Friday, August 21, 2009

பொக்கிஷமும் படமும் சேரனின் முத்தின மூஞ்சும் !


சேரனின் பொக்கிஷம் படம் பார்த்தவர்கள் அவரின் முத்தின முகத்தை காண சகிக்காமல் ....
சேரனுக்கு ஒரு கடிதம் , சேரன் அவர்களுக்கு ஒரு கேள்வி , .... சந்தேகம்
இதில் நீங்கள் நடிக்க தான் வேண்டுமா? என்று அவரை நார் நாராய் கிழித்து .. அவரின் முத்தின முகத்தை படத்தின் கதையை விட மிக பிரபலமாக்கி விட்டனர் திரை விமரிசனத்தில் .

முத்தின மூஞ்சோடு யார்தான் சினிமாவில் நடிக்க வில்லை . எழுபதுகளில் நடிக்க ஆரம்பித்து இன்றும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கெல்லாம் இருப்பது என்ன இளம் மூஞ்சா ...

எண்பதுகளில் நடிக்க ஆரம்பித்த நாயகர்களுக்கும் குளோசப் ஷாட் வைக்கவா முடிகிறது ...

அப்படி இருக்க சேரன் மட்டும் முத்திய முகத்துடன் நடிப்பதில்
என்ன தவறு இருக்கிறது நண்பர்களே ...

கந்தசாமியின் முகம் மட்டும் எப்படி இருக்கிறது? ...

சரி இப்ப விஷயத்திற்கு வருவோம் .. உண்மையில் பொக்கிஷத்தில் சேரனின் முகம் முத்தி தெரியவில்லை . அவர் செய்த (மிகப் பெரிய ) தவறு என்ன வென்றால் தன்னுடைய மீசையை எழுபதுகளில் இருப்பதை போல வடிவமைத்து கொண்டதுதான் . ஒரு வேலை எழுபதுகளில் அப்படி இருந்ததா ? என்றால் தெரிய வில்லை . ஆனால் அவர் மீசையை கத்தரித்து கொண்டதால்தான் அவர் முகத்தின் வசீகரம் மாறி அகோரமாய் தெரிந்தது . மீசையை அதிகமாய் கட் பண்ணியதால் பல்லும் வெளியே துருத்தியது போல தெரிந்தது .

நன்கு வளர்ந்த அடர்த்தியான மீசையை அதன் அடர்த்தியை குறைப்பதால் இப்படி தோன்றலாம் . பேரன் பேத்தி எடுத்த நாயகர்களையே மேக்கப் போட்டு இளமையாக காட்டும் போது சேரனுக்கு மேக்கப் போடுவது அத்தனை கடினமானதும் அல்ல . அவர் அதிகமாக போட்டு கொள்ளவில்லை . ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனித்து செய்பவர் இதை கவனிக்காமல் விட்டு விடுவதற்கு அவர் மசாலா இயக்குனர் இல்லை .

அடுத்த படத்தில் அவர் நன்கு வளர்ந்த ஒரிஜினல் மீசையோடு வரப் போகிறார் . அப்போது இதே நண்பர்கள் சேரன் இப்போது இளமையாக தெரிகிறார் ... என்ன செய்தார் என பதிவு எழுத போகிறீர்கள் .

ஆகையால் அநேகமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சேரனின்
மீசையே துன்பத்திற்கு காரணம் .

பல நாட்களாக நான் ஆராய்ந்து கண்டு பிடித்த இந்த அரிய கண்டு பிடிப்பிற்கு தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்தவும் !!!

நன்றி !
...

Friday, August 14, 2009

ஆதி கேசவனும் அந்த குடிசை வாசிகளும்


எத்தன பேர் குடிசை போட்டுக்க
போறீங்க
?

ஒரு ஐம்பத்து பேர் அண்ணே !

ஐம்பத்து பேரா ? ஐம்பத்து குடும்பம்னு சொல்லுடா!

சொல்பவன் தலையை சொரிகிறான் ஆமாண்ணே !

ஐம்பத்து குடும்பன்னா பிரச்சனை ஆயிடுமேடா!

ஆதி கேசவன் புருவங்களை சுருக்கி யோசிக்கின்றார் .


ம்... ஒரு குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூவா கொடுத்துட சொல்லிடு
நான் பாத்துக்கறேன் !

டேய் சொக்கா எதோ நீ நம்ப ஆளா போயிட்டதால தான் நான் இத பண்ணுறேன்
ஐம்பத்து குடும்பத்துக்கு மேல அதிகமா போனா நீதான் மாட்டுவே !
என்ன புரியுதா ?

அப்பறம் பணத்த சாயங்காலம் கொண்டு வந்து அம்மா கையில கொடுத்துடு .

புறப்பட தயாராய் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஸ்கார்பியோவின் உள்ளே
ஆதி கேசவன் சென்று அமர்ந்தார் .

ஆளும் கட்சியின் ஓரளவு முக்கியம் வாய்ந்த பொறுப்புகளை பெற்றுள்ள ஆதி கேசவன் அந்த பகுதியின் கவுன்சிலரும் கூட.

சிங்கார சென்னையை அலங்கரிக்கும் பல திட்டங்களை செயல் படுத்தும்
பொறுப்புள்ள பல கவுன்சிலர்களுள் ஆதிகேசவனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

அதில் ஒரு திட்டம் தான் அடையார் ஆற்றின் ஓரத்தில் குடிசைகளை அமைத்தல்
அதற்குதான் இப்போது அனுமதி கொடுத்து விட்டு வந்தார்.

குடிசைகளை அமைக்க ஒரு தொகை , மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்து
குடிசைகள் முழுகினால் நிவாரணம் வாங்கி தர ஒரு தொகை , போலீஸ் தொல்லையோ , வட்டாச்சியர் தொல்லையோ வராமல் இருப்பதற்கு ஒரு தொகை என அவ்வப்போது காசு பாத்தாலும் அவர்களை தன்னுடைய கட்சி வேலைக்கும் பயன் படுத்த தவறுவதில்லை .

சொக்கன் மாதிரியான ஆட்கள் அப்படி சேர்ந்தவர்கள் தான் . அவர்களுக்கும் கட்சி பாதுகாப்பு.
இவருக்கும் வேலை முடிகிறது.

சமிபத்தில் நீதி மன்ற உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை புல் டோசர் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் இப்போது ஆதி கேசவன் மூலம் அவர்கள் புனர்வாழ்வு பெறுகின்றனர். இதுவும் எத்தனை நாள் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அதுவரை விலாசம் தேடி வரும் லட்சுமியை ஏன் விட வேண்டும் .

துர்நாற்றம் வீசும் கழிவு நீர் ஆறாக மாறியுள்ள அடையாற்றின் கரைகளில் ஒன்று இரண்டு என்று ஐம்பத்து குடிசைகள் திடீரென முளைத்தன .

ஆதி
கேசவனின் ஆசி இருப்பதை அறியாத சிலர் போலீசுக்கு பப்ளிக் போனிலிருந்து அனாமதேய கால் பண்ணினாலும் அதனால் எந்த பயனும் ஏற்ப்பட வில்லை.

குடிசைவாசிகளின் திறந்த வெளி கழிப்பிடமாக அங்கு இருக்கும் சாலைகள் மாற ஏற்கனவே அங்கிருந்த அபார்ட்மென்ட் வாசிகளின் சங்கங்கள் மூக்கில் கருப்பு துணி கட்டி, கைகளில் பதாகைகள் ஏந்தி ஒரு நாள் அடையாள எதிர்ப்பை காட்டினர் .

பலனில்லாத அந்த எதிர்ப்பு ஆதி கேசவனை கோபமடைய செய்ய அவரின் அடிப்பொடிகள் ஒன்றினால் அந்த போராட்டத்தை நடத்தினவருக்கு ஒரு மிரட்டல் போனது அதற்கே கைகால் ஆடி போன அவர் அடக்கம் அமரருள் உய்த்தார் .

போராட்டம் வெளிப்படையாக ஓய்ந்ததே தவிர நின்று விட வில்லை . திடீரன ஒரு நாள் ஒரு நாளிதழில் அடையார் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தெளிவான போட்டோவுடன் வந்தது . அதில் ஒரு கட்டம் கட்டிய செய்தியாக இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதிகேசவனின் ஆசி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது .

இதற்கு இடையில் ஒரு பொது நலன் வழக்கு நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்தது . அதில் இந்த ஆக்கிரமிப்பை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு அது மிக பெரிய வேலையாகிவிடும் . அதில் அங்கு குடியிருப்பவர்களுக்கு வேறு இடத்தில் தங்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

நாட்கள் சென்றது.

இப்போது அந்த இடத்தில் நூறு குடிசைகள் முளைத்து இருந்தது

இந்த முறை சொக்கன் ஆதிகேசவனை பார்க்க வந்தது தங்கள் சேரிக்கு மின் விளக்கும் , ரேஷன் கார்டும் கேட்டு தான் . ரேஷன் கார்டும் , தெரு விளக்கும்
வந்து விட்டால் நாமை யாரும் எளிதில் காலி செய்து விட முடியாது என்பது அவனுடைய கணக்கு.

அதை
எதிர் பார்த்தவர் போல ஆதி கேசவனும் புருவத்தை சுருக்கி யோசித்து கொண்டிருந்தார் .

டேய் சொக்கா இந்த முறை நான் உனக்கு நேரடியா எந்த உதவியும் செய்ய முடியாது

ஒரு ஐடியா சொல்றேன் ...

அத கேட்டு அந்த மாதிரி செஞ்சா , நீ கேட்ட மாதிரி நான் செஞ்சி தர முடியும் .
என்ன கேட்ப்பியா ?

என்ன அண்ணே ! நீங்க சொல்றத என்னக்கி கேட்காம இருந்திருக்கோம்.
சொல்லுங்கண்ணே !

அப்பன்னா .. நாளக்கி அங்க இருக்கிற குடுசைக்கி தீ வச்சீடு !

எண்ணனே சொல்லறீங்க ?

இங்க பாருடா சும்மா போயி நான் உங்களுக்காக பேச முடியாது .

இந்த மாதிரி எதாவது நடந்தா ? உங்க மேல ஒரு பரிதாபத்த நான் ஏற்படுத்தி அப்படியே நீ சொன்ன காரியத்தையும் முடிச்சி கொடுத்துருவேன் .

உனக்கு சரின்னா செய்யி இல்லனா வேணாம் !

அடுத்த நாள் காலை எல்லா தொலைக்காட்சிகளிலும் குடிசை தீப்பற்றி எறிந்த செய்தி தான் பிரதானமாக இருந்தது . லோக்கல் எம் எல் வுடன் ஆதி கேசவனும் வந்து பதிக்காப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் .

சில நாட்களில் அந்த இடத்தை வந்து பார்த்த மாநகராட்சியின் அதிகாரிகள் அங்கு இருந்தவர்களை பத்து நாட்களிற்குள் காலி செய்ய சொல்லி விட்டு சென்றனர் .

அவர்களுக்கான
வேறு இடம் பரிசிலனையில் இருப்பதாகவும் இப்போது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இழப்பீடு ஒன்றும் தர முடியாது என்றனர்.

ஆதிகேசவனை பார்க்க சொக்கன் ஓடினான் . ஆதி கேசவன் சி. எம். மீடிங்கில் பிஸியாக இருந்தார் .

குடிசைவாசிகள் அனைவரும் காலி செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் சொக்கனால் ஆதி கேசவனை பார்க்க முடிந்தது .

டேய் சொக்கா நானும் என்னால ஆனா மட்டும் பேசி பாத்துட்டண்டா
சி. எம் பிடி கொடுக்கவே இல்லடா .

எவனோ ஒருவன் கோர்ட்டுல போட்டிருக்கானாமே . நான் ஒன்னும் பண்ண முடியாதுன்னு கை விரிச்சிட்டார் .

சரி கவலை படாத உங்களுக்காக வேற இடம் சீக்கிரம் பாத்து கொடுக்க சொல்லி இருக்கேன் .

சொக்கன் புறப்பட்டான் .

நாளிதழில் குடிசை வாசிகளின் ஆக்கிரமிப்பு ,ஆதி கேசவன் ஆதரவு என்று செய்தி வந்த போதே ஆதி கேசவனுக்கு அந்த இடங்களை எல்லாம் காலி பண்ண வைத்து விட வேண்டும் என்று முதல்வரிடம் இருந்து உத்தரவு வந்ததையும் அதற்கு ஆதி கேசவன் கொஞ்ச நாள் அவரிடம் அவகாசம் வாங்கி இருந்ததையும் சொக்கன் ஒரு வேலை அறிந்து இருப்பானே யானால் அவரிடம் ரேசன் கார்டு வேண்டும் என்று கேட்க சென்றிருக்கவே மாட்டான் .

இந்த அதிர்ஷ்டம் தான் ஆதிகேசவனுக்கும் சொக்கனுக்கும்
இடையே இருக்கும் வித்தியாசம் .

இரவில் சுதந்திரம் வாங்கினோம் ! இன்னும் விடியவே இல்லை. !


ஒரு கசப்பான தோல்விக்கு தயாராகும் இந்தியா

இதோ
நாம் மற்றும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் . ஆனால் சமீப காலமாக செய்தித்தாளில் சீனாவின் சில்மிஷங்களைப் பற்றி வரும் செய்திகள் சந்தோசப் படும் விதமாக இல்லை. நம்முடைய கடற் படை தளபதி இந்திய இராணுவம் சீனாவிற்கு எந்த விதத்திலும் சமம் இல்லை என பகிரங்கமாக பேட்டிகொடுக்கிறார். அதே சமயம் சீனாவின் அதிகார பூர்வ வெப் சைட்டில் இந்தியாவை முப்பது துண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பாது காப்பு வல்லுநர் எழுதுகிறார்.

ஆனால் நம்முடைய தூங்க மூஞ்சி அரசியல் வாதிகளின் காதுகளுக்கு அது எட்டியதாக தெரிய வில்லை . நம்மோடு போட்டி போடும் பாக்கிஸ்தான் எல்லா விதத்திலேயும் நமக்கு சமமாக முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாப் பக்கத்திலேயும் எதிரிகளை கொண்டுள்ள நாம் எவ்வளவு விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.

இந்திய வரலாற்றில் இந்திய மன்னர்கள் அசட்டையாக இருந்ததால் தான் தொடர்ந்து வெளி நாட்டு மன்னர்களிடம் கேவலமாக தோற்க வேண்டி இருந்தது .

ஒரே நாடக இல்லாத போது இந்த நிலை என்றால் , ஒன்று பட்ட இந்தியாவும் தன் ஆயுத பலத்தை அதிகரிக்காமல் அசட்டையாக இருக்கிறது.

கீழே இருப்பது இரு நாடுகளின் ராணுவ ஒப்பீடு .
இந்தியா ராணுவ செலவாக வருடத்திற்கு முப்பது ஆயிரம் கோடி
செலவிடுகிறது
. அதில் பெரும்பான்மையான தொகை வீரர்களின் சம்பளம் .

சீனா வருடத்திற்கு எழுபது முதல் இருநூறு ஆயிரம் கோடி வரை செலவிடுவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ( US Library of congress : Central Intelligence Agency) தெரிவிக்கிறது.

இந்தியா

ARMY
Total Land-Based Weapons: 10,340
Tanks: 3,898 [2004]
Armored Personnel Carriers: 317 [2004]
Towed Artillery: 4,175 [2004]
Self-Propelled Guns: 200 [2004]
Multiple Rocket Launch Systems: 150 [2004]
Anti-Aircraft Weapons: 2,424 [2004]

NAVY
Total Navy Ships: 143
Merchant Marine Strength: 501 [2006]
Major Ports and Harbors: 9
Aircraft Carriers: 1 [2004]
Destroyers: 8 [2004]
Submarines: 18 [2004]
Frigates: 16 [2004]
Patrol & Coastal Craft: 43 [2008]
Mine Warfare Craft: 12 [2008]
Amphibious Craft: 7 [2004]

AIR FORCE
Total Aircraft: 1,007 [2004]
Helicopters: 240 [2004]
Serviceable Airports: 346 [2007]

சீனா

ARMY
Total Land-Based Weapons: 31,௩00

Tanks: 8,200 [2004]
Armored Personnel Carriers: 5,000 [2004]
Towed Artillery: 14,000 [2004]
Self-Propelled Guns: 1,700 [2004]
Multiple Rocket Launch Systems: 2,400 [2004]
Mortars: 16,000 [2001]
Anti-Tank Guided Weapons: 6,500 [2004]
Anti-Aircraft Weapons: 7,700 [2004]

NAVY
Total Navy Ships: 760
Merchant Marine Strength: 1,822 [2008]
Major Ports and Harbors: 8
Aircraft Carriers: 1 [2010]
Destroyers: 21 [2004]
Submarines: 68 [2004]
Frigates: 42 [2004]
Patrol & Coastal Craft: 368 [2004]
Mine Warfare Craft: 39 [2004]
Amphibious Craft: 121 [2004]

AIR FORCE
Total Aircraft: 1,900 [2004]
Helicopters: 491 [2004]
Serviceable Airports: 467 [2007]

Thursday, August 13, 2009

சென்னையை கலக்கும் ஆன்-லைன் ஜாப் மோசடிகள் .


நோகாமல் நோம்பு கும்பிடலாம் வாங்க என்று பண ஆசைகாட்டும் விளம்பரங்களை நாளிதழில்களில் செய்துவிட்டு சைலண்டாக கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது விவரம் தெரிந்த ஒரு ஏமாற்று கூட்டம் .

மாதம் 30,000 சம்பாதிக்கலாம் 50,000 சம்பாதிக்காலாம்.

ஆன் லைன் ஜாப்

தினந்தோறும் இரண்டு மணிநேரம் வேலை செய்தால் போதும்

வீட்டில் கம்ப்யுட்டர் இல்லா விட்டால் பிரவுசிங் சென்டரில் செய்யாலாம் என விளம்பரம் செய்வார்கள் .

விளம்பரத்தில் ஒரு வெப் சைட் ஐடி யை கொடுத்து பார்க்க சொல்லி இருப்பார்கள் . அல்லது செல் நம்பர் இருக்கும் . ஏற்கனவே பணம் சம்பாதிக்க முடியாமல் நொந்து நூலாகி இருக்கும் நொந்தகுமாரர்கள் உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்வார்கள் .
கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதாக சிலர் நினைத்து கொண்டு அந்த வெப்சைட்டை தேடி பார்ப்பார்கள் .
அதில் இவர்களின் ஆசையை கிளறிவிட டாலரில் தொகையை போட்டிருக்க . அதனை பற்றி முழு விபரம் அறிய ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் .
பண ஆசை யாரை விட்டது அதுவும் டாலரில் வந்தால் வுடனே நம்ப நொந்த குமாரர்கள் பணத்தை கட்டி விடுவர். அப்புறம் என்ன நடக்கும் . கீழே ...

ஆன் லைன் ஜாப் சிலவகை படும் .

டேட்டா என்ட்ரி ஜாப் .

பார்ம் பில்லிங் ஜாப்

மெயில் ரீடிங் ஜாப்

காபி பேஸ்ட்

பிளாக் ஆரம்பித்தல் .

பல்க் எஸ் எம் எஸ் அனுப்புதல்

ரெபரல் .

பெரும்பாலும் டேட்டா என்ட்ரி மற்றும் பார்ம் பில்லிங் ஜாப் களுக்கு நீங்கள் சுலபத்தில் எட்ட முடியாத டார்கெட் இருக்கும் தவிர குவாலிட்டி கண்ட்ரோல் என நீங்கள் செய்த தப்புகளுக்கு தகுந்த வாறு பணம் பிடிக்க படும். இதெல்லாம் அந்த கம்பெனி சென்னையில் இருந்து அதன் முகவரி தெரிந்து இருந்தால் தான். சென்னை இல்லாத ,முகவரி தெரியாத நிறுவனமா ? ... சொல்லவே தேவை இல்லை.

அடுத்து இ மெயில் ரீடிங் ஜாபில் உங்களை கிளுகிளுப்பூட்டும் வகையில் வேலையின் தன்மை மிக சுலபமாக இருப்பதாக தெரியும். இந்த வகை ஜாப் இருப்பதாக சென்னையில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்து அதற்காக வெறும் ஐந்நூறு ரூபாய்யை ஒரு தனி மனிதர் பெயரில் பேங்கில் கட்ட சொல்லி அதனுடைய வெப்சைட்டில் போட்டிருக்கிறது .

மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பாதிக்க சொல்லித்தரும் அந்த வெப்சைட் கூட அதனுடைய சொந்தமான டொமைனாக இல்லாமல் நெட்டில் இலவசமாக கிடைக்கும் டொமைன் நேமில் உருவாக்கப்பட்டிருக்கும் .
அப்புறம் நீங்கள் அந்த பெயருக்கு பணத்தை கட்டிய பிறகு உங்கள் இ மெயிலிற்கு இந்த, இந்த வெப் சைடில் உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டிர்கள் என்றால் பணத்தை அல்ல அல்ல குறையாமல் எண்ணலாம் என கூறி இருப்பர் .

நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவு பண்ணும்போது கூட அப்படித்தான் அதில் போட்டிருக்கும். அதேப்போல் உங்கள் எர்நிங்(earning) பகுதியிலும் காட்டும் . ஆயிரம் டாலர் , இரண்டாயிரம் டாலர் , பத்தாயிரம் டாலர் என கிளுகிளுப்பூட்டுமே தவிர அது உங்கள் அக்கௌண்டில் அந்து சேராது. பணம் சம்பந்தமாக அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் இ மெயில் அனுப்பினால் கூட பதில் இருக்காது.

அடுத்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும் ஜாபில் சில இந்திய நிறுவங்கள் தங்களுக்கு கிடைக்கும் வொர்க்கை வெளியில் கொடுத்து செய்கிறது இதற்கும் நம்மிடையே பணம் வசூலிக்கப்படும் .
வேலையும் கஷ்டமானது தவிர நேரம் அதிகம் இழுக்ககூடியது.
இதனையெல்லாம் வீட்டில் கம்ப்யுட்டரும் , அன்லிமிடெட் broadband connection -நும் இருந்தால் ரிஸ்க் எடுத்து ரசக் சாப்பிடலாம் .

மேலும் பிற ஆன்லைன் மோசடிகளை குறித்து அடுத்த பதிவில் எழுதுறேன்.

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா