Tuesday, April 28, 2009

கருணாநிதி உண்ணாவிருதத்தில் ராஜபக்க்ஷே?

கருணாநிதிக்கு பின்னால் சிகப்பு துண்டோடு இருப்பது ராஜபக்க்ஷே தானே? !
ஒருவேளை போர் நிறுத்த செய்தியை நேரில் சொல்ல வந்திருப்பாரோ ?

Thursday, April 9, 2009

அதிரடி அழகு குறிப்பு


முகம் சிவப்பாக :
இளம் பச்சை மிளகாயை , மிளகுடன் அரைத்து காலையில் குளிக் போகும் முன் முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகம் சிவப்பாகும் .








நம்ம தலைவர் பிரஸ் மீட்டுன்னா பத்திரிக்கைகாரங்க தலை தெறிக்க ஓடுறாங்களே ஏன் ?
அவருக்கு பிடிக்காத கேள்வியை யாராவது கேட்டா ஷுவ கழட்டி வீசுராராம்.

Wednesday, April 8, 2009

ஹெல்மெட் வெறுப்போர் கிளப்





ஹெல்மெட் மாட்டினால் இப்படித்தான் தோன்றுகிறது


என்னை பொறுத்தவரை இந்த சட்டம் ஒரு முழு மனித உரிமை மீறல்

ஹெல்மெட் போடததால் அடுத்தவர் உயிருக்கு பாதிப்பு வந்தால்
சட்டம் கொண்டு வரலாம் .

தனி மனித உயிரில் அல்லது வாழ்வில் அதிக அக்கறை இருந்தால் மது
விலக்குகொண்டு வறட்டுமே . (அப்படி கொண்டு வந்தால் கல்லா கட்டுவது எப்படி அப்பாவியாக கேட்காதீர்கள் .)

பெண்களுக்கு
இது அவசியமில்லயாம் அப்ப அவர்கள்
உயிர்
முக்கியமில்லையா ?

மது விலக்கு கொண்டு வந்தால் பாதி பேர் ஜெயிலில்இருப்பார்களாம். ஹெல்மெட் போடாமலும் தான் தெண்டம் அழவேண்டி உள்ளது .

இந்த சட்டம் கொண்டு வந்த எவரும் ஹெல்மெட் அணியும் அந்த
கொடுமையில் மாட்டுவதில்லை . அவர்களுக்குத்தான் குளுகுளு வண்டி இருகிறதே !


ஆனால் நம்மை ( அதாவது என்னை போன்ற ) மக்கா எல்லாம் இதை போன்று வலை பூவை காதில் சுற்றி கொண்டு போலிஸ் மாமாவிடம் கண்ணாம்பூச்சி விளையாட வேண்டியது தான்

பாகிஸ்தானில் கூட மனிதாபிமானம் ஆனால் இலங்கையில்?


பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தையும் தலீபான் தீவீரவாதிகள் பிடித்து வருகிறார்கள் என் கேள்விப்பட்டு வருகிறோம் . ஸ்வாட் பள்ளத்தாக்கையும் ,வட மேற்கு எல்லைப்புற மற்றும் பஞ்சாப் மாகாணத்தையும் கைப்பற்றி வருவதையும் நாம் பேப்பரில் படித்துக்கொண்டுதான் வருகிறோம். இந்த நேரத்தில் நமக்கு ஒரு கேல்வி வரலாம் . பாகிஸ்தானில் பல இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் இந்த தீவீரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானால் நிச்சயமாகவே முடிய வில்லையா? என்பதுதான் . இந்தியாவை எதிர் கொள்ள துணிச்சலும் வல்லமையும் படைத்த பாகிஸ்தான் ஏன் தீவீரவாதிகள் விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை . ஏனென்றால் தீவீர வாதிகளைஒடுக்க நடவடிக்கை எடுக்கும் பொழுது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் . ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது.அது தன் சொந்த மக்களையே எறிகுண்டு வீசியும் ,விமானம் கொண்டு தாக்கியும் அழித்து வருகிறது . கடந்தஅறுபத்து ஒரு வருடங்களில் எந்த ஒரு நாடும் செய்திராத சாதனை இது. தமிழர்களாகிய நாம் இத்தனை தடுக்க இயலாத ஒரு அரசாங்கத்தின் குடிமக்களாய் ஈழ மக்களின் சிவப்பு ரத்தத்தில் எழுதப்படும் கறுப்பு வரலற்றின் சிறப்பு அங்கத்தினராய் உள்ளோம் .

Monday, April 6, 2009

மனித உரிமை -அப்டீனா என்ன ?



மனித உரிமை , மனித உரிமை என கூச்சல் போட்டுஒரு கூட்டம் காரில் வலம் வருவதை நீங்கள்கண்ணார கண்டு ரசித்திருப்பீர்கள் . உங்களை போலவே நானும் மனித உரிமை அமைப்பு என்றால்உண்மையீலயே அவர்கள் மனித உரிமைக்காக தங்கள்உயிரையும் கொடுப்பார்கள் என்று ( உங்களைபோலத்தான்) அப்பாவித்தனமாகஎண்ணிக்கொண்டிருந்தேன் அந்த ஒரு மதியான வேலை வரை . அன்று நான் தி.நகரின் தண்டபாணி ரோடுவழியாக வந்துவெங்கட் நாராயண ரோடு சந்திப்பில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது என்அருகில் ஒரு பிளாக் ஸ்கார்பியோ வந்து நின்றுதுஅதன் முன் பக்கத்தில் மனித உரிமை கழகம் என்றுஒரு கொடியும் கருப்பு கலரில் இருந்தது. அந்த சமயத்தில் பின் பக்கம் டி வீ எஸ் ஸ்கூட்டியில் வந்தஒரு வயதான பெரிவர் லேசாகஸ்கார்பியோவின் பின் பக்கத்தை இடித்து விட அதை உணர்ந்தஉடன் வண்டியின் ஓட்டுனர் ( நுப்பது வயதிற்குள்ளான பொறுக்கி போன்ற அழகான ஜாடை யுடன்) இறங்கி வந்து அந்த வயதானவரை கண்டபடி திட்டியது மட்டும்அல்லாமல் அவரை அடிக்க கை ஓங்கியதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது . இதுஎல்லாத்தையும் விட ஒரு மிகப் பெரிய காமடி என்ன வென்றால் இவ்வளவும் செய்துவிட்டுகிளம்பிய அந்த காரின் பின் பக்கத்தில் எழுதி இருந்த வாசகம் தான். மனித உரிமை தர்மத்தை காத்தஅந்த கார் ஓட்டுனரையும் , அதன் உள்ளே உட்கார்ந்திருந்தவரையும் நான் ஒன்று கேட்கவிரும்புகிறேன் . ஸ்கூட்டி இடுச்சி கார்பியூ உடைஞ்சி பூடுமாயா?. அப்புறம் அந்த காரின் பின் புறம்என்ன எழுதி இருந்து என்று சொல்ல வில்லையே . அன்பே சிவம் !!!!!!.


வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா