
நினைத்தார் முடித்தார் . பணிந்தது மத்திய அரசு . புதிய மாநிலம் உருவாகும் விரைவில். ஆனால் வாய்சொல்லில் வீரர்கள் நிறைந்த தமிழ்

அடுத்து கலைஞர் தன்னுடைய நாடகத்தை ஆரம்பித்தார் . காலையில் ஏழுமணிக்கு நடை பயிற்சிக்கு வந்தவர் அப்படியே உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் . தமிழுக்காக தன்னுடைய உயிரை கொடுக்கபோவதாக கூறினார் . அப்புறம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டு அவரும் பழரசம் சாப்பிட்டு விட்டு சென்றார் . அவரும் தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் இன்றும் பல வசனங்களை பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.
அவர்கள் எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்தது நாம் எது செய்ததாளும் அதற்கு மத்திய அரசு பணியாது என்பதை தான். ஆனால் இரண்டு எம் எல் களை கொண்ட ஒரு ஒல்லிகுச்சி தலைவர் தன்னுடைய மன உறுதியால் மத்திய அரசை அசைத்து காட்டி உள்ளார் . தான் எடுத்து கொண்ட காரியம் முடியும் வரை அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை . இன்று அவர் சொல்லித்தான் ஒரு அரசு கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது .
ஆயிர கணக்கில் தமிழ் உயிர்கள் கொல்லப்பட்ட போதும் வசனம் பேசிய வர்கள் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை தமிழகத்தில் .
ஆனால் ஒரு நல்ல செயல் தலைவனை தான் தமிழன் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றான்.
....
....
....