Wednesday, May 27, 2009

அரச்ச மாவ அரைப்போமா ? பாட்டி சுட்ட வடை !!



குறிப்பு: சினிமாவில் எப்போது அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறார்களே ! நாமும் கொஞ்சம் அரைத்து பார்த்தால்தான் என்ன ? என நினைத்ததன் விளைவு தான் இந்த கற்பனை.
எப்போதும்
போல் அந்த மரத்தடிக்கு சுள்ளி பொருக்கி வந்து ,எண்ணெய் கரை போக வாணலியை கழுவி வைத்து விட்டு அடுப்பை முட்டிக்கொண்டு இருக்கும்போது , மன்னரிடத்தில் இருந்து வந்திருக்கும் ஆட்கள் வடை சுடும் பாட்டியின் இடம் எது என்று தேடிக்கொண்டிருப்பதாக பூ விற்கும் குழலி சொல்ல ,என்னமோ ஏதோ என்று பாட்டி பதறி கொண்டிருக்கும்போதே அவர்கள் வந்தே விட்டார்கள்.

இங்கு வடை சுடும் பாட்டி நீ தானா? என அவர்கள் கேட்க அமாம்! என்றாள்.
வேறு யாரவது இந்த ஆலமரப்பட்டியில் வடை சுட்டு விர்ர்கிரார்களா ? என கேட்க இல்லை நான் மட்டும் தான் விற்கிறேன் என்றவள், ஏன் என்கிற சந்தேகத்தோடு பார்த்தாள் அவர்களை .

நாங்கள் மன்னரிடத்தில் இருந்து வருகிறோம் . அடுத்து வாரம் மன்னர் அரண் மனையில் நடக்கும் விருந்திற்கு ஆயிரம் வடைகள் தேவைப்படுகிறது. நீ அங்கு வந்து செய்து கொடுக்க வேண்டும் . உன்னை குதிரை வண்டியில் கூட்டி சென்று , விழா முடிந்ததும் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் . உனக்கு தேவையான பொற்காசுகளும் வழங்கப்படும் . இது மன்னருடைய ஆணை . எனக் கூறி விட்டு சென்று விட்டனர் .

இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அதுவும் மன்னரிடத்திலிருந்து வரும் என்று எதிர்ப் பார்க்காத பாட்டி ஆச்சர்யத்தில் முழ்கிப்போனாள் .

இப்படி ஒரு வாய்ப்பு எப்படி வந்தது பாட்டிக்கு? இத்தனை தெரிந்து கொள்ள நாம் ஒரு வாரத்திற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் .

அன்றும் அப்படி தான் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் . வெற்றிலை எச்சிலை துப்ப சென்று வருவதற்குள் எங்கிருந்தோ வந்த காக்கை ஒன்று ஒரு வடையை தூக்கி கொண்டு ஓட, பாட்டியும் அதனை துரத்தி விட்டு கோபத்தில் இருந்தாள். இனி இந்த காக்கை வரட்டும் என்ன செய்கிறேன் பார் என நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அந்த காக்கையோ நரியினிடத்தில் வடையை பரி கொடுத்து விட நரியும் அந்த வடையை எடுத்துக் கொண்டு ஓட , அப்போது பார்த்து அந்த காட்டிற்கு வேட்டையாட வந்தார் நம் மன்னர் . மன்னரின் ஆட்களை பர்ர்ததும் வடையை போட்டு விட்டு நரி ஓட மன்னரின் ஆட்களில் ஒருவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். அவனுக்கு தெரியும் காட்டுக்கு வேட்டை யாட வரும் போது எந்த உணவு பொருளையும் வீணாக்க கூடாது என்று . ஏனென்றால் திடீரென உணவு இல்லாமல் போகலாம் .

அவன் நினைத்ததை போலவேதான் நடந்தது . மான்னருக்கு வேட்டைக்கு ஒன்றும் மாட்டததால் நேரம் ஆக ஆக கொண்டு வந்த உணவு பொருட்கள் எல்லாம் தீர்ந்து போயின . மன்னருக்கு திடீரென பசி உண்டாகவே . சுற்றும் முற்றும் ஏதேனும் பழங்கள் கிடைக்கிறதா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காமல் போகவே மன்னரும் பசியில் சிங்கத்தைப்போன்று கர்ச்சித்துக் கொண்டிருந்தார் . அப்போது மன்னரின் ஆட்களில் ஒருவன் தான் நரியிடமிருந்து எடுத்த வடையை பற்றி கூற வேறு வழி இல்லாமல் மன்னரும் தின்று பார்க்க , ஆஹா என்ன சுவை ! என்ன சுவை !என்று மகிழ்ந்த மன்னர் இது எங்கிருந்து வந்தது , இதனை சுட்ட அந்த கைப்பக்குவம் யாருடையது என்று கண்டறிய ஆட்களை அனுப்பினார் .

அவர்களும் கண்டுவந்து சொல்ல பாட்டிக்கு மிகப்பெரிய ஒரு வியாபார வாய்ப்பு வந்தது .

வெற்றி எப்போதும் முகமுடி அணிந்து தான் வரும் .

2 comments:

சகாதேவன் said...

புது மாவுதான்.
நான் அரைக்கிறேன் பாருங்க.

ஒருநாள் காக்கா வடையை எடுத்துக்கொண்டு மரத்தின் மேலே இருக்கும்போது வந்த நரி வழக்கம் போல காக்கா, காக்கா நீ நன்றாக பாடுவாயாமே, எங்க தாத்தா சொன்னார். ஒரு பாட்டு பாடேன் என்று சொல்லி வடை விழுமான்னு பார்த்துக்கொண்டிருந்தது. உஷாரான காக்கா, நரியாரே, எங்க தாத்தாவோட தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? என்று சொல்லி வடையை கிளையில் வைத்து காலால் பிடித்துக் கொண்டு கா கா கான்னு பராசக்தி பாட்டை பாடிவிட்டு வடையுடன் பறந்தது
சகாதேவன்

payapulla said...

நண்பர் சகாதேவன் நீங்கள் இந்த பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
நீங்களும் அரச்ச மாவையே திரும்ப அரைப்பதில் கில்லாடிதான் போங்கள்.

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா