சாகசம் என்பது கேள்விபடுவதை போன்று அப்படி ஒன்றும் இனிமையானதாக இருப்பதில்லை அதனை செய்யும்போது .
புலி தலைவரை பற்றி வரும் செய்தியும் அதனை உறுதி செய்வதாகத்தான் உள்ளது. இந்தியாவில் நாம் நல்ல பாதுகாப்பாக இருந்து கொண்டு இலங்கை பிரச்னையை ஒரு மர்ம நாவலை படிக்கும் கோணத்தில் தான் அணுகுகின்றோம் என எண்ணுகின்றேன் . நான் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் இந்த பதிவை பொறுத்துகொள்ளவும் .
ஆனால் ஒரு சில கசப்பான உண்மைகளும் நம் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். இன்று நான் தட்டச்சு செய்யும் இந்த நேரத்தில் பஞ்சாப்பில் கலவரம் என இந்தியா முழுவதும் தலைப்பு செய்தியாக உள்ளது . அதற்கு காரணம் ஆஸ்த்ரியாவில் உள்ள குருத்வாராவில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கி சூடு . இப்போது பஞ்சாப் எரிகிறது .
அடுத்து இந்திர காந்தி கொலையை தொடர்ந்து நடை பெற்ற சீக்கியர் கொலையில் ஜகதிஷ் டைட்லர் மீது இருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்க பட்டதும் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மீது செருப்பு வீசப்படுகிறது . டைட்லர் தேர்தலில் நிற்காமல் போகிறார் .
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சீக்கியர் மீது ஜெசியா வரியை தாலிபான்கள் விதிக்கின்றனர் . உடன் நம் அரசு அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லாமல் பாகிஸ்தானை உடனே நடவடிக்கை எடுக்க சொல்கிறது.
ஆனால் இலங்கை விவகாரம் என்று வரும் போது அது அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை ஆகிவிடுகிறது.
நாமும் பிளாகில் முன்னுட்டமும் ,பின்னுட்டமும் போட்டுகொண்டு தான் இருக்கின்றோம் ஆனால் என்ன சாதித்தோம் என்று தான் தெரிய வில்லை. புலித்தலைவரின் மரணமும் அப்படியான ஒரு மாயை யாகிவிடுமோ என்று தெரியவில்லை.
இதுவரை அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சனயில் தங்களுக்குள்தான் அடித்து கொண்டன , இப்போது பிரபாகரன் மரண செய்தியில் இலங்கை மக்களுடனும் , முரண் படுகின்றனர். சிலநாட்கள் வரையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொன்ன பத்மநாபன் இப்போது அவர் வீர மரணம் அடைந்து விட்டார் என்று சொல்லுகிறார்.
எது எப்படி ஆனாலும் போருக்கு பிந்திய சூழலில் வரும் தகவல்களை பார்க்கும்போது ,புலிகள் தங்களின் பலமான (கொரில்லா) போர் முறையை பின்பற்றாமல் சர்வதேச நாடுகள் தங்களை காப்பாற்றிவிடும் என்று நம்பித்தான் தோற்றுள்ளதாக தெரியவருகிறது.
தங்கள் தலைமையை காப்பாற்றினார்களா ? இல்லையா? என்பது இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் தெரிய வரலாம் . ஒரு வேலை தவறி இருக்கும் பட்சத்தில் புலிகள் மிகப் பெரிய குறைபாடான ராணுவ தந்திர முறையை பின்பற்றியுள்ளதகதாகத்தான் தெரிகிறது.
போர்ச்சுழலில் இலங்கை போர்த்தந்திரங்களை சரியாக கணிக்காமல் உள்ளதும் புலப்படுகிறது . எப்போதும் இல்லாத ஒரு மிதமான தன்மை இம்முறை புலிகள் காட்டியதாக தெரிகிறது .
கிளிநொச்சி விழுந்ததும் அவர்கள் கொரில்லா போர்முறைமைக்கு மாறுவார்கள் என சொல்லப்பட்டு வந்ததுக்கு மாறாக அவர்கள் பாரம்பரிய முறையிலேயே போர் புரிந்தது ஆச்சர்யம் அளிப்பதாக தான் இருந்தது. கிளிநொச்சிக்கு பிறகு இலங்கை ராணுவத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியதாக தெரிய வில்லை. இலங்கையின் சிறிய பரப்பளவில் குறுகிவிட்ட பிறகு வெளி உலக தொடர்பு அவர்களின் கட்டுப்பாடில் இல்லாதது தெரிகிறது .
வெளி உலகிலிருந்து என்ன வருகிறதோ அதை நம்பவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ள பட்டு இருந்தது தெரிகிறது. வெளி உலகில் தொடர்பில் இருந்தவர்களின் உண்மை தன்மை தெரியாத சூழ்நிலையில் தான் நடேசனும் புலித்தேவனும் சரணடைய ஒத்து கொண்டு சென்றுள்ளனர்.
ஒரு சாதரண தொழில் செய்யும்போது கூட அந்த தொழில் செய்யும் தலைவர் செய்யும் தொழிலின் சந்தை நிலவரம் எப்படி உள்ளது என்று உண்ணிப்பாக கவனித்து வரவேண்டும் . இல்லா விட்டால் மாறிவரும் சுழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரலாம்.
சாதரண தொழிலுக்கே இப்படி என்றால் இலட்ச கணக்கான மக்களின்
வாழ்க்கை ,உரிமை மற்றும் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஒரு அமைப்பு எப்படி விழிப்புணர்வோடு நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும் .
கிட்ட தட்ட ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்த புலிகள் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னான காலகட்டத்தையும் ,
சிங்கள அரசுடனான கருணாவின் தொடபையும் ,
ராஜபக்சே அரசு பதவி ஏற்றதற்கு பின்னான நிகழ்வையும் கவனிக்காமல் விட்டு விட்டனர் .
இலங்கை அரசு முதலில் ராஜதந்திரத்தில் தோற்கடித்து விட்டு தான் போருக்கு இறங்கியது.
ஒரு வேலை பிரபாகரன் உயிரோடு இருந்தாலும் இனி அவரால் என்ன செய்ய முடியும் என்பதும் கேள்விக்குறியே . அவர் மீது இன்டர்போல் வாரண்ட் உள்ளது . இலங்கை விட்டாலும் , இந்தியாவிடம் மாட்ட வேண்டி வரலாம் .
இலங்கையில் இருந்ததை போன்று மாற்ற நாடுகளின் சுதந்திரமாக இருக்க முடியாது. இப்போது பாராளுமன்றத்தில் காங்கிரசிற்கு இருக்கும் பலத்தினால் , தமிழக கட்சிகளின் பிடிமானம் குறைந்து உள்ளது.
இன்று பிரபாகரன் என்று எழுதி கொண்டிருக்கும் நான் அவர் உயிரோடு இருப்பாரானால் அவர் முன்னால் நின்று பேசி இருக்க முடியுமா என்று தெரிய வில்லை.
அவர் இறந்து விட்டார் என்பதை நம்பமுடியாமல் இருக்கின்றோம். உயிரோடு இருக்கின்றார் என்பதையும் உறுதி படுத்த முடியாமல் உள்ளோம் .
ஆதர்ச புருசனாய் நம் மனதால் ஏற்று கொள்ளப்பட்ட ஒருவனின் மரண செய்தியை நம்புவதற்கு திராணி இல்லை நம்மிடத்தில்.
போர்க்களத்தில் அவருக்கு உண்டான பிரச்சனைகள் என்ன ? வீர மரணம் அடைந்தாரா? அல்லது வேதனையோடு தப்பித்து போனாரா ? என்று தெரிய வில்லை.
சாகசங்களை படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் அதனை செய்யும் போது இருப்பதில்லை .
No comments:
Post a Comment