Monday, July 13, 2009

இந்தியாவிற்காக பரிதாபப்படுங்கள் !!!



ஒரு நல்ல நாட்டை எப்படி மோசமாக நிர்வகிக்கலாம் என்பதற்கு இந்தியா தான் முன்னுதாரணம்.

எகிப்தில்
நம் பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கிறார் என்கிற செய்தியை பார்த்த பொது இப்படித்தான் எனக்கு தோன்றியது.

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிர வாதிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் தான் இனி அதனுடன் பேச்சிவார்த்தை என்கிற இந்திய அரசாங்கத்தின் நிலைபாட்டில் ஏன் இந்த பெரும் மாற்றம். அமெரிக்காவின் தூண்டுதலா ? அப்படி என்றால் இந்திய இறையாண்மை அமெரிக்க இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தான் உள்ளதா? தாலிபன் தீவீர வாதிகளை ஒடுக்கவேண்டுமானால் அமெரிக்கா , இந்தியாவை பேச்சவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிளாக் மெயில் செய்து இந்தியாவை பணியவைத்து விட்டது.

மும்பை தீவீரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத நிலையில் அதனுடன் பேச்சிவார்த்தைக்கு ஒத்து கொண்டதன் மூலம் இந்தியா ஒரு மென்மையான தேசம் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த உலகிற்கு நிரூபித்து உள்ளது.

இந்தியாவும் , இந்தியர்களும் வலிமையாக இருந்தாலும் அதன் தலைவர்கள் கோழைகளாக, உலகின் அழுத்தத்தை தாங்கும் வலிமை இல்லாதவர்களாக இருப்பதால்தான் இந்தியாவிற்கு எதிராக தீவீரவாதிகள் தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது.

நம் நாட்டின் பாராளு மன்றத்தையே தாக்கினால் கூட கொஞ்ச நாள் அதைப்பற்றி கார சார மாக பேசி விட்டு பிறகு அதை மறந்து விடுவது தான் நம் தலைவர்களின் குணாதிசயம். பாராளு மன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக மரண தண்டனை விதிக்க பட்ட அப்சல் லுக்கு இன்னமும் தண்டனை நிறைவேற்ற பட வில்லை.
தன்னுடைய இறையாண்மை குள்ளேயே நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் எப்படி எப்படி மற்றொரு நாட்டை பணிய வைக்க முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு நாடு ஜனத்தொகையில் மட்டும் பெரியதாக இருந்து பிரயோஜனம் இல்லை. கொள்கையில் பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு ஏழ்மை நாடாக இருந்தது ஆனால் இந்திரா காந்தி பாகிஸ்தானோடு போர் புரிவதற்கு அது தடையாக இருக்க வில்லை .இன்று இந்தியாவின் நிலை வேறு.

நாம் பொறுமையாக இருப்பதினால் போரை நிறுத்திவிட வில்லை தள்ளிபோட்டு கொண்டு தான் செல்கிறோம் . ஒரு நாள் நாம் வேறு வழி இன்றி எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கும் .

கடைசியாக ஒரு செய்தி:

சீனா இந்தியாவை தாக்கலாம் என இந்தியன் டிபன்ஸ் ரிவிவின் எடிட்டர்
பாரத் வர்மா கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிஉள்ள காரணம் : சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் பாதிப்பினால் எழுந்துள்ள அசாதரண சுழல் , பாகிஸ்தானில் உள்ளநாட்டு போரினால் அது முன்பு போல இந்தியாவின் மேல் கவனம் செலுத்த முடியாமை, இந்தியாவின் ,அமெரிக்கா ,ஐரோப்பிய நெருக்கங்கள் போன்றவைதான் .

அதற்காக சீன கடலில் அதனுடைய போர் கப்பல்களை அதிகப்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகின்றார். இந்தியா போன்ற மென்மையான (நன்கு கவனிக்கவும் ) நாடுகளை தாக்கி அதன் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயல்வதாக தெரிவிக்கிறார.

கலீல் ஜிப்ரனின் கவிதை ஒன்று :

எந்த தேசம் பழம் பெருமைகளை பேசி
அதன் நிகழ்கால துயரங்களை மறக்க நினைக்கின்றதோ
அதற்காக பரிதாபப்படுங்கள்.

2 comments:

THANGAMANI said...

நன்று.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - சில சமயங்களில் கைகள் கட்டப்படுகின்றன

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா