Thursday, July 23, 2009
அடி தடி வெட்டு குத்து -தமிழ்மணத்தில்
என்ன தான் நடக்கிறது நம் தமிழ்மணத்தில் .
பதிவர்கள் ஒருவர் மற்றவரை தாக்கி பதிவு போடுவது அப்படி போட்டவரை பின்னூட்டத்தில் பின்னி பெடல் எடுப்பது இதை தான் நான் சமீப காலமாக படித்து வருகிறேன்.
கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தின் வாசனையை நுகர்ந்து வரும் எனக்கு இப்போது அதில் கொஞ்சம் தீயும் வாடையும் சேர்ந்து வருவதாகவே படுகிறது .
கடந்த வாரம் ஒரு பதிவர் விடை பெறுகிறேன்
என்றார் . பிறகு ஒரு பதிவர் தமிழ்மணத்தில் பரிந்துரையில் ஏதோ குண்டக்க மண்டக்க நடக்கிறது என எழுதினார். இதில் மூத்த அல்லது பிரபல பதிவர்கள் ஒன்றாக கூடி செயல் படுகின்றனர் என்றார். அதற்காக அவரை பின்னூட்டத்திலும் பிறகு வந்த பதிவுகளிலும் கும்மி எடுக்க அவர் இப்போது போதும்(டா சாமி ) விடை பெறுகிறேன் என்கிறார்.
உண்மையிலேயே அப்படி ஒரு பாகு பாடு நம் தமிழ்மணத்தில்
இருந்து வருகிறதா?
புது பதிவருக்கு ராகிங்கெல்லாம் நடை பெறுகிறதா ?
இது ஒரு புறம் என்றால் ஆரியர் , திராவிடர் என்கிற வேறுபாட்டில்
குடுமிபுடி சண்டை ,பதிவு ,பின்னூட்டம் வேறு.
அப்புறம் பிரபாகரன் ஆதரவு , எதிர்ப்பு சண்டை.
இதுதவிர மதங்கள் சார்ந்த தர்க்க ரீதியான பதிவு தாக்குதல்கள் ஒரு தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு உள்ளது.
இதுதான் இப்படி இருக்கிறது என்றால் இடையில் சைக்கிள் கேப்பில் ஒரு பின்னூட்ட குண்டை தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிடும் அனானிகள் .
நம் தமிழ்குணம், தமிழ்மணம் முழுவதும் பரவி இருக்கின்றதா?
பதில் சொல்லுங்கள் (அன்பான ) பதிவர்களே? (பணிவாகத்தான் கேட்கிறேன்)
குறிப்பு:
மேலே உள்ள படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படம்தேவைப்பட்டது அவ்வளவுதான்.
...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆமாங்கண்ணா...என்னை மாதிரி புது பதிவாளர்களுக்கு சரியான பயாமாய் இருக்கு...கருத்துச் சுதந்திரமே இல்லாமால் போய்விடுமோ என்று.
//மேலே உள்ள படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படம்தேவைப்பட்டது அவ்வளவுதான்.//
ஆனா படம் நல்லா இருக்குங்க!
பதிவர்கள் கோவித்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கம்
என்ன செய்வது - இவை எல்லாம் தவிர்க்க இயலாதவை - ஆயினும் தவிர்க்க வேண்டும்
Post a Comment