் கோர்ட்டின் வாயிலில் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தார் பஞ்சாமிர்தம். இன்று தான் தீர்ப்பு . தனக்கு எப்படியும் சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்கிற நம்பிக்கை அவரின் முகத்தில் தெரிந்தது .ஒன்றரை வருடமாக நடக்கும் கேஸ் இது. கேசிற்கான காரணம் இதான் .தான் செய்து கொண்ட மூக்கு ஆபரேஷனுக்கு பிறகு பஞ்சமிர்த்த்திற்கு வாசனைகள் எதுவும் நுகர முடிவதில்லை

கடந்த இரண்டு வருடங்களாக மூக்கடைப்பு ,மூக்கடைப்பு என கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் தன் நண்பர் வேதாசலம் மூலமாக கேள்விப்பட்டு சிகிச்சைக்காக குமரன் நர்சிங் ஹோமிங்கிற்கு வந்தார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மூக்கில் ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்று சொன்னதால் பஞ்சாமிர்தமும் ஆபரேஷன் செய்து கொண்டார் . ஆபரேஷன் செய்த சில நாட்களில் அவரருக்கு வாசனையை அறியும் சக்தி இழந்து போனதை உணர ஆரம்பித்தார் .

சாப்பாட்டின் வாசனை , ஊது பத்தி , சோப்பு, சென்ட் எதுவும் மூக்கில் எந்த சலனத்தையும் ஏற்படுத்த வில்லை. ஆபரேஷன் செய்த டாக்டர்ரை சந்தித்தபோது இதற்கும் ஆபரேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய டாக்டர் இதில் என் தவறு எதுவும் இல்லை என் கைவிரித்து விடவே பஞ்சாமிர்தம் மூர்க்கமானார் .

இந்த பிரச்சனையை தான் இப்படியே விடப்போவதில்லை என் கூறினார். முதலில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் . அதற்கு பதில் அனுப்பிய நர்சிங் ஹோம் நிர்வாகம் அவரின் குற்ற சாட்டுகளை மறுத்து இருந்தது . அதன் தொடர்ச்சியாகத்தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் பஞ்சாமிர்தம். நீதி மன்றத்தில் மருத்துவருக்கு எதிராக எல்லா குற்ற சாட்டுகளையும் நிரூபித்து மிக திறமையாக வாதாடினார். வாதி பிரதிவாதிகளின்
வாதங்களை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்தி வைத்து இருந்தது.

மணி சரியாக பத்தரைக்கு வந்த நீதிபதி புதிய கேசுகளை விசாரித்து ஒத்தி வைத்து விட்டு மதியம் பஞ்சமிர்தத்தின் கேசில் தீர்ப்பு கூறியவர் வாதிக்கு ஏற்பட்ட குறைபாட்டிற்கு மருத்துவரின் தவறான ஆபரேஷன்தான் காரணம் என்று கூறி மருத்துவ நிர்வாகம் ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடாகவும் தவிர கேசின் செலவாக இரண்டாயிரமும் தர உத்தரவிட்டது.

தன்னுடைய வாத திறமையால் பெற்ற வெற்றியை நினைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர் வீட்டருகே இருப்பாவர்கள் எல்லாம் கூட்டமாக கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த பஞ்சமிர்தத்தின் நண்பர் ஒருவரிடம் பஞ்சாமிர்தம் விவரத்தை கேட்க . என்ன உனக்கு தெரியலையா ? இப்ப இங்கு பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக் சுடுகாட்டில் இருந்து கொஞ்சம் நாளாக பிணங்களை எரிக்கும் போது வாடை வருகிறது வீட்டில் யாரும் இருக்க முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் என்று கூறியவர் பஞ்சாமிர்தத்தையும் கலந்து கொள்ள சொன்னார் . ஆனால் அதில் கலந்து கொள்ளாமல் சென்ற பஞ்சமிர்தாம் தன் மூக்கால் வாசனையை நுகர முடியாததிற்காக முதன் முறையாக சந்தோஷப்பட்டார் .

6 comments:

VISA said...

hei good story

little boy said...

நன்றி விசா

ஜெஸ்வந்தி said...

தின்மையிலும் ஒரு நன்மை உண்டு என்று சொல்லுங்கோ.

little boy said...

வாங்க ஜெஸ்வந்தி. தங்கள் கருத்துக்கு நன்றி.

cheena (சீனா) said...

இது கத

நல்லா இருக்கு - முடிவு ஏ கிளாஸ்

நல்வாழ்த்துகள்

little boy said...

அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா