Thursday, May 21, 2009

இலங்கை தமிழரின் இப்போதைய தேவை ஓர் உலகளாவிய அரசியல் தலைவனே!

இப்போது மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக அலைந்து கொண்டு இருக்கிறான் தமிழன் . யாராவது வருவார்களா வந்து நம்மை காப்பார்களா என ஒவ்வொரு கதவாக தட்டி பர்ர்த்தும் உலக சமுதாய மக்கள் பாரா முகம் காட்டியே இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் செத்தழிய உறுதுணையாக இருந்துள்ளனர் . மனித உரிமை , போர்குற்றம் , உலக நாடுகள் சபை இவை எல்லாம் கேலிக் கூத்தாகிபோயுள்ளது . ஒரு சிறிய நாட்டை கூட தன் அதிகாரத்தால் பணியவைக்கமுடியாத ஒரு உலக நாடுகள் சபை இருந்துதான் என்ன பயன். எங்கள் நாட்டின் பிரச்சனையில் தலை இட வேண்டாம் என்கிறார் இலங்கை அதிபர், பிறகு தங்கள் நாட்டிற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்கிறார் . இலங்கைக்கு தாங்கள் விடுத்த வேண்டுகோள்களும், எச்சரிக்கைகளும் காற்றில் பறக்க இப்போது உலக நாடுகள் எல்லாம் கெர்ஜிக்கும் காகித சிங்கங்களாக தோன்றுகின்றன . . எல்லாம் முடிந்தது வெற்றி நாம் அடைந்தோம் , சாத்தான் தோற்று போனான் என் கொண்டாட்டம் நடக்கிறது. இனியும் ஒரு உலக சமுதாய சடங்கு பாக்கி உள்ளது, அது உலக சபைகளின் பிரதிநிதியாக சிலர் வந்து இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்குவதுதான் . இந்த சூழ்நிலையில் உலக தமிழ் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓர் தலைமை தேவை படுகிறது . நாம் ஓங்கி வளர்ந்திருக்கின்றோம் , உலகம் முழுவதும் பரவி இருக்கின்றோம் ஆனால் ஒற்றுமை நம்மில் இழந்தது காணப்படுகின்றோம் . உலகம் முழுவதிலும் ஆங்காங்கு போராட்டம் ஒவ்வொரு விதமாக நடத்தி பயன் ஏதும் இல்லாமல் போனதிற்கு காரணம் தமிழ் சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் போராடததுதான் எனலாம். இலங்கை தமிழர்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் ஓர் உலகளாவிய தலைவனே இப்போது உடனை தேவை.

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா