Friday, August 14, 2009

ஆதி கேசவனும் அந்த குடிசை வாசிகளும்


எத்தன பேர் குடிசை போட்டுக்க
போறீங்க
?

ஒரு ஐம்பத்து பேர் அண்ணே !

ஐம்பத்து பேரா ? ஐம்பத்து குடும்பம்னு சொல்லுடா!

சொல்பவன் தலையை சொரிகிறான் ஆமாண்ணே !

ஐம்பத்து குடும்பன்னா பிரச்சனை ஆயிடுமேடா!

ஆதி கேசவன் புருவங்களை சுருக்கி யோசிக்கின்றார் .


ம்... ஒரு குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூவா கொடுத்துட சொல்லிடு
நான் பாத்துக்கறேன் !

டேய் சொக்கா எதோ நீ நம்ப ஆளா போயிட்டதால தான் நான் இத பண்ணுறேன்
ஐம்பத்து குடும்பத்துக்கு மேல அதிகமா போனா நீதான் மாட்டுவே !
என்ன புரியுதா ?

அப்பறம் பணத்த சாயங்காலம் கொண்டு வந்து அம்மா கையில கொடுத்துடு .

புறப்பட தயாராய் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஸ்கார்பியோவின் உள்ளே
ஆதி கேசவன் சென்று அமர்ந்தார் .

ஆளும் கட்சியின் ஓரளவு முக்கியம் வாய்ந்த பொறுப்புகளை பெற்றுள்ள ஆதி கேசவன் அந்த பகுதியின் கவுன்சிலரும் கூட.

சிங்கார சென்னையை அலங்கரிக்கும் பல திட்டங்களை செயல் படுத்தும்
பொறுப்புள்ள பல கவுன்சிலர்களுள் ஆதிகேசவனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

அதில் ஒரு திட்டம் தான் அடையார் ஆற்றின் ஓரத்தில் குடிசைகளை அமைத்தல்
அதற்குதான் இப்போது அனுமதி கொடுத்து விட்டு வந்தார்.

குடிசைகளை அமைக்க ஒரு தொகை , மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்து
குடிசைகள் முழுகினால் நிவாரணம் வாங்கி தர ஒரு தொகை , போலீஸ் தொல்லையோ , வட்டாச்சியர் தொல்லையோ வராமல் இருப்பதற்கு ஒரு தொகை என அவ்வப்போது காசு பாத்தாலும் அவர்களை தன்னுடைய கட்சி வேலைக்கும் பயன் படுத்த தவறுவதில்லை .

சொக்கன் மாதிரியான ஆட்கள் அப்படி சேர்ந்தவர்கள் தான் . அவர்களுக்கும் கட்சி பாதுகாப்பு.
இவருக்கும் வேலை முடிகிறது.

சமிபத்தில் நீதி மன்ற உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை புல் டோசர் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் இப்போது ஆதி கேசவன் மூலம் அவர்கள் புனர்வாழ்வு பெறுகின்றனர். இதுவும் எத்தனை நாள் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அதுவரை விலாசம் தேடி வரும் லட்சுமியை ஏன் விட வேண்டும் .

துர்நாற்றம் வீசும் கழிவு நீர் ஆறாக மாறியுள்ள அடையாற்றின் கரைகளில் ஒன்று இரண்டு என்று ஐம்பத்து குடிசைகள் திடீரென முளைத்தன .

ஆதி
கேசவனின் ஆசி இருப்பதை அறியாத சிலர் போலீசுக்கு பப்ளிக் போனிலிருந்து அனாமதேய கால் பண்ணினாலும் அதனால் எந்த பயனும் ஏற்ப்பட வில்லை.

குடிசைவாசிகளின் திறந்த வெளி கழிப்பிடமாக அங்கு இருக்கும் சாலைகள் மாற ஏற்கனவே அங்கிருந்த அபார்ட்மென்ட் வாசிகளின் சங்கங்கள் மூக்கில் கருப்பு துணி கட்டி, கைகளில் பதாகைகள் ஏந்தி ஒரு நாள் அடையாள எதிர்ப்பை காட்டினர் .

பலனில்லாத அந்த எதிர்ப்பு ஆதி கேசவனை கோபமடைய செய்ய அவரின் அடிப்பொடிகள் ஒன்றினால் அந்த போராட்டத்தை நடத்தினவருக்கு ஒரு மிரட்டல் போனது அதற்கே கைகால் ஆடி போன அவர் அடக்கம் அமரருள் உய்த்தார் .

போராட்டம் வெளிப்படையாக ஓய்ந்ததே தவிர நின்று விட வில்லை . திடீரன ஒரு நாள் ஒரு நாளிதழில் அடையார் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தெளிவான போட்டோவுடன் வந்தது . அதில் ஒரு கட்டம் கட்டிய செய்தியாக இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதிகேசவனின் ஆசி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது .

இதற்கு இடையில் ஒரு பொது நலன் வழக்கு நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்தது . அதில் இந்த ஆக்கிரமிப்பை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு அது மிக பெரிய வேலையாகிவிடும் . அதில் அங்கு குடியிருப்பவர்களுக்கு வேறு இடத்தில் தங்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

நாட்கள் சென்றது.

இப்போது அந்த இடத்தில் நூறு குடிசைகள் முளைத்து இருந்தது

இந்த முறை சொக்கன் ஆதிகேசவனை பார்க்க வந்தது தங்கள் சேரிக்கு மின் விளக்கும் , ரேஷன் கார்டும் கேட்டு தான் . ரேஷன் கார்டும் , தெரு விளக்கும்
வந்து விட்டால் நாமை யாரும் எளிதில் காலி செய்து விட முடியாது என்பது அவனுடைய கணக்கு.

அதை
எதிர் பார்த்தவர் போல ஆதி கேசவனும் புருவத்தை சுருக்கி யோசித்து கொண்டிருந்தார் .

டேய் சொக்கா இந்த முறை நான் உனக்கு நேரடியா எந்த உதவியும் செய்ய முடியாது

ஒரு ஐடியா சொல்றேன் ...

அத கேட்டு அந்த மாதிரி செஞ்சா , நீ கேட்ட மாதிரி நான் செஞ்சி தர முடியும் .
என்ன கேட்ப்பியா ?

என்ன அண்ணே ! நீங்க சொல்றத என்னக்கி கேட்காம இருந்திருக்கோம்.
சொல்லுங்கண்ணே !

அப்பன்னா .. நாளக்கி அங்க இருக்கிற குடுசைக்கி தீ வச்சீடு !

எண்ணனே சொல்லறீங்க ?

இங்க பாருடா சும்மா போயி நான் உங்களுக்காக பேச முடியாது .

இந்த மாதிரி எதாவது நடந்தா ? உங்க மேல ஒரு பரிதாபத்த நான் ஏற்படுத்தி அப்படியே நீ சொன்ன காரியத்தையும் முடிச்சி கொடுத்துருவேன் .

உனக்கு சரின்னா செய்யி இல்லனா வேணாம் !

அடுத்த நாள் காலை எல்லா தொலைக்காட்சிகளிலும் குடிசை தீப்பற்றி எறிந்த செய்தி தான் பிரதானமாக இருந்தது . லோக்கல் எம் எல் வுடன் ஆதி கேசவனும் வந்து பதிக்காப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் .

சில நாட்களில் அந்த இடத்தை வந்து பார்த்த மாநகராட்சியின் அதிகாரிகள் அங்கு இருந்தவர்களை பத்து நாட்களிற்குள் காலி செய்ய சொல்லி விட்டு சென்றனர் .

அவர்களுக்கான
வேறு இடம் பரிசிலனையில் இருப்பதாகவும் இப்போது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இழப்பீடு ஒன்றும் தர முடியாது என்றனர்.

ஆதிகேசவனை பார்க்க சொக்கன் ஓடினான் . ஆதி கேசவன் சி. எம். மீடிங்கில் பிஸியாக இருந்தார் .

குடிசைவாசிகள் அனைவரும் காலி செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் சொக்கனால் ஆதி கேசவனை பார்க்க முடிந்தது .

டேய் சொக்கா நானும் என்னால ஆனா மட்டும் பேசி பாத்துட்டண்டா
சி. எம் பிடி கொடுக்கவே இல்லடா .

எவனோ ஒருவன் கோர்ட்டுல போட்டிருக்கானாமே . நான் ஒன்னும் பண்ண முடியாதுன்னு கை விரிச்சிட்டார் .

சரி கவலை படாத உங்களுக்காக வேற இடம் சீக்கிரம் பாத்து கொடுக்க சொல்லி இருக்கேன் .

சொக்கன் புறப்பட்டான் .

நாளிதழில் குடிசை வாசிகளின் ஆக்கிரமிப்பு ,ஆதி கேசவன் ஆதரவு என்று செய்தி வந்த போதே ஆதி கேசவனுக்கு அந்த இடங்களை எல்லாம் காலி பண்ண வைத்து விட வேண்டும் என்று முதல்வரிடம் இருந்து உத்தரவு வந்ததையும் அதற்கு ஆதி கேசவன் கொஞ்ச நாள் அவரிடம் அவகாசம் வாங்கி இருந்ததையும் சொக்கன் ஒரு வேலை அறிந்து இருப்பானே யானால் அவரிடம் ரேசன் கார்டு வேண்டும் என்று கேட்க சென்றிருக்கவே மாட்டான் .

இந்த அதிர்ஷ்டம் தான் ஆதிகேசவனுக்கும் சொக்கனுக்கும்
இடையே இருக்கும் வித்தியாசம் .

1 comment:

Information said...

கதை வித்தியாசமாய் இருந்தது

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா