திரைத்துறையை சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் நான் பேசி கொண்டிருந்த போது அவரிடம் என்ன வேட்டை காரன் படம் பார்த்தீர்களா எப்படி இருந்தது ? என்றேன் .
தனிப்பட்ட முறையில் வேட்டைகாரன் எனக்கு புடிக்காவிட்டாலும் சினிமாவை சேர்ந்தவர் ஆயிற்றே அவர் பார்வை எப்படி இருக்கிறது என்கிற ஆவல்தான் .
ஆனால் அவர் பார்க்கவில்லை என்றார் .
எனக்கு ஆச்சரியம் .புதுமுகங்களின் படங்களை கூட
பார்த்துவிடுபவர் ,வேட்டைகாரனை இந்நேரம் பார்த்து இருப்பார் என்றே நினைத்தேன் .
பொதுவாகா இவரைப்போல் துணை இயக்குனர்களாக இருப்பவர்கள் தங்கள் தொழிலின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ,வரும் எல்லா படங்களையும் பார்ப்பது வழக்கம் . அதற்கு இவரும் விதிவிலக்கல்ல . ஆனால் இந்த படத்தை பார்க்காததற்கு அவர் சொன்ன காரணம் எனக்கும் ஓரளவிற்கு சரி என்று தான் பட்டது .
அதாகப்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்குள் எடுத்த முடிவின் படி திரைப்பட விளம்பரங்களுக்கு ஒரு கட்டு பாட்டை வைத்துள்ளது . அதன் படி எத்தனை பெரிய தயாரிப்பாளர் ஆனாலும் அவர் தன்னுடைய திரைப்படத்திற்கு செய்தி தாளில் கொடுக்கும் விளம்பரத்தின் அளவு முதல் வாரத்திற்கு இந்த அளவு அடுத்த வாரங்களுக்கு இந்த அளவு என்று வரை படுத்தி அதன் படி தான் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.
அதாவது முதல் வாரத்தில் குவாட்டர் பேஜ் கொடுத்தால் வரும் வாரங்களில் பத்துக்கு பதினைந்து சென்டிமீட்டர் அளவுகளில் தான் விளம்பரம் கொடுக்க முடியும் .இது எல்லோருக்கும் பொருந்தும் . இதன் மூலம் அதிக விளம்பரம் கொடுத்துவிட்டு படம் ஊத்தி கொண்டால் பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பது தடுக்கப்பட்டது . தவிர சின்ன பெரிய தயாரிப்பாளர்களுக்கு இடையே விளம்பரம் செய்வதில் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டது .
ஆனால் சன் பிக்சர்ஸ் வந்ததும் என்னவாயிற்று அவர்கள் எடுக்கும் படங்களுக்கு தங்கள் சேனலில் மகா பயங்கரமாக விளம்பரம் கொடுத்து பின்னி எடுக்கின்றனர் . இதனால் சின்ன தயாரிப்பாளர்கள் விளம்பர விஷயத்தில் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர் . அவர்களால் சன் சேனலில் அவர்கள் சொல்லும்
யானை விலை ,குதிரை விலைக்கு . விளம்பரம் செய்ய முடியுமா ? செய்தால் தான் கட்டு படி யாகுமா ? சன் பிக்சர்சால் தமிழ் திரை உலகம் ஓட்டு மொத்தமாக பாதிக்க பட ஆரம்பித்து உள்ளது .
இந்த செய்தியை சொன்னவரிடம் நீங்கள் படம் பார்க்கா விட்டால் அவர்களுக்கு என்ன கோடி கணக்கிலா நஷ்டம் வந்து விடபோகிறதா ? என்றேன் .
நான் படங்களை பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை சன் பிக்சர்சின் படங்களை இனி டிவிடி இல்தான் பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன் இது நான் எதிர்ப்பை காட்டும் வெளிப்பாடு என்றார்
அடப்பாவி உள்ளுக்குள்ள ஒரு எரிமலையே வெச்சிருக்காரே என்று நினைத்து கொண்டு ஏன் டிவிடி இன்னும் கிடைக்க வில்லையா என்றேன் . கொஞ்சம் பொறுத்திருந்தால் கண்ணில் ஒற்றி கொள்ளும் அளவிற்கு பாரின் பிரின்ட் கிடைக்கும் என்றார்.
நல்ல தெளிவாதான்ய இருக்காங்க .
...
4 comments:
மூ..........அருமை
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
nalaikku avaru padam Sun Tv vangitta ellarum DVDil partha avaruku pothuma ??? chumma vethu scenai poduraru...
நானும் சன் டிவிப் படங்கள் தியேட்டரில் பார்ப்பதில்லை. ஒடாத படங்களை ஒடும் என்று பொய் சொல்லி விளம்பரம் செய்பவர்கள் சன் டிவி. நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
his agitation mode and attitude is good. tell him that he can get free access to the tamil movies in cooltmail website
Post a Comment