Sunday, November 1, 2009
தமிழக எம் பி -களின் இலங்கை பயணம் - இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம் .
திரை விமர்சனம் - தமிழக எம் பி களின் இலங்கை பயணம் .
நடிப்பு : டி.ஆர். பாலு , கனி மொழி , திருமாவளவன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் .
எழுத்து, இயக்கம் - திரு . கலைஞர் கருணாநிதி .
மதிப்பெண் : 100
சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி பிரபலமான அதன் மூலம் முதல்வரும் ஆன திரு கருணாநிதி அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தள்ளாத வயதிலும் , பல வேலை பளுகளுக்கு மத்தியிலும் ஒரு அழகான , உயிரோட்டமான காவியத்தை படைத்திருக்கிறார் .
கதைப்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு பதினோரு எம். பி. கள் இலங்கை சென்று அங்கு கஷ்டத்தில் இருக்கும் ஈழ தமிழர்களின் பாடுகளை அறிந்து அவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்கின்றனர்.
கதை என்னவோ சிறியதாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் கலைஞரின் கற்பனை திறனையும் , அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது . கலைஞர் ஒரு புறம் சிறந்து விளங்குகிறார் என்றால் டி. ஆர் . பாலு மறுபுறம் தன் நடிப்பில் பிச்சு உதறுகிறார் . ஒரு சில இடங்களில் அவர் பேசிய பல வில்லத்தனமான வசனங்களை எடிட் செய்து எடுத்து விடாமல் இருந்திருந்தால் இன்னமும் அவர் நடிப்பின் பரிமாணம் நன்கு வெளிப்படிருக்கும் .
தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது கனி மொழிக்கு பொருந்தும் . ஒரு சில அழும் காட்சிகளில் அவருடை முன்னேற்றம் தெரிகிறது.
தேடி போய் ஆப்பு வைத்து கொள்ளும் கேரக்டர் திருமாவளவனிற்கு. அதனை நன்றாக செய்துள்ளார் . வில்லன் ராஜ பக்ஷே வைத்த ஆப்புவை வாங்கிய பிறகு அவர் பேசும் டயலாக்கில் தியேட்டர் அதிருகிறது . கீப் இட் அப். திருமா அவர்களே
படத்தின் முடிவில் வில்லன் ராஜ பக்ஷே நாயகர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று இயக்குனர் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
படத்தில் இதைப்போல் ஒரு சில குறை பாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் இது ஒரு மிக சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை .
கலைஞரின் ஆஸ்காரை தாண்டிய சாதனை இது.
நன்றி கலைஞர் அவர்களே உங்களிடம் இருந்து இதைப் போல் இன்னும் பல காவியங்களை எதிர் பார்க்கிறோம் .அதைப்போல் தங்களின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இருக்கும் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை என்கிற திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
பயபுள்ள விமரிசன குழு .
கிசு கிசு :
கலைஞரின் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை பல திருப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது . அதில் ஒரு காட்சியில் நாயகன் வில்லனை பணியவைக்க மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட நினைக்கிறான் . இதை புரிந்து கொண்ட வில்லன் நாயகனுக்கு டெல்லியில் செக் வைக்கிறான் . அதை தொடர்ந்து நாயகனின் கூட்டம் ரத்தாகிறது.
இந்த திரை விமர்சனத்தை பற்றிய உங்களின் விமர்சனம் வரவேற்கப்படுகிறது .
......
.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
திருமா என்ன தவறு செய்தார்?.அங்கு பார்த்தவற்றை ஜூனியர் விகடனில் உண்மையாக எழுதுகீறார் .திருமா உண்மை தமிழன்
T SEKAR
Maruthipatty
Dharmapuri-dt
Post a Comment