
புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு விடியலை பெற்று தருவார் என்று எல்லாம் எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் இப்படி அற்ப ஆயுளில் சென்று விட்டதை எண்ணி உள்ளுக்குள் புழுங்குவதை யாரிடம் சொல்ல என்று கலைஞர் சமிபத்தில் அறிக்கை வெளி இட்டு இருந்ததை படித்ததின் மூலம் பிரபாகரனின் மரணத்தை ஒரு வழியாக தமிழக அரசு உறுதி படுத்தி விட்டதாக கொள்ளலாம் .
இப்போது ஒரு விடயம் என் மனதிற்குள் வந்து செல்கிறது . நக்கீரனில் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் இது ஆயிரம் ஆயிரம் மடங்கு உண்மை என்ற செய்தி என்னவானது. வந்த பத்து நிமிடத்தில் வித்து தீர்த்தது நக்கீரன் . நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறும் நக்கீரர் ! இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார். ஆனால் ஆங்கில நாவலை தாண்டிய விறுவிறுப்பு இருந்தது அந்த கதையில். சபாஷ் நக்கீரரே.
பிரபாகரன் மரணம் என்பதை அன்று இருந்த சூழ்நிலையில் எவரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை .அதை நன்கு பயன்படுத்தி கொண்ட கோபால் அவர்களுக்கு நன்றி பணமாகுக .
பிரபாகரனின் படத்தை போட்டாலே பத்திரிகை விற்று தீர்ந்திடும் மாயத்தை கண்டு பிடித்து விட்ட பத்திரிக்கைகள் வாரம் ஒன்றாக செய்தி வெளியிட்டு தங்கள் ஈழ தாகத்தை பணம் குடித்து தீர்த்து கொள்கின்றன . ஆனந்த விகடனில் வாரம் ஒரு பிரபாகரன் செய்தி தவறாமல் இடம் பிடிக்கிறது . அவரின் படம் போஸ்டரில் தொங்குகிறது. இதில் குமுதமும் தான் சளைத்தது இல்லை என்கிறது. நக்கீரனை பற்றி சொல்ல வேண்டாம்.
ஆக மொத்தம் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிறதை போல செத்தும் வாழ வைத்து கொண்டு இருகிறார் பிரபாகரன் இந்த உண்மை தமிழர்களை.
குறிப்பு : இந்த செய்தியை பிளாகில் எழுதுவதன் மூலம் என்னுடைய நோக்கமும் இப்படித்தான் இருக்கின்றதோ ?
.....
....
...