Thursday, January 21, 2010
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் - தேர்தல் நாடகமா ?
புலித்தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி உண்மையிலேயே தமிழ் சமுதாய மக்களுக்கு ஒரு இனிப்பான செய்திதான் . ஆனால் இலங்கையில் தேர்தல் வரும் இந்த சமயத்தல் திடிரென ஒரு வெப் சைட் முளைத்து அதில் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் தக்கசமயத்தில் மக்கள் முன் தோன்றி பேசுவார் என்று கூற காரணம் என்ன? அப்படியே இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு செயலையும் மிக துல்லியமாக நேரம் பார்த்து செய்யும் புலிகளுக்கு , தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்கிற இந்த செய்தி ராஜ பக்சே மீண்டும் (சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி) வெற்றி பெற துணை போகும் என்று தெரியாதா ?
சில மாதங்களுக்கு முன்பு கம்யுனிச அமைப்பொன்று இன்னும் போர் முடியவில்லை . இனி எங்களின் போர் ராஜ தந்திர வழியில் இருக்கும் என்று கூறியதை போன்று தான் இதுவுமா என தெரிய வில்லை .
சென்னையில் எங்களை போன்றவர்களுக்கு இலங்கை அரசியலின் உண்மை நிலவரம் தெரிய வில்லை ஒரு வேளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி தேர்தலில் ராஜபக்செவிற்கு மரண அடியாக இருக்குமா என்றும் தெரியவில்லை .
எது எப்படியோ பிரபாகரன் அந்த சிங்களவர் கையில் மாட்டி சாக வில்லை
உயிரோடு தான் இருக்கிறார் என்றால் அது மிக சந்தோசமான விசயம்தான் .
கொசுறு செய்தி :
ராஜபக்செவின் அரசாங்க சோதிடர் ராஜ தேவேந்திரன் இந்த தேர்தலில் அராஜபக்சே கண்டிப்பாக ஜெயிப்பார் என்று கூறி உள்ளார்.
...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சரியாக சொல்லி யுள்ளீர்கள்
நீங்க வேற மாதிரி யோசிகிறீங்க .. ஆனால் நல்லாவே யோசிகிறீங்க
உங்கள் வருகைக்கு நன்றி செல்வா
"நீங்க வேற மாதிரி யோசிகிறீங்க .. ஆனால் நல்லாவே யோசிகிறீங்க"
எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்
Post a Comment