Friday, August 21, 2009

பொக்கிஷமும் படமும் சேரனின் முத்தின மூஞ்சும் !


சேரனின் பொக்கிஷம் படம் பார்த்தவர்கள் அவரின் முத்தின முகத்தை காண சகிக்காமல் ....
சேரனுக்கு ஒரு கடிதம் , சேரன் அவர்களுக்கு ஒரு கேள்வி , .... சந்தேகம்
இதில் நீங்கள் நடிக்க தான் வேண்டுமா? என்று அவரை நார் நாராய் கிழித்து .. அவரின் முத்தின முகத்தை படத்தின் கதையை விட மிக பிரபலமாக்கி விட்டனர் திரை விமரிசனத்தில் .

முத்தின மூஞ்சோடு யார்தான் சினிமாவில் நடிக்க வில்லை . எழுபதுகளில் நடிக்க ஆரம்பித்து இன்றும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கெல்லாம் இருப்பது என்ன இளம் மூஞ்சா ...

எண்பதுகளில் நடிக்க ஆரம்பித்த நாயகர்களுக்கும் குளோசப் ஷாட் வைக்கவா முடிகிறது ...

அப்படி இருக்க சேரன் மட்டும் முத்திய முகத்துடன் நடிப்பதில்
என்ன தவறு இருக்கிறது நண்பர்களே ...

கந்தசாமியின் முகம் மட்டும் எப்படி இருக்கிறது? ...

சரி இப்ப விஷயத்திற்கு வருவோம் .. உண்மையில் பொக்கிஷத்தில் சேரனின் முகம் முத்தி தெரியவில்லை . அவர் செய்த (மிகப் பெரிய ) தவறு என்ன வென்றால் தன்னுடைய மீசையை எழுபதுகளில் இருப்பதை போல வடிவமைத்து கொண்டதுதான் . ஒரு வேலை எழுபதுகளில் அப்படி இருந்ததா ? என்றால் தெரிய வில்லை . ஆனால் அவர் மீசையை கத்தரித்து கொண்டதால்தான் அவர் முகத்தின் வசீகரம் மாறி அகோரமாய் தெரிந்தது . மீசையை அதிகமாய் கட் பண்ணியதால் பல்லும் வெளியே துருத்தியது போல தெரிந்தது .

நன்கு வளர்ந்த அடர்த்தியான மீசையை அதன் அடர்த்தியை குறைப்பதால் இப்படி தோன்றலாம் . பேரன் பேத்தி எடுத்த நாயகர்களையே மேக்கப் போட்டு இளமையாக காட்டும் போது சேரனுக்கு மேக்கப் போடுவது அத்தனை கடினமானதும் அல்ல . அவர் அதிகமாக போட்டு கொள்ளவில்லை . ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனித்து செய்பவர் இதை கவனிக்காமல் விட்டு விடுவதற்கு அவர் மசாலா இயக்குனர் இல்லை .

அடுத்த படத்தில் அவர் நன்கு வளர்ந்த ஒரிஜினல் மீசையோடு வரப் போகிறார் . அப்போது இதே நண்பர்கள் சேரன் இப்போது இளமையாக தெரிகிறார் ... என்ன செய்தார் என பதிவு எழுத போகிறீர்கள் .

ஆகையால் அநேகமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சேரனின்
மீசையே துன்பத்திற்கு காரணம் .

பல நாட்களாக நான் ஆராய்ந்து கண்டு பிடித்த இந்த அரிய கண்டு பிடிப்பிற்கு தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்தவும் !!!

நன்றி !
...

6 comments:

துளசி கோபால் said...

நெசம்தான்.

ஒருத்தரைப் பிடிக்காட்டா விடாம சரங்கள் எய்து அவரைக் காலி பண்ண நம்மாட்களுக்குச் சொல்லித்தரணுமா?


தமிழ்ப் படத்தில் இளம் கதாநாயகர்கள் யாருன்னு கொஞ்சம் நேரம் யோசிச்சா.....

அடப் போங்க......யாரும் ஆப்டலை(-:

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......பரத் என்னும் நடிகர் இருந்தாரே.....

little boy said...

தங்கள் வருகைக்கு நன்றி துளசி கோபால் !

Anonymous said...

ennromba thaan jalra saththam,

Manasatchiya thottu sollunga,
seran antha lover role-a nadichaara? muthuna moonchiya irunthaalum, mugathila expression venum, enna antha thulli odurathu eththanai padaithila athe muga bhavanai, ayya neenga solramathiri tamil cinemala old heros thaan, aannalum innaikkum prontha podichukallukku inaamum surusurupaa irunthaa ethanai vayasaanalum alukkaathu. Jaala thatta vendiyathuthaan, aaanalum seranodoa romba athiga aaasai thannoda ella padathulayum heorvs nsfikirsthunngsrsthu overs ille.

Inths psdathulla yatharthamaana cinemathaan sir, ore oru scenukku
cheran nadipaai paathu pullarichu poneengala sollunga.
Muthan muthalil padmapriyavin alagu mugam paarkirapothu onga ero yaraiyo 'sh,..' nnu satham podakoodathungra mathiri solvaar. Yeen sir, neenga youth thaane, muth muthale oru algaana mugaththai paarthu manasukkul silirppu varatha? kaathal latea varalaam aana entha aanukullum pookindra iyalbaana antha jivendra antha unarvai kooda express theriyaatha onga zerovukku romba thataatheenga.

little boy said...

அண்ணே ! அனானிமஸ் அண்ணே !

நான் சேரனுக்கு ஜால்ரா போட வில்லை . தவிர அவர் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார் என்றும் சொல்லவில்லை . நான் எழுதியது எல்லாம் அவர் முகத்தை முத்தியது என்று ஒரு விஷயமாக நம் பதிவர்கள் எழுதியதற்குதான் ...

நீங்கள் என் இன்னமும் ஒரு பிளாக் ஆரம்பிக்க வில்லை.

துபாய் ராஜா said...

//மீசையே துன்பத்திற்கு காரணம்//

ஆஹா.ஆஹா.அற்புதம்.

உங்க ஆராய்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :))

அடுத்தது 'கந்தசாமி' எல்லோர்ட்டயும் கும்மாங்குத்து வாங்கறதுக்கு சீக்கிரம் ஒரு காரணம் கண்டுபிடிங்க.... :))

little boy said...

நீங்களே சொல்லிவிட்டீர்கள் . அப்புறம் ஆராய்ச்சியை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா