Wednesday, December 9, 2009

தெலுங்கானா பிரச்சனையும் ஈழப் பிரச்சனையும்


நினைத்தார் முடித்தார் . பணிந்தது மத்திய அரசு . புதிய மாநிலம் உருவாகும் விரைவில். ஆனால் வாய்சொல்லில் வீரர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் ஈழ போர் ஆரம்பித்தபோது பேசினார்கள் , நடக்கும் போதும் பேசினார்கள் முடிந்த பின்பும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் . மத்திய அரசை எதிர்ப்பதை போல் நடித்தார்கள் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிபோனார்கள் . திருமா உண்ணா விரதம் நாடகத்தை ஆரம்பித்தார் . தொண்டர்கள் எல்லோரும் திருமாவின் உயிரை காப்பாற்று என்று பஸ்ஸை கொளுத்தினார்கள் . முதல்வர் கேட்டு கொண்டார் என்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் . தான் எடுத்து கொண்ட ஒரு செயலை முடிக்காமல் பாதியில் கழன்று கொண்ட ஒரு தலைவர்தான் நமக்கு இருக்கின்றார்.

அடுத்து கலைஞர் தன்னுடைய நாடகத்தை ஆரம்பித்தார் . காலையில் ஏழுமணிக்கு நடை பயிற்சிக்கு வந்தவர் அப்படியே உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் . தமிழுக்காக தன்னுடைய உயிரை கொடுக்கபோவதாக கூறினார் . அப்புறம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டு அவரும் பழரசம் சாப்பிட்டு விட்டு சென்றார் . அவரும் தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் இன்றும் பல வசனங்களை பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.

அவர்கள் எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்தது நாம் எது செய்ததாளும் அதற்கு மத்திய அரசு பணியாது என்பதை தான். ஆனால் இரண்டு எம் எல் களை கொண்ட ஒரு ஒல்லிகுச்சி தலைவர் தன்னுடைய மன உறுதியால் மத்திய அரசை அசைத்து காட்டி உள்ளார் . தான் எடுத்து கொண்ட காரியம் முடியும் வரை அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை . இன்று அவர் சொல்லித்தான் ஒரு அரசு கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது .

ஆயிர கணக்கில் தமிழ் உயிர்கள் கொல்லப்பட்ட போதும் வசனம் பேசிய வர்கள் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை தமிழகத்தில் .

ஆனால் ஒரு நல்ல செயல் தலைவனை தான் தமிழன் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றான்.


....
....
....

9 comments:

குட்டிபய said...

அண்ணே தெலுங்கானா நம்ம நாட்டுக்குள்ளாரல்ல இருக்கி, நாம பிரிக்கலாம், சேரலாம்.. ஆனா.. இலங்கைய நாம எப்படி பிரிக்க அது பக்கத்து நாடாச்சே!

துளசி கோபால் said...

என்னங்க லிட்டில் பாய்......

தனி மாநிலமும் தனி நாடும் ஒண்ணா?

தனித் தமிழ்நாடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க...... இப்பத் தமிழ்நாடு மாநிலமால்லே இருக்காஹ!

என்னமோ போங்க.....

Unknown said...

தெலுங்கானா இருந்தது,போனது,மீண்டும் வந்தது,முதல்வர் பதவியில் போனது மீண்டும் வந்திருக்கிறது. அரசியலில் இது சகஸம் என்றே சொல்லபோகிறது காங்கிரசு

இளங்கோ said...

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு இலங்கை தமிழர் பிரச்சினையை எழுதும் வலைப்பதிவாளர்கள்தான் அதிகம்.பிரச்சினைகள்தாம் தீர்ந்தபாடில்லை.

Vel Tharma said...

தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்?

t sekar said...

// தெலுங்கானா என்கிற மாநிலத்தை உருவாக்கத் தலைந‌கரை ஒருசேர முற்றுகையிடும் ஒரு லட்சம் மாணவர்கள் அங்கே...
3 லட்சம் தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காப்பாற்ற அய்யாயிரம் பேராய்க் கூட ஒன்று சேராத தமிழர்கள் இங்கே..//

திருமா உண்மையாக இருந்தார் .எத்தனை பேர் அவர் பின்னால் சென்றிர்கள்.you are speaking only in Blogs. I went to திருமா fasting.I gave my support.what you have done?.Idiot

Regards
Sekar.T
Maruthipatty
Dharmaputi

Unknown said...

நீங்கள்லாம் உதவி செய்றேன் அப்படீன்னு வராம இருந்திருந்தா நாங்களே வாங்கியிருப்போம்.

எல்லோரும் சேர்ந்து முதுகில குத்தீட்டு,இப்போ திருமா நல்லவனா, கருணாநிதி நல்லவனா அப்படீன்னு கேள்வி வேற!!

azhagan said...

Can't understand. How you are comparing the subdivision of a state within a country to the issue of "DIVIDING THE COUNTRY".

payapulla said...

Mr. Sekar thanks for visiting my blog. i appreciate you have attended the fast drama conducted by (so called saviour of Tamilnadu)Thiruma , and i would like to know what you have achieved out of that . The end is nothing or call it zero. I will attend thiruma's fasting if he is a real leader who what to uplift the downtrodden people. but he is a mere kunda who induce keep his own people in dark to gain a political favour. I am not only criticising him but all leaders who run a political party with caste background.If Thiruma is really concern about their people who should try hard to enlight them by making them financially independent. Take a cue from Nadars , once they were considered as most backward people now imagine how they have grown. but Thiruma only interested in making their peole violent . Mr. sekar dont think you have done so much to save the people in lanka by just attending a Fast drama. If you want to really help people who are handicapped in thinking think beyond Thiruma.

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா