Tuesday, July 14, 2009
ஆட்டோ டிரைவர்கள்(தமாஷான ) போராட்டம்
தமிழகத்திற்கு சேவை செய்யும் நம் ஆட்டோ டிரைவர்களின் நியாயமான போராட்டம் மக்களின் பேராதரவை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.
மிக குறைந்த கட்டணத்தில் ,பணிவன்புடன் பயணிகளை ஏற்றி செல்லும் நம் ஆட்டோ காரர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் .அவர்கள் என்ன மனம்போன போக்கிலா கட்டணம் வசூலிக்கிறார்கள் .
நம் ஆட்டோகாரர்கள் அப்படி என்ன அதிகமாக கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் வீதம் மாதத்திற்குள் நுற்றி ஐம்பத்து லிட்டர் பெட்ரோல் ,டிசல்,கேஸ் மானிய விலையில் கேட்கிறார்கள் . அரசாங்கம் அதை கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே.
இதை பொது மக்களாகிய நாங்கள் எங்கள் ஆட்டோ நண்பர்களுக்காக உரிமையுடன் கேட்கிறோம். அரசாங்கமே உடனே செவி கொடு.
இதுக்கும் ஒரு போராட்டத்தை நடத்த முன் வரும் கம்யுனிச தோழர்களுக்கு: உங்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//மிக குறைந்த கட்டணத்தில் ,பணிவன்புடன் பயணிகளை ஏற்றி செல்லும் நம் ஆட்டோ காரர்கள் ...// :)
தங்கள் வருகைக்கு நன்றி ராபின்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நன்றி.
இனி நான் எழுதும் பதிவுகளை கொடுக்கப்பட்டுள்ள
வலைதளத்தில் பதிவிடுகிறேன் .
இது விவாதிக்கப்பட வேண்டிய செய்தி
Post a Comment