Tuesday, July 14, 2009
பாடாவதியான மாயாவதியும் - முகமுடி கிழிக்கும் கம்யுனிஸ்டுகளும்
அதிகாரம் கைக்கு வந்தால் ஆணவம் தலைக்கு ஏறிவிடுவது சகஜம்தான் என்றாலும் மாயாவதிக்கு கொஞ்சம் அதிகமாகவே ஏறிவிட்டதாக தெரிகிறது. எந்த மாயாவதி என்று கேட்பவர்களுக்கு உ.பி. முதல்வர் என கூறினால் புரியும்.
நம் ஜெயலலிதாகூட முதல் முறை ஆட்சிக்கு வந்த போது இப்படி தான் எங்கும் ,எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைத்து தொட்டதுக்கெல்லாம் அவர் பெயர் வைத்தார் . நல்லவேளை பிறக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் தன் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. எங்கு பார்த்தாலும் அவர் கட் அவுட்கள் முளைத்திருக்கும். அவர் வீட்டில் கிளம்ப ஆரம்பிக்கும் போதே சென்னையின் எல்லா ரோடுகளிலும் ட்ராபிக் நிறுத்தப்படும் . அவர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பின்பு முழுவதும் திருந்தினார என்பது தெரிய வில்லை . ஆனால் இந்த மாதிரியான வெளிப்படையான ஆடம்பரங்களை நிறுத்திவிட்டார். தோல்வியிலிருந்து கற்ற பாடம்.
ஆனால் மாயாவதி இன்னமும் பாடம் கற்றதாக தெரிய வில்லை. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு பண்ணி தனக்கு சிலை வைத்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் உ.பி யை முன்னுக்கு கொண்டு வருவதில் இல்லை.
அடுத்து கேரளா கம்யுனிஸ்டுகள் விஷயத்திற்கு வருவோம் . எங்காவது ஊழல் என்ற பேச்சு அடிப்பட்டால் உடனே ராஜனாமா செய் . என்று கூட்டம் போடுவதிலும் ,போஸ்டர் அடித்து ஓட்டுவதிலும் மும்மரமாக இருப்பவர்கள் தங்கள் தலைவர்கள் செய்ததை மட்டும் ஒத்து கொள்ளவே மாட்டார்கள் . அவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டால் மட்டும் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி .
கேரளா மாநில செயலாளர் பிரனாய் ராயின் ஊழல் சம்பந்தமாக ஆதாரங்கள் சேகரித்த பிறகுதான் சி.பி.ஐ . ஆளுநரிடம் அனுமதி கேட்டது . அனுமதி அளித்த ஆளுநர் வசை மாறி பொழியப்பட்டார். இப்போது கேரளா முதல்வர் அச்சு பொலிட்பிரோ விலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் பிரனாய் ராயின் ஊழலை மறைக்காதது தான்.
தன் கட்சியில் இருக்கும் ஒரு ஊழல் பேர்வழியை தண்டிக்க முடியாதவர்கள் . ஊருக்கு உபதேசம் செய்வார்கள் .
வாழ்க கம்யுனிசம் .
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நான் அரசியல் பேசுவதில்லை
Post a Comment