Wednesday, April 8, 2009

பாகிஸ்தானில் கூட மனிதாபிமானம் ஆனால் இலங்கையில்?


பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தையும் தலீபான் தீவீரவாதிகள் பிடித்து வருகிறார்கள் என் கேள்விப்பட்டு வருகிறோம் . ஸ்வாட் பள்ளத்தாக்கையும் ,வட மேற்கு எல்லைப்புற மற்றும் பஞ்சாப் மாகாணத்தையும் கைப்பற்றி வருவதையும் நாம் பேப்பரில் படித்துக்கொண்டுதான் வருகிறோம். இந்த நேரத்தில் நமக்கு ஒரு கேல்வி வரலாம் . பாகிஸ்தானில் பல இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் இந்த தீவீரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானால் நிச்சயமாகவே முடிய வில்லையா? என்பதுதான் . இந்தியாவை எதிர் கொள்ள துணிச்சலும் வல்லமையும் படைத்த பாகிஸ்தான் ஏன் தீவீரவாதிகள் விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை . ஏனென்றால் தீவீர வாதிகளைஒடுக்க நடவடிக்கை எடுக்கும் பொழுது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் . ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது.அது தன் சொந்த மக்களையே எறிகுண்டு வீசியும் ,விமானம் கொண்டு தாக்கியும் அழித்து வருகிறது . கடந்தஅறுபத்து ஒரு வருடங்களில் எந்த ஒரு நாடும் செய்திராத சாதனை இது. தமிழர்களாகிய நாம் இத்தனை தடுக்க இயலாத ஒரு அரசாங்கத்தின் குடிமக்களாய் ஈழ மக்களின் சிவப்பு ரத்தத்தில் எழுதப்படும் கறுப்பு வரலற்றின் சிறப்பு அங்கத்தினராய் உள்ளோம் .

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா