Showing posts with label அவலம். Show all posts
Showing posts with label அவலம். Show all posts

Tuesday, July 7, 2009

மனசாட்சியே இல்லாத மாம்பழ வியாபாரிகள் #*#**


பழங்களா ? அல்லது விஷங்களா ?

அடுத்தவன் எக்கேடு கேட்டால் என்ன ? எனக்கு பணம் வந்தால் சரி !! என்கிற மனோபாவம் நம் வியாபாரிகளிடம் வந்து பல காலமாகி விட்டது என்பது உண்மைதான். ஆனால் பழங்களை கூட விஷங்களாக மாற்றும் கொடுரம் எப்படி தான் வருகிறதோ தெரியவில்லை.

கார்பைடு கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பது, ஆப்பிள்களுக்கு மெழுகு பூசுவது என கொடுமையான வகையில் பணத்தை சம்பாதிப்பதை விட அவர்கள் தங்களுடைய மனைவி,மகளை வைத்து விபச்சாரம் செய்தால் கூட அது தவறில்லை.

அரிசியில் கல் கலப்பது, மிளகாய் பொடியில் செங்கல் கலப்பது, மிளகில் பப்பாளி விதையை கலப்பது என கலப்படம் இல்லாமல் பொருட்களே இல்லை எனலாம் . வழக்கம் போல் நம் கையாலாகத அரசும் ஒடுக்க எந்த நட வடிக்கையும் எடுக்காமல் கைகட்டி பாக்கலாம்.

ஆனால் உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கும் , சிறு பிள்ளைகளுக்கும் கொடுக்கும் பழங்களில் கூட இவர்களின் கைவண்ணத்தை காட்டினால் இவர்கள் எப்படி சும்மா விடுவது. ஆனால் சும்மாதானே விடப்படுகிறார்கள். அவர்கள் பழங்களை பறிமுதல் செய்வது மட்டும் இல்லாமல் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் .

மற்றத்திற்கு எல்லாம் வாய்கிழிய பேசும் இந்த வணிக சங்கத்தார் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ????

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா