Tuesday, May 26, 2009
""அந்தப்பார்வை ""
அந்தப்பார்வை என்றதும் எதோ விஷமத்தமான பர்ர்வையை பற்றி நான் எழுதப்போகிறேன் என்று இந்த பதிவை சுட்டி இருந்தீர்கள் என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.
டைனசோரின் குட்டி பதிப்பான ஓணானுக்கு நான் செலுத்தும் அஞ்சலி தான் இந்த பதிப்பு .
"கேஸ்ட அவே" ஹாலிவுட் படத்தில்தனித் தீவில் இருக்கும் டாம் ஹாங்க்ஸ் ஒரு கால் பந்திற்கு முகம் வரைந்துஅதற்கு வில்லியம்ஸ் என்று பெயர் வைத்து அதனோடு பேசிக்கொண்டுஇருப்பார். கடலில் அவர் தப்பித்து போகுகும்போது அது தண்ணீரில் விழுந்துவிட அழுது புலம்புவாரே அதுப் போலத்தான் இதுவும்.
மூன்று வருடங்கள் இருக்கும் என் நினைக்கிறேன் . எங்கள் வீட்டு சாத்துக்குடி மரத்தில் வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக ஒரு ஓனான் தங்கி இருந்தது . முதலில் அதனை நான் கவனத்தில் கொள்ளாவிட்டாலும் பிறகு நாளடைவில் அதனை நான் கவனிக்க ஆரம்பித்தேன் . ஞாயிற்று கிழமைகளில் சாயங்கால வேளைகளில் நான் தோட்டத்தில் நிற்கின்ற போது இந்த ஓணானும் தலையை தூக்கி பார்ப்பதும், தலையை முன்னும் பின்னும் ஆட்டுவதும் பிறகு வேலியில் ஓடி விடுவதுமாக இருந்தது . சாத்துக்குடி மரத்தில் இருக்கும் .என்னைப் பார்த்தும் இருந்த இடத்திலேயே கொஞ்சம் நகர்ந்து மறைந்தது கொள்ளும் . தோட்டத்தில் ஏதேனும் குட்டி பூச்சிகள் மாட்டினால் அப்படியே லபக்கி கொள்ளும் . அதே போல் நான் காலையில் வேலைக்கு கிளம்பும் போதும் வீட்டு பக்கத்தில் இருந்த உடைந்து போன அந்த குட்டி சுவரின் கல்லுகளில் தலையை தூக்கி பார்க்கும் என்னை பார்த்ததும் மறைந்து கொள்ளும் . நான் காலையில் அவசரத்தில் கிளம்பும்போது இதனைப்பற்றி நினைக்காவிட்டாலும் வெளியே வந்ததும் அதனை கவனிக்க தவறுவதில்லை . தினமும் இதுவே ஒரு வேடிக்கையாகத்தான் எனக்கு இருந்தது . எனக்கும் இந்த ஒநானுக்கும் ஏதோ ஒரு புரிதல் இருந்தது போலத்தான் தோன்றியது . ஆனால் அன்று காலை நான் சட்டையை மாட்டி கிளம்பிக்கொண்டு இருக்கும்போது நான் கண்ட காட்சி என் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விட்டது . தினமும் எனக்கு தலையை ஆட்டி விடை கொடுக்கும் அந்த ஓணானின் கழுத்தை எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பூனை ஒன்று கவ்விக்கொண்டு வெற்றியுடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தது . தலை கீழ்' யு 'வடிவில் தொங்கிய அந்த ஒனானின் பார்வையோ என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தது . அது நான் ஏதாவது செய்து அதை காப்பாற்றுவேன் என்று பார்த்ததா அல்லது அது தொங்கி கொண்டிருந்த அந்த போஸில் வேறு வழி இல்லாமல் அப்படி பார்த்ததா எனக்கு தெரிய வில்லை .ஆனால் அந்த பார்வையில் ஒரு இயலாமை ,ஒரு வெறுமை , இனி என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்ற கையறு நிலை இருந்தது . சரணாகதி என்பார்களே . நாம் முடிவு எடுக்க முடியாமல் கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் பார்க்கின்ற பார்வைதான் அது . என் மனது கேட்காமல் ,நானும் ஏதாவது செய்யலாம் என் நினைத்து போவதிற்குள் அந்த பூனையும் ஓணானை கவ்விக்கொண்டே ஓடிவிட்டது . கண்முடி திறப்பதற்குள் சில வினாடிகளில் இவை எல்லாம் நடந்து முடிந்து விட்டது .நான் வேலைக்கு கிளம்பும் அந்து அவசரத்திலும் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்துவிட்டது . இப்போது அந்த சாத்துகுடி மரமும் ,குட்டி சுவரின் உடைந்த கற்களும் எனக்கு வெறுமையாக தோன்றியது . அடுத்து வந்த சில நாட்கள் நான் அந்த இடத்தை பார்த்து கொஞ்சம் விசனப்பட்டேன் . நாளாக நாளாக அது மறந்து விட்டது . ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த ஓணான் இயலாமையுடன் வேறு வழி இன்றி பார்த்த அந்தப்பார்வை இன்னமும எனக்கு மறக்க வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment