Showing posts with label மனச்சாட்சி. Show all posts
Showing posts with label மனச்சாட்சி. Show all posts

Wednesday, June 3, 2009

ஈழ பிரச்சனையும் என் தேசப்பற்றும்

இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு சம்பவம் நடந்தாலோ அல்லது நடப்பதாக கேள்விபட்டாலோ நான் கொதித்து போய்விடுவது சகஜம் . நாள்முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பேன் .

மும்பை குண்டு வெடிப்பு , விமான கடத்தல் ,கார்கில் போர் , பாராளுமன்ற தாக்குதல் , மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற சமயங்களில் பல நாட்களில் இதே நினைப்பாகவே இருந்ததுண்டு . இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் அதனால் நம் நாட்டிற்கு என்ன இழப்பு ஏற்பாட்டாலும் , நம் மீது விழுந்திருக்கும் " கோழை நாடு" என்கிற அவப் பெயரை மாற்றியே ஆக வேண்டும் என் நினைப்பேன்.

நம் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் ஒவ்வொரு முறையும் பூச்சாண்டி காட்டிவிட்டு வழக்கம் போல தங்கள்
"மாமுல் " வாழ்க்கையில் தங்களை அர்ப்பணித்து கொண்டிருப்பர். (சென்ற வருடம் மும்பையில் தீவீர வாதிகள் தாக்குதலுக்கு பிறகு நம் வெளியுறவு துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் எல்லா ஆப்ஷன்களும் பரிசிலனையில் உள்ளன என சொல்லியே காலத்தை ஒட்டினாரே அதுபோல ).

இதே கோபம்தான் எனக்கு இலங்கை பிரச்சினையிலும் ஏற்பட்டது . இந்திய அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என் நினைத்தேன் . ஆனால கடைசிவரை தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல் பட்டு இப்போது ஐ .நா. சபையிலும் இலங்கையை காப்பாற்ற அரும் பாடு பட்டு வருவது எனக்கு மிகவும் அதிக மன உளைச்சலை கொடுக்க ஆரம்பித்தது . அது தவிர வட இந்தியா சானல்களும் தமிழர்களுக்கு எதிராகவே செய்தியை வெளியிட்டு வந்தன .இலங்கை பிரச்சனையில் இந்தியா சக இந்தியனின் உணர்வுகளை மதிக்க வில்லை என்றே கருத ஆரம்பித்து விட்டேன் .


இப்போது இந்தியாவிற்கு எதிரான செய்தியை பார்க்கிறேன் ஆனால் அது ஏன் என் மனதை பாதிக்கவில்லை என்று தெரியவில்லை . ஒரு வேளை என் தேச பற்று இலங்கை பிரச்சனையால் தேய்ந்து விட்டதா ?

நான் இப்போது படித்த,பார்த்த செய்தி :

மும்பை தாக்குதல் தீவீரவாதிகளுக்கு மூளையாக இருந்து செயல் பட்ட
லஸ்கர் தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் முகமது சயீத் என்பவன் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டான் என்பதே .

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா