Thursday, July 23, 2009
நெகிழிச்சியுட்டிய ஐந்நூறு ரூபாய் !!!
பணம் கொண்ட வாழ்க்கையே ஒரு பரிசு !!!
பணம் கொண்டு பல பரிசுகளை வாங்க முடியும் !
ஆனால்
பரிசாக கொடுப்பதற்கு பணம் ஒரு பொருளல்ல .
பணத்தை பரிசாக கொடுப்பதற்கு அது ஒரு உயிரற்ற பொருளுமல்ல .
பணம் ஒரு அதிகார சக்தி.
அதனால் ஒரு இடத்தில் ஓய்ந்து
இருக்க முடிவதில்லை .
இப்படியான எண்ணங்கள்தான் என் மனதில் நேற்று இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தன .
நேற்று இரவு நான் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பொருட்கள் வாங்கி விட்டு பில்லை கொடுப்பதற்காக பணத்தை எடுத்த போது அதில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டில் காலி இடத்தில் "இது அம்மா கொடுத்த பரிசு . கல்யாணத்திற்கு கொடுத்தது" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்து.
எனக்கு அதை பார்த்த போது ஒருவேளை அதில் ஏதேனும் போன் நம்பர் எழுதி இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தால் போன் பண்ணி சொல்லலாம் என் நினைத்தேன் . ஆனால் இல்லை . உண்மையிலேய அந்த பணத்தை கடையில் கொடுக்க எனக்கு மனத்திற்கு கஷ்டமாக இருந்து.
கல்யாணத்திற்கு பரிசாக கொடுக்க எத்தனையோ பொருட்கள் இருக்க அம்மா பரிசாக பணத்தை எதற்கு கொடுத்து இருந்திருப்பார்கள் . தன் மகன் அல்லது மகளுக்கு இது தேவைக்கு உதவும் என்று தானே. அந்த மகன் அல்ல மகளோ இந்த பணத்தை செலவு செய்ய கூடாது என்று தானே அதில் இந்த வார்த்தையை எழுதி வைத்திருப்பாள் . ஆனால் முடிந்தாதா?
பணத்தை அப்படியே வைத்து இருக்க ஒரு வலிமை வேண்டும் .
பண வலிமைதான் அது.
பணம் இருந்தால் பணம் இருக்கும்.
பணம் இல்லா விட்டால் பணம் இருக்காது.
இது புரிந்து புரியாத சுழ்ச்சிமம் .
வாழ்க்கையில் பர பர வென நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் சில சமயங்களில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை நெகிழத்தான் வைக்கின்றன .
.....
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல டச்சிங்கா இருக்குங்க!
தல சொன்னா சரிதான்
சிலசமயம் இந்தப் பணத்தில் ஏதாவது அம்மா பற்றி மறக்கமுடியாத பொருள் வாங்கி அவர்
பத்திரப் படுத்தியிருக்கலாம்.
எனினும் சம்பவம் அம்மா பற்றிய நினைப்பையும்;சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது உண்மையே!
தங்கள் வருகைக்கு நன்றி
நெஞ்சு நெகிழ்கிறது - நல்ல கதை
நல்வாழ்த்துக்ள்
அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .
உங்களின் இந்த பதிவு தமிழ் மலர் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
vist தமிழ்மலர்
தங்கள் மின் நாளிதழிற்கு நன்றி
Post a Comment