Monday, July 27, 2009

ஆட்டோக்காரன் !


என்னது ? வடபழனிலேந்து தி. நகர் போவ நூறு ரூபாவா?

என்னப்பா விளையாடுறியா ?

நான் ஒன்னும் விளையாடுல நீதாமா பெட்ரோல் வில தெரியாம இருக்க ?

அதுக்குன்னு இப்படியா ?
துரைசாமி ரோடுல கட் பண்ணி ஆர் 3 போலீஸ ஸ்டேஷன் வழியா போனா தி.நகர் பத்து நிமிஷம்தாம்ப்ப ...

நல்லா வாயிலேயே வழி சொல்றீயே அப்டே போவ வேண்டியது தானே . அப்ப்றம் எதுக்கு ஆட்டோ...

என்னாப்பா ரொம்ப ரூடா பேசற ..

அப்பறம் என்னமா? டி நகர் வரைக்கும் போயிட்டு சும்மாதான திரும்பி வரணும்

உன்ன யாரு சும்மா வர சொல்றது யாரையாவது ஏத்திக்கிட்டு வர வேண்டியதுதானே?

அதெல்லாம் சரிப்பட்டு வராது . .. நீ எவ்ளோ குடுப்ப?

நான் அறுவது ரூவா கொடுக்கறேன் .

தொண்ணுறு ரூபான்னா ஏறு
இல்லனா வேற அட்டோ பாத்துக்கோ என்ற ஆட்டோ காரனின் பதிலால் கோபமுற்ற அம்புஜம்மாள்
ரொம்பதான் எகத்தாளம் இவனுக்கு என்று தனக்குள் முனகிக்கொண்டு
வேறு ஆட்டோவிற்காக ரோட்டை பார்க்கலானாள்.

ச்சே சொல்லிவச்சாபோல ஒன்னு கூட காலியா வரமாட்டேன்குதே ? என பொருமினாள்.

ஆடி தள்ளுபடியில் நேற்று எடுத்த புடவைக்கு ஜாக்கெட் தைக்க வேண்டும்
தவிர பழைய குக்கரை போட்டு விட்டு புதுசு வாங்க வேண்டும்...

நேற்று மீனாவோடு வந்திருந்ததால் அலுப்பு தெரிய விலை ...

பழைய குக்கரை வேறு கையேடு கொண்டு வந்திருந்தாள் .
இப்ப என்ன செய்வது ...

அதே ஆட்டோகாரனிடம் போக வேண்டியது தான் ...

ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

இப்பல்லாம் தி.நகர் -ல சவாரி ஏத்த போலீஸ்காரன் எங்க உட்றான் ...
ஆட்டோ கொஞ்சம் நிக்க கூடாது வெரட்டிகிட்டே இருக்கான்... என ஆட்டோ காரன் பேசிக்கொண்டு வந்தான் .

ஆனால் பேரத்தில் தோற்றுவிட்ட அம்புஜமாளின் காதில் எதுவும் விழவில்லை .

ஆட்டோ கார பயலுகளே ! பகல் கொள்ள தான் அடிக்கிறான்க . என் நினைத்து கொண்டாள்.

போகும் போதே குப்பையா தெருவில் இருந்த டெய்லரிடம் ஜாக்கெட் துணியை
கொடுத்து விட்டு தி.நகர் ரங்கநாதன் தெருவின் ஆரம்பத்தில் இறங்கிக் கொண்டாள் .
ஆட்டோ காரனின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்து இருந்த பணத்தை கொடுத்து விட்டு கோபமாகவே முகத்தை வைத்து கொண்டு சென்றாள்.

பாத்திரக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது .
தான் கொண்டு வந்த பழைய குக்கரை கொடுத்து விட்டு புதிய குக்கரை பாத்து கொண்டிருந்தாள். ஒரு மணி நேர அலசலுக்கு பின்னர் ஒரு குக்கரை வாங்க முடிவு செய்தாள்.
பழைய குக்கருக்குன்டான தள்ளுபடி போக மீத முள்ள பணத்திற்கான
பில் வந்தது . பில்லை கொடுக்க பணத்தை எடுக்க பர்சை பார்க்கும் போதுதான் தெரிந்தது பர்ஸ் இல்லை என்று.

அடக்கடவுளே பர்ஸ் எங்கே போச்சி ?

ஆட்டோவிலே விட்டோமா ? அல்லது வர்ற வழியில கூட்டத்தில அடிச்சிட்டாங்களா ?

டெய்லரிடம் ஜாக்கெட் கொடுக்கும் போது கிழே விழுந்து விட்டதா ?

குழப்பத்தில் மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கும்போது வைத்திருந்தோமா? இல்லையா ?
என்பதை கணிக்க கடினமாக இருந்தது . மனது முழுவதும் கோபமே
நிறைந்திருந்தால் அப்போது நடந்தவற்றை மனதில் முன்னிறுத்தி பார்க்க முடியவில்லை.
கடையின் கேஷ் கவுண்டரில் இருந்தவனுக்கு அம்புஜமாளின் முகத்தில் இருந்த கலவரம் விஷயத்தை புரிய வைத்திருந்தது .

என்ன மேடம் பில்லு போடுறத்துக்கு முன்னாடி கேஷ் இருக்குதான்னு செக் பண்ணிக்க வேணாமா ? என்றான்.

அம்புஜத்திற்கு கண்ணிற் வெளிவர ஆரம்பித்தது .

ஒரு வேலை கடையில் விழுந்து கிடக்கிறதா ? என்று கீழே குனிந்து தேடி பார்த்துக் கொண்டே நடந்தாள்.

எங்கேயும் கிடைக்காமல் போகவே . தன்னுடைய பழைய குக்கரை வாங்கி கொண்டு அவமானமும், சோகமும் முகத்தில் அப்பிக்கொள்ள என்ன செய்வது என்று நினைத்தவளுக்கு மீனாவிற்கு செல் பண்ணலாம் என்று தோன்றியது.

ஆபீஸில் இருக்கும் கணவனையோ , காலேஜில் இருக்கும் மகனையோ கூப்பிடுவதை விட மீனாவை கூப்பிடுவதுதான் எல்லா வகையிலும் சவ்கரியம் .

ஆனால் அவளும் இன்று வெளியே போவதாக சொன்னாளே என நினைத்தவள் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் போன் செய்தாள்.

மீனா வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது . அதற்குள் அம்புஜம் நடந்து வெளியே வந்து திநகர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள்.

எப்படிக்கா ஆச்சி ? நீ ரொம்ப ஜாக்கிரதையா இருப்பியே?

ஆட்டோ காரன் மேல இருந்த கோவத்திலே வந்தேன் . கடையில வந்துதான்
பாத்தேன் . பர்ஸ காணல எவ்வளவு அவமானமா போச்சி தெரியுமா ?
பேசாம உன்கூடவே நாளைக்கு வண்டியில வந்திருக்கலாம் .
இப்படி பணத்த தொலைக்க தான் ரொம்ப அவசர பட்டிருக்கேன். என அழுதாள்.

அழாதக்கா ! இப்ப என்ன பண்ணலாம் .

போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா ?

கொடுத்தா மட்டும் எப்படி கண்டு பிடிப்பான் ?
எங்க தொலைஞ்சதுன்னு சொல்லுறது? என புலம்பினாள் .

அக்கா
, நாம இப்ப அந்த டெய்லர்கிட்ட போயி ஒரு வேளை அங்க இருக்குதான்னு பாப்போம் . என்றாள் மீனா .
ஆனால் டெய்லரும் இங்கு விழவில்லை என்று சொன்னான்.

இப்ப என்னக்கா பண்றது ... போலீஸ ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து வைப்போம் வா என்று கூப்பிட்டு போனாள்.

ஹெட் கான்ஸ்டபில் எல்லா விவரங்களையும் கேட்டு விட்டு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொன்னார். கம்ப்ளைன்ட் எழுதி கொடுப்பதில் எந்த பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை என்பதால் பெயருக்கு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள் .

அம்புஜமாளுக்கு ஆட்டோ காரனை நினைத்தால் இன்னமும் கோபம் கோபமாய் வந்தது. கிளம்பும் போதே தகராறு பண்ணான் காரியமே விடியல என் நினைத்தாள்.

அவர்கள் வெளியே வந்ததும் மீனா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் போது ஒரு ஆட்டோ வந்து நின்றது . அதிலிருந்து அந்த ஆட்டோ டிரைவர் அவசர அவசரமாக இறங்கினான் . அவன் அம்புஜம் இதுவரை திட்டி கொண்டிருந்த டிரைவர் .
என்னமா பர்சு காணலியா ?
பர்ஸ பத்ரமா வச்சிக்க கூடாதா? வண்டியில கிடந்தது . நான் பாத்ததால போச்சி சவாரி ஏர்ரவங்க யாரவது பாத்து இருந்தா அம்ம்புட்டு பணமும் போயிருக்கும் .
உங்களால நான் சவாரிய கூட ஏத்தாம வரேன் .

போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கத்தான் வந்தேன் . என்ன கம்ப்ளைன்ட் கொடுத்திட்டிங்களா என்றான். சரி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்திட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிடுங்க . நான் வர்ர்றேன் .

என்ன பெட்ரோல் செலவுதான் எனக்கு ? என்று புலம்பிக்கொண்டே ஆட்டோவிடம் சென்றான்.

கொஞ்சம் இருப்பா? என்று சொன்ன அம்புஜம் உள்ளே சென்று கம்ப்ளைன்ட் ஐ வாபஸ் வாங்கி விட்டு வந்தவள் மீனாவிடம் போய் எதோ பேசி விட்டு ஆட்டோ டிரைவரிடம் வந்து வடபழனிக்கு போப்பா என்றாள்.

வரும் போது இதே ஆட்டோவில் இதே ஆட்டோக்காரனை கொள்ளை காரனாய் நினைத்து மனதிற்குள் திட்டிக்கொண்டே கோபமாக வந்தவள், இப்போது அதே ஆட்டோவில் அதே ஆட்டோகாரனை பற்றி பெருமையாக நினைத்து சந்தோஷமாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள் .

...

10 comments:

டக்ளஸ்... said...

நல்லாருக்கு பாஸ்.

Suresh Kumar said...

நல்லாருக்கு பாஸ்.

little boy said...

வருகைக்கு நன்றி டகளஸ்

little boy said...

வருகைக்கு நன்றிசுரேஷ்

குரு said...

கதையில் முதல் பாதியில வர்ற ஆட்டோகாரன மாதிரி ஆட்கள பாத்தா கண்டந்துண்டமா வெட்டி போடணும்னு தோணுது. ஆனா பின்னாடி வர்ற ஆட்கள பாத்தா கை எடுத்து கும்பிடணும்னு தோணும்...

தமிழன் வேணு said...

நண்பரே, தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் இறங்கியபிறகு, நான் அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி வாசலில் பிடித்த ஆட்டோவில் கைபேசியை விட்டு விட்டது நினைவுக்கு வந்தது. உடனே எனது எண்ணை அழைத்ததும்,’ஐயா, உங்களது கைபேசி பத்திரமாக இருக்கிறது. நான் இப்போது மாம்பலத்தில் இருக்கிறேன். ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் ஏறின இடத்துக்கே வந்து வாங்கிக்கொள்ளுங்கள்,’ என்று ஒருவர் என் வயிற்றில் பால் வார்த்தார். இன்னும் மிகவும் நேர்மையான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நினைவுபடுத்திய உங்களது சிறுகதைக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழன் வேணு

little boy said...

தங்கள் வருகைக்கு நன்றி குரு

little boy said...

தங்கள் வருகைக்கு நன்றி தமிழ் வேணு

cheena (சீனா) said...

கதை நன்றாக இருக்கிறது - முடிவு தெரிந்ததுதான் - எதிர்பாராமல் வரும் முடிவு இல்லை

நல்ல கதை நல்வாழ்த்துகள்

little boy said...

அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா