Tuesday, January 19, 2010

பின்னூட்ட பகவானே போற்றி !

நாம என்னதான் பிரிச்சி மேஞ்சி எழுதினாலும் அதற்கு பின்னூட்டம் வராவிட்டால் . ? என்ன செய்வது ? என்று  இனி குழம்பி கொண்டு இருக்க வேண்டாம் .

அதற்குதான் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேய அதற்கு வழியும் கண்டு பிடித்து உள்ளனர் . திருநெல்வேலிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் பின்னூட்ட புரத்தின் நாயகர் தான் பின்னூட்ட பகவன் . முப்பது நாள் விரதமிருந்து தினமும் கலையில் எழுந்ததும் பின்னூட்ட பகவன் போற்றி மந்திரம் சொல்லி வர ,பிளாகில் பின்னூட்டம் வந்து குவிய ஆரம்பிக்கும் . விரதத்தை பின்நூட்டபுரத்திற்கு வந்து தான் முடிக்க வேண்டி இருக்கும்.

உங்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடுவது பின்னூட்ட பகவான் பீடம் .

10 comments:

அண்ணாமலையான் said...

சீக்ரம் அட்ரஸ் தாங்க..

settaikkaran said...

உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க! முப்பது நாளெல்லாம் சுத்த வேஸ்டுங்க! நம்ம டி.நகர் நடேசன் தெருவிலே ஃபீடாலால் பேக்காலால் ஜெயின்னு ஒருத்தரு அதிர்ஷ்டக்கல் வியாவாரம் பண்ணுறாரு! அவரு கிட்டே போயி ஒரு கல் வாங்கி மோதுரம் பண்ணிப் போட்டுப் பாருங்க, அடுத்த தமிழ்மணம் நட்சத்திரம் நீங்கதான்!

payapulla said...

பின்னூட்ட பகவான்

நம். 14 பின்னூட்ட தெரு

பின்னூட்ட புறம் .

திருநெல்வேலி -2

payapulla said...

நம்ம டி.நகர் நடேசன் தெருவிலே ஃபீடாலால் பேக்காலால் ஜெயின்னு ஒருத்தரு அதிர்ஷ்டக்கல் வியாவாரம் பண்ணுறாரு! அவரு கிட்டே போயி ஒரு கல் வாங்கி மோதுரம் பண்ணிப் போட்டுப் பாருங்க,


அதுல உங்களுக்கு எத்தனை பிரசன்ட் கமிஷன் .

தாராபுரத்தான் said...

ஒண்ணும் கவளை படாதீங்க எங்களை மாதிரி ஆட்கள் எதற்கு இருக்கோம். பின்னிப்போடுவோமில்ல.

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா கலககல்ஸ்!

settaikkaran said...

//அதுல உங்களுக்கு எத்தனை பிரசன்ட் கமிஷன்//

கமிஷனா? அந்தப் பெயருலே மாறுவேசத்துலே வாவாரம் பண்ணுறதே நான் தான். இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்களே Little Boy?

payapulla said...

அடப்பாவி ! இந்த சேட்டையெல்லாம் நீங்கதான் செஞ்சிகிட்டு இருக்கீங்களா ?

payapulla said...

அடப்பாவி ! இந்த சேட்டையெல்லாம் நீங்கதான் செஞ்சிகிட்டு இருக்கீங்களா ?

ரிஷபன் said...

மனசப் படிச்சிட்டீங்க..

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா