Thursday, May 28, 2009

ராஜபக்சேவும் நியுட்டனின் மூன்றாம் விதியும் !!

ஒவ்வொரு வினைக்கும், எதிர் வினை உண்டு என்பதுதான் நியுட்டனின் மூன்றாம்விதி. தலைவிதியை நம்பாதவர்கள் கூட நியுட்டனின் விதியை நம்புவதுண்டு ஏனென்றால் அது அறிவியல்.

விடுதலை புலிகளுடனான இந்த கடைசி கட்டப் போரை ஆரம்பித்ததிலிருந்து மனித உரிமைப் பற்றி கொஞ்சம் கூட
கவலையேப் படாமல் அப்பாவி பொது மக்களை துவம்சம் செய்வதில் மனம் குளிர்ந்த ராஜபக்சேவிற்கு இப்போது உலக நாடுகள் சபையில நற்சான்றிதழும் வழங்கப்பட்டாயிற்று .

இனிமேல் அங்கு நடக்கும் அவலங்களுக்கு கேள்வி கேட்பார் இருக்கப்போவதில்லை. இப்போதைய உலக பெரிய அண்ணன் சீனாவும் , சின்ன அண்ணன் இந்தியாவும் தங்களின் கறை படிந்த கரங்களினால் இலங்கையை காப்பற்றி புண்ணியம் சேர்த்து கொண்டுள்ளன . அமெரிக்க, பிரிட்டன் நாடுகள் கூட இந்த குட்டி நாட்டின்முன் தோற்றுள்ளன. தமிழகத்தின் காகித புலிகளும் கர்ஜித்து ஓய்ந்தாயிற்று . சிங்கள காடையர்களின் பெருந் கூச்சல்தான் ஓயிந்தப்பாடில்லை . ஆனால் ஒருவிஷயம் மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் .


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு !

நியுட்டனின் மூன்றாம் விதி இதுவரை தோற்றதாக வரலாற்றிலும் ஏன் அறிவியலிலும் சான்று இல்லை .

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா