சொல்லி அடித்தால்
நெத்தி அடி அடிக்கலாம்
அறை குறை ஆடை பெண்கள் , கிசு கிசுக்கள் உதட்டை கடிப்பது இது தான் சினிமா என்றதும் பலருக்கு வருகிற ஞாபகமாக இருக்கலாம் . ஆனால் சினிமா என்பது முறையாக மேற்கொண்டால் ஒரு சரியான தொழில் என்பதில் சந்தேகமே இல்லை .
பொதுவாக சினிமா எடுக்க வரும் பல தயாரிப்பாளர்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு வருவதால் தான் (எதற்கு என்று என்னை கேட்க்க வேண்டாம்)அவர்களால் சரியாக ஒரு விஷயத்தை நிதானிக்க முடிவதில்லை.
அப்படி வருபவர்களுக்கு இரண்டு விஷயத்தில் கண்டம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒன்று பெண்கள் . இதை இதற்கு மேல் சொல்ல தேவை இல்லை . அடுத்து தன்னுடைய மகனை கதாநாயகன் ஆக்குவது.
கதை சொல்லும் சில இயக்குனர்கள் தயாரிப்பாளரின் மகனே கதா நாயகன் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது என முதல் படத்தில் சொல்லி விடுவர் . ஒரு வேலை அந்த மகன் கதாநாயகனுக்கு தகுதியாக இருந்தால் சரி. இல்லா விட்டால் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போலதான் .
பெரிய தயாரிப்பாளர் என்றால் அவர் சோதனை செய்து பாக்கலாம். இதுதான் முதல் படம் என்றால் யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
முதலில் சினிமாவை கவர்ச்சியாக பார்ப்பதி நிறுத்திவிட்டு அதை ஒரு தொழிலாக பார்க்கும் மனநிலை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த மனநிலை வந்தால் மட்டுமே சினிமாவில் இறங்க வேண்டும் . சினிமா நடிகர் , நடிகைகள் மீதான பிரமிப்பு நீங்கினால் மட்டுமே அந்த தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பதற்குன்டான தகுதி பெறுகிறார்.
சினிமாவிற்கான மார்க்கெட்டிங் முறைகள் என்ன என்பதையும் , அது ஒவ்வொரு வெற்றி படத்திலேயும் எவ்வாறு செயல் படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலுக்குமான சந்தை நிலவரத்தை போன்றுதான் சினிமாவிற்கான சந்தை நிலவரமும் மாறிக்கொண்டே இருக்கிறது. வி.சேகர் , விசு போன்ற வர்களின் படங்களை பார்க்கும் பெண்களின் மார்கெட்டை இப்போது டி.வி.சீரியல்கள் பிடித்து கொண்டுள்ளன என்பது போன்ற அடிப்படை நிலவரமாவது தெரிந்து இருப்பது அவசியம்.
படத்தின் விற்பனை சாட்டிலைட் சேனல்களில் எவ்வளவிற்கு போகும் , இசை பாடல்கள் எவ்வளவிற்கு போகும், வெளிநாடுகளில் எவ்வளவு போகும் என்பது போன்ற புள்ளி விவரங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் .
இவை எல்லாத்தையும் தாண்டி படத்தின் கதை எப்படி உள்ளது, இந்த கதையை பார்ப்பதற்கு மக்கள் தங்களது இரண்டரை மணி நேரத்தை செலவு செய்வார்களா என் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்னும் வரும் .....
2 comments:
சினைமாவும் ஒரு தொழில் தான் - அதனைத் துவங்கும் முன் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துத் தான் துவங்க வேண்டும்
அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .
Post a Comment