போகும் தூரம் அதிகம் !
பார்த்து கொண்டதில்லை , பேசிக்கொண்டதில்லை ஆனாலும் நண்பர்கள் நாம்.
நாடுகள் பல கடந்து சென்றாலும் , மாநிலங்கள் பலவானாலும் , ஊர்கள் வேறுபட்டாலும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டு தான் இருக்கின்றது !
மத்தியானமும் , சாயங்காலமும் தொட்டுக்கொள்ளும் ஒரு மூன்றாம் மணி வேளையில் நான் தற்செயலாகத்தான் தமிழ்மணம் வலைப்பதிவை பார்த்தேன் . உண்மையில் தமிழில் இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதை அப்போதுதான் கண்டுகொண்டேன். அது வரை தமிழில் வெப் துனியா தவிர மற்ற வர இதழ் களின் வலைப்பதிவைத்தான் பார்த்து கொண்டு இருந்தேன். தமிழ் மணத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை ...
இந்த நேரத்தில் எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டு எனக்கு பின்தொடர்பவர் வரிசையில் முதலாவதாக வந்து என்னை உற்சாகப்படுத்திய நண்பர் திரு. சுரேஷ் அவர்களுக்கும் அதன் பிறகு வந்த நண்பர் டாக்டர் திரு . தேவன் மாயம் அவர்களுக்கும் மற்றும் இப்படி ஒரு ஊடகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
அதேப்போல் எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும் , தோழியர்களுக்கும் நன்றி நன்றி .
மேலும் அனைத்து ஜாதி , மத , மதமில்லாத , பிரபலமான , பிரபலமில்லாத , இன்றுதான் தமிழ்மணத்தில் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
உலகம் முழுவதும் ஐம்பது நாடுகளில் இருக்கும் தமிழர்களை இந்த ஐம்பதாவது பதிவு சென்று சேர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இது நான் அடித்திருக்கும் முதலாவது fifty . இன்னும் நான் அதிக fifty களை அடிக்க உங்களின் வாழ்த்துக்களை வேண்டி நிற்கின்றேன்.
விழாக்கால தள்ளுபடி :
இன்று என்னுடைய ஐம்பதாவது பதிவை முன்னிட்டு நீங்கள் உலகம் முழுவதும் எந்த கடையில் என்ன வாங்கினாலும் அதில் 50% தள்ளுபடி கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தள்ளுபடி கிடைக்காதவர்கள் உடனே எனக்கு பின்னூட்டம் இடவும்.
சூப்பர் தள்ளுபடி :
மேலும் நம் இளைய தளபதியின் ஐம்பதாவது படத்தின் first show first ticket ம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும் என்பதை பெரும் ஆரவாரத்திற்கு இடையில் தெரிவித்து கொள்கிறேன். இதனைப் பற்றி மேலும் அறிய பின்னூட்டம் இடவும்.
கொண்டாட்டம் :
இன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய ஐம்பதாவது பதிவை கொண்டாடும் விதமாக டாஸ்மாக கபாலி மற்றும் குவாட்டர் கோவிந்தனின் இன்னிசை கச்சேரி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பின்னூட்டம் :
இன்று ஒரு பின்னூட்டம் இட்டால் இரண்டு பின்னூட்டம் இலவசம். முந்துங்கள் இந்த சலுகை (மண்டையில் ) ஸ்டாக் உள்ளவரை மட்டுமே !
....
12 comments:
50, விரைவில் ஆயிரம், இலட்சமாக எனது வாழ்த்துகள்.
டேய் பயபுள்ள
நல்லாருடே
நல்வாழ்த்துக்ள் டா ஐம்பதுக்கு
இந்த வருசத்துக்குள்ளே 150 வரணும்
ஆமா சொல்லிப்புட்டேன் பாத்துக்க
வாழ்த்துக்கள் நண்பா
சீக்கிரம் 'செஞ்சுரி' அடிக்க வாழ்த்துக்கள்.
அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .
அண்ணன் சீனா அவர்களின் அன்பு கட்டளையை இந்த லிட்டில் பாய் நிச்சயம் நிறைவேற்றுவான் .
பெங்களூர் புதியவனிற்கு நன்றி .
வாழ்த்திற்கு நன்றி ராதாகிருஷ்ணன் .
இங்கு துபாய் ராணி என்று நயன்தாரா நடித்த படம் வந்தது , நீங்கள் தான் அந்த துபாய் ராஜாவா ? வாழ்த்திற்கு நன்றி நண்பரே !
அண்ணே..நீங்க வளருகிறீர்கள்..வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் நண்பா
நீங்களே தண்டோரா போட்டு சொல்லிவிடீர்கள் . அப்புறம் நான் வளராமல் போய்விடுவேனா ?
நண்பர் சுரேஷிற்கு நன்றி
Post a Comment