சென்னையிலும் மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் இருக்கும் ஆம்னி பஸ்கள் பண்டிகை மற்றும் விழா காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அராஜகம் செய்வதாக தினசரிகளில் படிப்பதுண்டு அதற்கான காரணங்கள்தான் என்ன?
வேறென்ன சொல்ல வழக்கமாக நம் அரசாங்க இயந்திரத்தின் கோளாறான நிர்வாகம்தான் . பொதுவாக எந்த ஒரு முதலாளியும் தன் நிறுவனம் நஷ்டத்தில் இயக்க விரும்புவதில்லை . அரசாங்க நிறுவனங்களில் கூட நிறுவனம் தான் நஷ்டத்தில் இயங்குமே ஒழிய நிறுவன முதலாளிகளான அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ நஷ்டத்தில் இருப்பதில்லை. சரி விஷயத்திற்கு வருவோம் .
எனக்கு தெரிந்து தென்னிந்தியாவில் தமிழகத்தில் தான் வாகனங்களின் மீதான வரி அதிகம் விதிக்கப்படுகிறது . ஒரு சீட்டுக்கு ஆயிரம் ருபாய் என் முப்பத்தாறு சீட்டுக்கு முப்பத்தாறாயிரம் ருபாய் கட்ட வேண்டி யுள்ளது . இதுவே பாண்டியில் ஒரு சீட்டுக்கு ஐநூறு ரூபாயும் , கர்நாடகத்தில் எழுநூற்று ஐம்பது ரூபாயும் வசுலிக்கப்படுகிறது . (இதனால் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இந்தமாநிலங்களில் தனது வண்டிக்கான பதிவை செய்து கொள்கின்றன ) இதை
தவிர டீசல் , வண்டிக்கான செலவு என் பார்த்தால் அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. இதுவும் வண்டியின் எல்லா சீட்டுகளும் நிரம்பினால்தான் இந்த கணக்கு. இதில் அதிகாரியின் வீட்டு கல்யாணத்திற்கு வண்டி , ஆளும் கட்சியின் கூட்டங்களுக்கான வண்டிகள் என இலவச சேவைகள் என்பது தனி கணக்கு .
இதை தவிர நடு ரோட்டில் நிறுத்தி வண்டியை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு தண்டம் என பல வழிகளில் இவர்களுக்கு சோதனை தான் . தனியார் பேருந்து வைத்து இருக்கும் முதலாளிகளின் எண்ணிக்கை குறைவு ( நம் நாட்டில் கூட்டமாக செய்ததால் கொலையும் புனிதம்) தவிர அவர்களிடம் ஒற்றுமை இன்மை ( கட்சி சார்ந்திருக்கும் சில முதலாளிகள் அரசை எதிர்த்து கேட்க வருவதில்லை) போன்ற வற்றால் இந்த தொழில் பலவிதங்களில் நசுக்கப்பட்டு வருகிறது.
இதைபோன்று எந்த விதமான தொந்தரவும் இல்லாத அரசாங்க பேருந்துகள் இந்த முறை தீபாவளி, பொங்கல் விடுமுறை நாட்களில் பேருந்து கட்டணத்தை சாதாரண நாட்களை விட அதிகமா வசுலித்திருப்பது எந்த விததிதில் நியாயம் என்று தான் தெரிய வில்லை.
No comments:
Post a Comment