Wednesday, November 26, 2014

தண்ணி அடிச்சா தப்பாமா திட்டராமா ஏன்மா ?


தண்ணி அடிச்சா தப்புதாமா!

சமீப காலமாக திரைப்படங்களில்  மது அருந்துவதை ஏதோ  ஒரு புனிதமான செயலாக  சித்தரிக்கும் வேலை நடந்துவருவதாக  தெரிகிறது . இது விடலை பையன்கள் மத்தியில் மது அருந்துவதை ஒரு ஜாலியான விஷயமாக ஏன்  நாகரிகமாக கூட மாற்றி விட்டது  எனலாம். தங்களுக்கு   பிடித்தமான கதாநாயகன்  தண்ணி அடிப்பதை  ஒரு காமடியான விஷயமாக செய்யும்போது  மது அருந்துவதை இந்த விசில் அடிச்சான் குஞ்சிகள் ஒரு சாதாரண விஷயமாக  எண்ணிவிடுகின்றனர்.




ஒருவேளை  மது அருந்துவது கட்டுக்குள் இருந்தால்  அதில்  தவறில்லை என்று கூறிக்கொள்ளலாம் . ஆனால்  கட்டுக்கடங்காமல் தண்ணியில் மூழ்கும்போது அது அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ,  குடும்ப வாழ்க்கையை பாத்திக்க ஆரம்பிப்பதை அவர்கள் உணர்வதில்லை.

திரைப்படத்துறையில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் , நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் மது அருந்துவதை  ஒரு முக்கியமான பழக்கமாக வைத்திருப்பதால்  அவர்களுக்கு  இது ஒரு தப்பாக தெரிவதில்லை . அதனால்  இந்த  வளர் இளைஞர்கள்  அதனால் பாதிப்பு அடைவதை இவர்கள் உணர்வது இல்லை. மது அருந்துவதினால் பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களில்  இந்த குட்டி  இளைஞர்கள்  ஈடுப்பட்டு  தங்கள் வாழ்க்கையும் கெடுத்து கொண்டு  அடுத்தவர் வாழ்விலும் பிரச்னையை ஏற்ப்படுத்திவிடுகின்றனர் .

இனியாவது  இந்த இயக்குனர் பட்டாளங்கள்  டாஸ்மாக்கில்  ஒரு சீனை வைப்பதுக்கு முன்னால்   நம் சமுதாயத்தையும் கொஞ்சம் நினைத்து பார்ப்பார்களா ?




1 comment:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியான கோரிக்கை
டமாரச் செவிடர்கள் காதில் விழுமா
எனத்தான் தெரியவில்லை

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா