Monday, April 6, 2009
மனித உரிமை -அப்டீனா என்ன ?
மனித உரிமை , மனித உரிமை என கூச்சல் போட்டுஒரு கூட்டம் காரில் வலம் வருவதை நீங்கள்கண்ணார கண்டு ரசித்திருப்பீர்கள் . உங்களை போலவே நானும் மனித உரிமை அமைப்பு என்றால்உண்மையீலயே அவர்கள் மனித உரிமைக்காக தங்கள்உயிரையும் கொடுப்பார்கள் என்று ( உங்களைபோலத்தான்) அப்பாவித்தனமாகஎண்ணிக்கொண்டிருந்தேன் அந்த ஒரு மதியான வேலை வரை . அன்று நான் தி.நகரின் தண்டபாணி ரோடுவழியாக வந்துவெங்கட் நாராயண ரோடு சந்திப்பில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது என்அருகில் ஒரு பிளாக் ஸ்கார்பியோ வந்து நின்றுதுஅதன் முன் பக்கத்தில் மனித உரிமை கழகம் என்றுஒரு கொடியும் கருப்பு கலரில் இருந்தது. அந்த சமயத்தில் பின் பக்கம் டி வீ எஸ் ஸ்கூட்டியில் வந்தஒரு வயதான பெரிவர் லேசாகஸ்கார்பியோவின் பின் பக்கத்தை இடித்து விட அதை உணர்ந்தஉடன் வண்டியின் ஓட்டுனர் ( நுப்பது வயதிற்குள்ளான பொறுக்கி போன்ற அழகான ஜாடை யுடன்) இறங்கி வந்து அந்த வயதானவரை கண்டபடி திட்டியது மட்டும்அல்லாமல் அவரை அடிக்க கை ஓங்கியதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது . இதுஎல்லாத்தையும் விட ஒரு மிகப் பெரிய காமடி என்ன வென்றால் இவ்வளவும் செய்துவிட்டுகிளம்பிய அந்த காரின் பின் பக்கத்தில் எழுதி இருந்த வாசகம் தான். மனித உரிமை தர்மத்தை காத்தஅந்த கார் ஓட்டுனரையும் , அதன் உள்ளே உட்கார்ந்திருந்தவரையும் நான் ஒன்று கேட்கவிரும்புகிறேன் . ஸ்கூட்டி இடுச்சி கார்பியூ உடைஞ்சி பூடுமாயா?. அப்புறம் அந்த காரின் பின் புறம்என்ன எழுதி இருந்து என்று சொல்ல வில்லையே . அன்பே சிவம் !!!!!!.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment