Wednesday, June 3, 2009

ஈழ பிரச்சனையும் என் தேசப்பற்றும்

இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு சம்பவம் நடந்தாலோ அல்லது நடப்பதாக கேள்விபட்டாலோ நான் கொதித்து போய்விடுவது சகஜம் . நாள்முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பேன் .

மும்பை குண்டு வெடிப்பு , விமான கடத்தல் ,கார்கில் போர் , பாராளுமன்ற தாக்குதல் , மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற சமயங்களில் பல நாட்களில் இதே நினைப்பாகவே இருந்ததுண்டு . இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் அதனால் நம் நாட்டிற்கு என்ன இழப்பு ஏற்பாட்டாலும் , நம் மீது விழுந்திருக்கும் " கோழை நாடு" என்கிற அவப் பெயரை மாற்றியே ஆக வேண்டும் என் நினைப்பேன்.

நம் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் ஒவ்வொரு முறையும் பூச்சாண்டி காட்டிவிட்டு வழக்கம் போல தங்கள்
"மாமுல் " வாழ்க்கையில் தங்களை அர்ப்பணித்து கொண்டிருப்பர். (சென்ற வருடம் மும்பையில் தீவீர வாதிகள் தாக்குதலுக்கு பிறகு நம் வெளியுறவு துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் எல்லா ஆப்ஷன்களும் பரிசிலனையில் உள்ளன என சொல்லியே காலத்தை ஒட்டினாரே அதுபோல ).

இதே கோபம்தான் எனக்கு இலங்கை பிரச்சினையிலும் ஏற்பட்டது . இந்திய அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என் நினைத்தேன் . ஆனால கடைசிவரை தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல் பட்டு இப்போது ஐ .நா. சபையிலும் இலங்கையை காப்பாற்ற அரும் பாடு பட்டு வருவது எனக்கு மிகவும் அதிக மன உளைச்சலை கொடுக்க ஆரம்பித்தது . அது தவிர வட இந்தியா சானல்களும் தமிழர்களுக்கு எதிராகவே செய்தியை வெளியிட்டு வந்தன .இலங்கை பிரச்சனையில் இந்தியா சக இந்தியனின் உணர்வுகளை மதிக்க வில்லை என்றே கருத ஆரம்பித்து விட்டேன் .


இப்போது இந்தியாவிற்கு எதிரான செய்தியை பார்க்கிறேன் ஆனால் அது ஏன் என் மனதை பாதிக்கவில்லை என்று தெரியவில்லை . ஒரு வேளை என் தேச பற்று இலங்கை பிரச்சனையால் தேய்ந்து விட்டதா ?

நான் இப்போது படித்த,பார்த்த செய்தி :

மும்பை தாக்குதல் தீவீரவாதிகளுக்கு மூளையாக இருந்து செயல் பட்ட
லஸ்கர் தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் முகமது சயீத் என்பவன் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டான் என்பதே .

5 comments:

நாமக்கல் சிபி said...

இன்னும் கூட ஒரு செய்தி!

ஆஸ்திரிலேயாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் படுவது!

இதுவும் என்னை பாதிக்கவேயில்லை! மாறாக நன்றாக உதைக்கட்டும் என்றே நினைத்துக் கொண்டேன்!

பிருந்தன் said...

இதுதான் ஒட்டு மொத்த தமிழரின் நிலையும்.

payapulla said...

ஒத்த கருத்துடைய தங்களின் வருகைக்கு நன்றி. நம்முடைய உணர்வுகள் உதாசின படுத்தப் பட்ட நிலையில் நம் எண்ணங்கள் மாறுபடுவது தவிர்க்க இயலாத தாகிவிடுகிறது .

அமுதன் said...

எனக்கு என்றுமே இந்தியன் என்ற உணர்வு இருந்தது கிடையாது. வடமாநிலங்களில் இருக்க நேருகையில், அவர்கள் தமிழர்களை அன்னியர்களாய் பாவித்தது எனக்கு நன்றாக் தெரியும். ஏதோ பிரிட்டீஷ் செய்த புண்ணியத்தில், பார்லிமெண்ட், M.P என்று இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு ஓட்டி வருகிறோம்.

பாண்டியன் said...

அண்ணே இன்று இந்தியா ஒட்டி கொண்டிருப்பது கீழ் கண்ட காரணங்கள் தான் இதில் எதாவது ஒன்றில் குழப்பினால் இந்தியாவை உடைத்து விடலாம்
1)இந்துயீசம்
2)கிரிகெட்டு
3)பாகிஸ்தான்
4)காசுமீரு
5)அரசியல் வியாதிகள்

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா