அலசி போட்ட பாவாடையும் ,ரவிக்கையும் என்று காயும் என் வீட்டு கொடியில்!
கசங்கிப்போன மல்லிகை சிதறல் என்று கிடக்கும் என்வீட்டு குப்பையில்!
வீட்டை கூட்டி ,வாசல் தெளிக்கும் மெல்லிசை என்று கேட்டிடும் என் காலை பொழுதில்!
உறக்கம் தெளிந்ததும் தேனிர் அருந்தும் உவகை என்று கிடைத்திடும்!
மோகம் தீர்ந்த ஆழ்ந்த உறக்கம் என்று என் இரவு கண்டிடும் !!
No comments:
Post a Comment