Monday, February 1, 2010

தெலுங்கானா மாநிலம் தேவையா ?



அறுபது வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது இந்த தெலுங்கானா பிரச்சனை மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அந்த மொழிகளுக்குள்ளே இப்போது பிரிவினை உண்டாகி தனி இனங்களாக தனி கலாசாரம் உடையவர்களாக தங்களை பிரித்து கொண்டு நாட்டையும் பிரிவினைக்குள்ளாக அழைத்து செல்கின்றனர்.

இந்தியா ஒரு நாடாக இல்லாத போது ஒரு சில பேரரசர்களே இந்தியா முழுமைக்கும் வெற்றி கொண்டு ஆட்சி நடத்தி கொண்டு இருந்தனர் . அப்படியும் அவர்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் தான் கைப்பற்றிய வேறு நாடாகத்தான் அந்த மன்னன் நினைத்தான் . அந்த பேரரசனின் மறைவிற்கு பிறகு அவன் கைப்பற்றிய பகுதிகள் எல்லாம் பெரும்பாலும் தனி நாடாகத்தான் இருந்தன. ஒரு சில ராஜ்யங்கள் பெரிய ராஜாக்களுக்கு கப்பம் கட்டியும் தவிர போர் வரும் போது அவனுக்கு படை உதவி செய்தும் ( ஒரு வேலை எந்த ஒரு சூழ்ச்சியும் நடைபெறாத போது ) வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சி இங்கு ஏற்பட்டதன் விளைவாகத்தான் இந்தியா என்கிற ஒரு நாடு உருவானது . பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. மாநிலம் என்பது
ஒரு குறுப்பிட்ட அளவிற்கு பெரியதாக இருப்பதுதான் அந்த மாநிலத்திற்கு நல்லது . இல்லாவிட்டால் அங்கு ஜனநாயகம் என்பது இல்லாமல் போய் அது ஒரு குடும்பத்தின் சொத்தாக ஆகும் அவலம் ஏற்படும். ஒரு மாநிலத்தில் பல்வேறு விதமான கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் இருப்பதுதான் ஆட்சி மாறி மாறி வர துணை புரியும் .

தமிழகம் ஒரு பெரிய மாநிலமாக இருந்தாலும் ஆட்சி பலத்தில் ஒரு குடும்பம் அரசியல் , ஊடகம் , சினிமா , தொழில் என எல்லாத்திலும் ஆதிக்கம் செழித்தி வருவது தவிர்க்க முடிய வில்லை . சிறுபான்மை அரசாக இருப்பதிற்கே இந்த நிலை என்றால் ... பிறகு புரிந்து கொள்ளுங்கள் .

குட்டி குட்டி மாநிலங்கள் உருவாக உருவாக குறுநில மன்னர்கள் உருவாவது தடுக்க முடியாது. எல்லா முன்னேற்ற கழகங்களும் கம்பெனிகளாக மாறி வரும் சுழலில் இது நாட்டிற்கு நல்லது இல்லை என்பது தான் உண்மை.

தெலுங்கானா சந்திர சேகர் தனி மாநிலம் கிடைத்ததும் முதலில் முதல்வர் ஆவார் பிறகு அவர் குடும்பமே வழி வழியாக அந்த மாநிலத்தை ஆளும் தகுதி பெரும் . இப்போது போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பிறகு எந்த வித்தியாசமும் தெரியபோவதில்லை . அந்த மாநிலத்தின் பெயரும் லோகோவும் மாறி இருப்பதை தவிர . இப்போதாவது ஒரு ஆட்சி போனால் மற்றோண்டிற்கு வாய்ப்பு இருக்கலாம் . ஆனால் பிறகு அதுவும் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. குட்டி மாநிலங்கள் மத்திய அரசிடம் பல நேரங்களில் மல்லு கட்ட வேண்டி வரலாம் .

மாநிலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு பிரிவினர் நினைத்தால் அதற்காக போராடலாம் ஆனால் அதற்காக இப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் பிரித்து கொண்டே போனால் இரண்டு விஷயங்கள் உண்மையாகலாம்.

ஒன்று : இந்தியர்களுக்கு தங்களை ஆண்டு கொள்ள தெரியாது என்ற
வெள்ளை காரனின் வாதம் .

மற்றொண்டு : இந்தியாவை சிறு சிறு நாடாக உடைக்க வேண்டும் என்று
வெப்சைட்டில் எழுதி வரும் சீனர்களின் கனவு .

........

2 comments:

ரிஷபன் said...

இந்தியாவை சிறு சிறு நாடாக உடைக்க வேண்டும் என்று
வெப்சைட்டில் எழுதி வரும் சீனர்களின் கனவு .

அதற்கு நம் அரசியல்வாதிகளே துணை போகிறார்கள்..

துபாய் ராஜா said...

அச்சம் தரும் அருமையான கருத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பயபுள்ள...

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா