Saturday, October 30, 2010

தேவர் ஜெயந்தியும் மக்கள் அவதியும்

சிங்கங்களே திரண்டு வாரீர் ! வாகன நெரிசலில் சென்னையை திணரடிப்போம் வாரீர் !

அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி வருவதற்கு முன்னமே ஜாதி அரசியல் தலைவர்களில் இருந்து நடிகர்கள் வரை சிங்கங்களே திரண்டு வாரீர் என்று அறைகூவல் விடுத்தாயிற்று . இது தெரியாமல் நான் தி. நகர் வழியாக சென்று வாகன நெரிசலில் மாட்டி கொண்டு பல மணிநேரங்களை மழை தூறலிலும் , சேறு சகதியிலும் டு வீலரை இன்ச் பை இன்ச் நகர்த்த வேண்டியதாயிற்று .

இந்த மாதத்தில் தேவர் பிறந்த நாளோடு தீபாவளி பண்டிகை விற்பனையும், வட கிழக்கு பருவ மழையும் வேறு சேர்ந்து கொண்டாகிவிட்டது . அப்புறம் கூட்டத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன ?

தேவர் நல்லவர்தான் ஆனால் ...
தேவர் அவர்களைப் பற்றிஎனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் அவர் தன் சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்காக எழுதி வைத்து விட்டதாக
கேள்வி பட்டுளேன் .

அதே போன்று தேவர் சமுகத்தில் இருப்பவர்கள் சமுதாயத்தில் எல்லா துறையிலும் , வியாபாரத்திலும் சிறப்புடன் இருப்பதை பார்த்துளேன் .
அப்படி மிகவும் சிறப்பாக விளங்கும் ஒரு சமுகம் , அடுத்தவர்கள் அவதிகளை குறித்து ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றுதான் தெரிய வில்லை.

குரு பூஜை செய்ய வேறு இடமே இல்லையா ?
சென்னையில் மிக முக்கியமான இடமான நந்தனம் சந்திப்பில் இருக்கும் தேவர் சிலைக்கு இப்படி ஆயிரம் கணக்கானவர்கள் கூட்டமாக வந்துதான் பூஜை செய்ய வேண்டுமா ?திருமண மண்டபம் போன்ற சவ்கரியமான இடத்தில் வைத்து கொள்ள கூடாதா? இப்போது கோவில் பூஜைகள் கூட மண்டபத்தில் வைத்து கொள்ளும்போது , குரு பூஜைகள் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது.


லட்ச கணக்கான மக்களுக்கு தொல்லை தரும் இந்த விதமான பூஜையை தேவர் கூட அனுமதித்து இருப்பாரா ? என்று தெரியவில்லை .

கூட்ட ஜனநாயகம்
கூட்டமாய் இருந்து கொண்டு என்ன செய்ததாலும் சரியே என்கிற உயர்ந்த ஜனநாயக கொள்கையை கடைபிடிக்கும் நம் நாட்டு அரசியலில் இப்போது தேர்தலும் நெருங்குவதால் , எந்த ஒரு கட்டு பாடும் இல்லாமல் இத்தகைய அராஜகம் அரங்கேறி கொண்டுதான் உள்ளது .

இதற்கு தேவர் ஜெயந்தி உட்பட எந்த தலைவர்களின் ஜெயந்தியும் விதிவிலக்கல்ல .

வெங்கட் நாராயணா சாலையிலிருந்து செல்லும் சாலையை வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுத்து விட்டதால் தான் இந்த நெரிசல்.


அதே சமயம் சைதாப்பேட்டை மார்க்கமாக நந்தனம் வந்த தேவர் ஜெயந்தி வாகனங்களுக்கு மட்டும் தற்காலிகமாக போடப்பட்டு இருந்த அந்த தடுப்பை போலீசாரே எடுத்து பவ்யமாக வழிவிட்டதை என்னை போன்ற ஏராளாம வண்டி ஓட்டிகள் வியப்புடன் பார்க்கத்தான் முடிந்தது .


அப்போது(ம் சளைக்காத) ஒரு இரு சக்கர வாகன ஓட்டுனர் , நாங்கள் எல்லாம் கொஞ்சம் ஒன் வேயில் வந்தால் பிடித்து கேட்பிங்க , இதல்லாம் கேட்க மாட்டிங்க என நின்று கொண்டிருந்த ஒரு போலீசிடம் கூற , அதற்கு அவர் கோபம் வருதா? போய் இறங்கி அடி உன்ன யாரும் கேட்க மாட்டோம் என்று கூற நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம் .
போலீசார் பவ்யமாக எடுத்த அந்த தற்காலிக இரும்பு தடுப்பில் போட்டிருந்த வாசகம் OBEY TRAFFIC RULES .

எல்லாத்துக்கும் கருத்து சொல்லும் ஒரு காமடி நடிகர் அவர் நடிக்கும் படத்தில் இதுக்கும் கருத்து சொல்வாரா ?

(எங்க வீட்டுக்கு இன்று இரவு உருட்டு கட்டையுடன் குண்டர்கள் வருவார்களா ?)

...

3 comments:

Unknown said...

உங்க ஊரு விட எங்க ஊரு ரொம்ப மோசங்க

raja said...

நான் வன்னியர் சமுகத்தை சார்ந்தவன்..(அரசு சான்றிதழ் அப்படி சொல்கிறது).. சமீபத்தில் ஒரு நாள் மகாலிங்கபுரம் உஸ்மான் சாலையில் இரு சக்கர வாகனத்தில் போனேன்.. ஒரு நெருப்புசட்டி சின்னம் போட்டு ஒரு, கொடி அதை கட்டிக்கொண்டு ஒரு ஆட்டோ , (டாடா மேஜிக்) மிக்கொடுரமாக சகலரையும் சாகடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பது போல் சாலையில் கையில் கம்பை வீசிக்கொண்டுபோனார்கள்.. வழிவிடாதவர்களை கட்டையால் அடித்தார்கள்.. மிக ஆபாசமாக திட்டிவழிக்கேட்டார்கள்.. ஏனேனில் அவர்கள் வன்னியச்சிங்கங்கள் அல்லவா...எல்லா நாட்டிலும் மலம் தின்னும் பன்றிகள் உள்ளது போல, எல்லாசமுகத்திலும் பன்னாடைகள் இருக்கிறது. வேறு வழியில்லை முக்கையும் மூளையையும் இறுகபிடித்துதான் வாழ வேண்டியிருக்கிறது.

payapulla said...

மிக சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் .

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா