Thursday, May 28, 2009

ராஜபக்சேவும் நியுட்டனின் மூன்றாம் விதியும் !!

ஒவ்வொரு வினைக்கும், எதிர் வினை உண்டு என்பதுதான் நியுட்டனின் மூன்றாம்விதி. தலைவிதியை நம்பாதவர்கள் கூட நியுட்டனின் விதியை நம்புவதுண்டு ஏனென்றால் அது அறிவியல்.

விடுதலை புலிகளுடனான இந்த கடைசி கட்டப் போரை ஆரம்பித்ததிலிருந்து மனித உரிமைப் பற்றி கொஞ்சம் கூட
கவலையேப் படாமல் அப்பாவி பொது மக்களை துவம்சம் செய்வதில் மனம் குளிர்ந்த ராஜபக்சேவிற்கு இப்போது உலக நாடுகள் சபையில நற்சான்றிதழும் வழங்கப்பட்டாயிற்று .

இனிமேல் அங்கு நடக்கும் அவலங்களுக்கு கேள்வி கேட்பார் இருக்கப்போவதில்லை. இப்போதைய உலக பெரிய அண்ணன் சீனாவும் , சின்ன அண்ணன் இந்தியாவும் தங்களின் கறை படிந்த கரங்களினால் இலங்கையை காப்பற்றி புண்ணியம் சேர்த்து கொண்டுள்ளன . அமெரிக்க, பிரிட்டன் நாடுகள் கூட இந்த குட்டி நாட்டின்முன் தோற்றுள்ளன. தமிழகத்தின் காகித புலிகளும் கர்ஜித்து ஓய்ந்தாயிற்று . சிங்கள காடையர்களின் பெருந் கூச்சல்தான் ஓயிந்தப்பாடில்லை . ஆனால் ஒருவிஷயம் மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் .


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு !

நியுட்டனின் மூன்றாம் விதி இதுவரை தோற்றதாக வரலாற்றிலும் ஏன் அறிவியலிலும் சான்று இல்லை .

Wednesday, May 27, 2009

அரச்ச மாவ அரைப்போமா ? பாட்டி சுட்ட வடை !!



குறிப்பு: சினிமாவில் எப்போது அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறார்களே ! நாமும் கொஞ்சம் அரைத்து பார்த்தால்தான் என்ன ? என நினைத்ததன் விளைவு தான் இந்த கற்பனை.
எப்போதும்
போல் அந்த மரத்தடிக்கு சுள்ளி பொருக்கி வந்து ,எண்ணெய் கரை போக வாணலியை கழுவி வைத்து விட்டு அடுப்பை முட்டிக்கொண்டு இருக்கும்போது , மன்னரிடத்தில் இருந்து வந்திருக்கும் ஆட்கள் வடை சுடும் பாட்டியின் இடம் எது என்று தேடிக்கொண்டிருப்பதாக பூ விற்கும் குழலி சொல்ல ,என்னமோ ஏதோ என்று பாட்டி பதறி கொண்டிருக்கும்போதே அவர்கள் வந்தே விட்டார்கள்.

இங்கு வடை சுடும் பாட்டி நீ தானா? என அவர்கள் கேட்க அமாம்! என்றாள்.
வேறு யாரவது இந்த ஆலமரப்பட்டியில் வடை சுட்டு விர்ர்கிரார்களா ? என கேட்க இல்லை நான் மட்டும் தான் விற்கிறேன் என்றவள், ஏன் என்கிற சந்தேகத்தோடு பார்த்தாள் அவர்களை .

நாங்கள் மன்னரிடத்தில் இருந்து வருகிறோம் . அடுத்து வாரம் மன்னர் அரண் மனையில் நடக்கும் விருந்திற்கு ஆயிரம் வடைகள் தேவைப்படுகிறது. நீ அங்கு வந்து செய்து கொடுக்க வேண்டும் . உன்னை குதிரை வண்டியில் கூட்டி சென்று , விழா முடிந்ததும் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் . உனக்கு தேவையான பொற்காசுகளும் வழங்கப்படும் . இது மன்னருடைய ஆணை . எனக் கூறி விட்டு சென்று விட்டனர் .

இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அதுவும் மன்னரிடத்திலிருந்து வரும் என்று எதிர்ப் பார்க்காத பாட்டி ஆச்சர்யத்தில் முழ்கிப்போனாள் .

இப்படி ஒரு வாய்ப்பு எப்படி வந்தது பாட்டிக்கு? இத்தனை தெரிந்து கொள்ள நாம் ஒரு வாரத்திற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் .

அன்றும் அப்படி தான் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் . வெற்றிலை எச்சிலை துப்ப சென்று வருவதற்குள் எங்கிருந்தோ வந்த காக்கை ஒன்று ஒரு வடையை தூக்கி கொண்டு ஓட, பாட்டியும் அதனை துரத்தி விட்டு கோபத்தில் இருந்தாள். இனி இந்த காக்கை வரட்டும் என்ன செய்கிறேன் பார் என நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அந்த காக்கையோ நரியினிடத்தில் வடையை பரி கொடுத்து விட நரியும் அந்த வடையை எடுத்துக் கொண்டு ஓட , அப்போது பார்த்து அந்த காட்டிற்கு வேட்டையாட வந்தார் நம் மன்னர் . மன்னரின் ஆட்களை பர்ர்ததும் வடையை போட்டு விட்டு நரி ஓட மன்னரின் ஆட்களில் ஒருவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். அவனுக்கு தெரியும் காட்டுக்கு வேட்டை யாட வரும் போது எந்த உணவு பொருளையும் வீணாக்க கூடாது என்று . ஏனென்றால் திடீரென உணவு இல்லாமல் போகலாம் .

அவன் நினைத்ததை போலவேதான் நடந்தது . மான்னருக்கு வேட்டைக்கு ஒன்றும் மாட்டததால் நேரம் ஆக ஆக கொண்டு வந்த உணவு பொருட்கள் எல்லாம் தீர்ந்து போயின . மன்னருக்கு திடீரென பசி உண்டாகவே . சுற்றும் முற்றும் ஏதேனும் பழங்கள் கிடைக்கிறதா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காமல் போகவே மன்னரும் பசியில் சிங்கத்தைப்போன்று கர்ச்சித்துக் கொண்டிருந்தார் . அப்போது மன்னரின் ஆட்களில் ஒருவன் தான் நரியிடமிருந்து எடுத்த வடையை பற்றி கூற வேறு வழி இல்லாமல் மன்னரும் தின்று பார்க்க , ஆஹா என்ன சுவை ! என்ன சுவை !என்று மகிழ்ந்த மன்னர் இது எங்கிருந்து வந்தது , இதனை சுட்ட அந்த கைப்பக்குவம் யாருடையது என்று கண்டறிய ஆட்களை அனுப்பினார் .

அவர்களும் கண்டுவந்து சொல்ல பாட்டிக்கு மிகப்பெரிய ஒரு வியாபார வாய்ப்பு வந்தது .

வெற்றி எப்போதும் முகமுடி அணிந்து தான் வரும் .

Tuesday, May 26, 2009

""அந்தப்பார்வை ""


அந்தப்பார்வை என்றதும் எதோ விஷமத்தமான பர்ர்வையை பற்றி நான் எழுதப்போகிறேன் என்று இந்த பதிவை சுட்டி இருந்தீர்கள் என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.

டைனசோரின் குட்டி பதிப்பான ஓணானுக்கு நான் செலுத்தும் அஞ்சலி தான் இந்த பதிப்பு .

"கேஸ்ட
அவே" ஹாலிவுட் படத்தில்தனித் தீவில் இருக்கும் டாம் ஹாங்க்ஸ் ஒரு கால் பந்திற்கு முகம் வரைந்துஅதற்கு வில்லியம்ஸ் என்று பெயர் வைத்து அதனோடு பேசிக்கொண்டுஇருப்பார். கடலில் அவர் தப்பித்து போகுகும்போது அது தண்ணீரில் விழுந்துவிட அழுது புலம்புவாரே அதுப் போலத்தான் இதுவும்.

மூன்று
வருடங்கள் இருக்கும் என் நினைக்கிறேன் . எங்கள் வீட்டு சாத்துக்குடி மரத்தில் வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக ஒரு ஓனான் தங்கி இருந்தது . முதலில் அதனை நான் கவனத்தில் கொள்ளாவிட்டாலும் பிறகு நாளடைவில் அதனை நான் கவனிக்க ஆரம்பித்தேன் . ஞாயிற்று கிழமைகளில் சாயங்கால வேளைகளில் நான் தோட்டத்தில் நிற்கின்ற போது இந்த ஓணானும் தலையை தூக்கி பார்ப்பதும், தலையை முன்னும் பின்னும் ஆட்டுவதும் பிறகு வேலியில் ஓடி விடுவதுமாக இருந்தது . சாத்துக்குடி மரத்தில் இருக்கும் .என்னைப் பார்த்தும் இருந்த இடத்திலேயே கொஞ்சம் நகர்ந்து மறைந்தது கொள்ளும் . தோட்டத்தில் ஏதேனும் குட்டி பூச்சிகள் மாட்டினால் அப்படியே லபக்கி கொள்ளும் . அதே போல் நான் காலையில் வேலைக்கு கிளம்பும் போதும் வீட்டு பக்கத்தில் இருந்த உடைந்து போன அந்த குட்டி சுவரின் கல்லுகளில் தலையை தூக்கி பார்க்கும் என்னை பார்த்ததும் மறைந்து கொள்ளும் . நான் காலையில் அவசரத்தில் கிளம்பும்போது இதனைப்பற்றி நினைக்காவிட்டாலும் வெளியே வந்ததும் அதனை கவனிக்க தவறுவதில்லை . தினமும் இதுவே ஒரு வேடிக்கையாகத்தான் எனக்கு இருந்தது . எனக்கும் இந்த ஒநானுக்கும் ஏதோ ஒரு புரிதல் இருந்தது போலத்தான் தோன்றியது . ஆனால் அன்று காலை நான் சட்டையை மாட்டி கிளம்பிக்கொண்டு இருக்கும்போது நான் கண்ட காட்சி என் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விட்டது . தினமும் எனக்கு தலையை ஆட்டி விடை கொடுக்கும் அந்த ஓணானின் கழுத்தை எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பூனை ஒன்று கவ்விக்கொண்டு வெற்றியுடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தது . தலை கீழ்' யு 'வடிவில் தொங்கிய அந்த ஒனானின் பார்வையோ என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தது . அது நான் ஏதாவது செய்து அதை காப்பாற்றுவேன் என்று பார்த்ததா அல்லது அது தொங்கி கொண்டிருந்த அந்த போஸில் வேறு வழி இல்லாமல் அப்படி பார்த்ததா எனக்கு தெரிய வில்லை .ஆனால் அந்த பார்வையில் ஒரு இயலாமை ,ஒரு வெறுமை , இனி என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்ற கையறு நிலை இருந்தது . சரணாகதி என்பார்களே . நாம் முடிவு எடுக்க முடியாமல் கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் பார்க்கின்ற பார்வைதான் அது . என் மனது கேட்காமல் ,நானும் ஏதாவது செய்யலாம் என் நினைத்து போவதிற்குள் அந்த பூனையும் ஓணானை கவ்விக்கொண்டே ஓடிவிட்டது . கண்முடி திறப்பதற்குள் சில வினாடிகளில் இவை எல்லாம் நடந்து முடிந்து விட்டது .நான் வேலைக்கு கிளம்பும் அந்து அவசரத்திலும் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்துவிட்டது . இப்போது அந்த சாத்துகுடி மரமும் ,குட்டி சுவரின் உடைந்த கற்களும் எனக்கு வெறுமையாக தோன்றியது . அடுத்து வந்த சில நாட்கள் நான் அந்த இடத்தை பார்த்து கொஞ்சம் விசனப்பட்டேன் . நாளாக நாளாக அது மறந்து விட்டது . ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த ஓணான் இயலாமையுடன் வேறு வழி இன்றி பார்த்த அந்தப்பார்வை இன்னமு எனக்கு மறக்க வில்லை.

Monday, May 25, 2009

புலிகளின் தோல்வி நம் பார்வை

சாகசம் என்பது கேள்விபடுவதை போன்று அப்படி ஒன்றும் இனிமையானதாக இருப்பதில்லை அதனை செய்யும்போது .

புலி தலைவரை பற்றி வரும் செய்தியும் அதனை உறுதி செய்வதாகத்தான் உள்ளது. இந்தியாவில் நாம் நல்ல பாதுகாப்பாக இருந்து கொண்டு இலங்கை பிரச்னையை ஒரு மர்ம நாவலை படிக்கும் கோணத்தில் தான் அணுகுகின்றோம் என எண்ணுகின்றேன் . நான் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் இந்த பதிவை பொறுத்துகொள்ளவும் .


ஆனால் ஒரு சில கசப்பான உண்மைகளும் நம் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். இன்று நான் தட்டச்சு செய்யும் இந்த நேரத்தில் பஞ்சாப்பில் கலவரம் என இந்தியா முழுவதும் தலைப்பு செய்தியாக உள்ளது . அதற்கு காரணம் ஆஸ்த்ரியாவில் உள்ள குருத்வாராவில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கி சூடு . இப்போது பஞ்சாப் எரிகிறது .

அடுத்து இந்திர காந்தி கொலையை தொடர்ந்து நடை பெற்ற சீக்கியர் கொலையில் ஜகதிஷ் டைட்லர் மீது இருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்க பட்டதும் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மீது செருப்பு வீசப்படுகிறது . டைட்லர் தேர்தலில் நிற்காமல் போகிறார் .

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சீக்கியர் மீது ஜெசியா வரியை தாலிபான்கள் விதிக்கின்றனர் . உடன் நம் அரசு அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லாமல் பாகிஸ்தானை உடனே நடவடிக்கை எடுக்க சொல்கிறது.

ஆனால் இலங்கை விவகாரம் என்று வரும் போது அது அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை ஆகிவிடுகிறது.

நாமும் பிளாகில் முன்னுட்டமும் ,பின்னுட்டமும் போட்டுகொண்டு தான் இருக்கின்றோம் ஆனால் என்ன சாதித்தோம் என்று தான் தெரிய வில்லை. புலித்தலைவரின் மரணமும் அப்படியான ஒரு மாயை யாகிவிடுமோ என்று தெரியவில்லை.

இதுவரை அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சனயில் தங்களுக்குள்தான் அடித்து கொண்டன , இப்போது பிரபாகரன் மரண செய்தியில் இலங்கை மக்களுடனும் , முரண் படுகின்றனர். சிலநாட்கள் வரையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொன்ன பத்மநாபன் இப்போது அவர் வீர மரணம் அடைந்து விட்டார் என்று சொல்லுகிறார்.

எது எப்படி ஆனாலும் போருக்கு பிந்திய சூழலில் வரும் தகவல்களை பார்க்கும்போது ,புலிகள் தங்களின் பலமான (கொரில்லா) போர் முறையை பின்பற்றாமல் சர்வதேச நாடுகள் தங்களை காப்பாற்றிவிடும் என்று நம்பித்தான் தோற்றுள்ளதாக தெரியவருகிறது.

தங்கள் தலைமையை காப்பாற்றினார்களா ? இல்லையா? என்பது இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் தெரிய வரலாம் . ஒரு வேலை தவறி இருக்கும் பட்சத்தில் புலிகள் மிகப் பெரிய குறைபாடான ராணுவ தந்திர முறையை பின்பற்றியுள்ளதகதாகத்தான் தெரிகிறது.

போர்ச்சுழலில் இலங்கை போர்த்தந்திரங்களை சரியாக கணிக்காமல் உள்ளதும் புலப்படுகிறது . எப்போதும் இல்லாத ஒரு மிதமான தன்மை இம்முறை புலிகள் காட்டியதாக தெரிகிறது .

கிளிநொச்சி விழுந்ததும் அவர்கள் கொரில்லா போர்முறைமைக்கு மாறுவார்கள் என சொல்லப்பட்டு வந்ததுக்கு மாறாக அவர்கள் பாரம்பரிய முறையிலேயே போர் புரிந்தது ஆச்சர்யம் அளிப்பதாக தான் இருந்தது. கிளிநொச்சிக்கு பிறகு இலங்கை ராணுவத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியதாக தெரிய வில்லை. இலங்கையின் சிறிய பரப்பளவில் குறுகிவிட்ட பிறகு வெளி உலக தொடர்பு அவர்களின் கட்டுப்பாடில் இல்லாதது தெரிகிறது .

வெளி உலகிலிருந்து என்ன வருகிறதோ அதை நம்பவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ள பட்டு இருந்தது தெரிகிறது. வெளி உலகில் தொடர்பில் இருந்தவர்களின் உண்மை தன்மை தெரியாத சூழ்நிலையில் தான் நடேசனும் புலித்தேவனும் சரணடைய ஒத்து கொண்டு சென்றுள்ளனர்.

ஒரு சாதரண தொழில் செய்யும்போது கூட அந்த தொழில் செய்யும் தலைவர் செய்யும் தொழிலின் சந்தை நிலவரம் எப்படி உள்ளது என்று உண்ணிப்பாக கவனித்து வரவேண்டும் . இல்லா விட்டால் மாறிவரும் சுழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரலாம்.

சாதரண தொழிலுக்கே இப்படி என்றால் இலட்ச கணக்கான மக்களின்
வாழ்க்கை ,உரிமை மற்றும் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஒரு அமைப்பு எப்படி விழிப்புணர்வோடு நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும் .

கிட்ட தட்ட ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்த புலிகள் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னான காலகட்டத்தையும் ,

சிங்கள அரசுடனான கருணாவின் தொடபையும் ,

ராஜபக்சே அரசு பதவி ஏற்றதற்கு பின்னான நிகழ்வையும் கவனிக்காமல் விட்டு விட்டனர் .

இலங்கை அரசு முதலில் ராஜதந்திரத்தில் தோற்கடித்து விட்டு தான் போருக்கு இறங்கியது.

ஒரு வேலை பிரபாகரன் உயிரோடு இருந்தாலும் இனி அவரால் என்ன செய்ய முடியும் என்பதும் கேள்விக்குறியே . அவர் மீது இன்டர்போல் வாரண்ட் உள்ளது . இலங்கை விட்டாலும் , இந்தியாவிடம் மாட்ட வேண்டி வரலாம் .

இலங்கையில் இருந்ததை போன்று மாற்ற நாடுகளின் சுதந்திரமாக இருக்க முடியாது. இப்போது பாராளுமன்றத்தில் காங்கிரசிற்கு இருக்கும் பலத்தினால் , தமிழக கட்சிகளின் பிடிமானம் குறைந்து உள்ளது.

இன்று பிரபாகரன் என்று எழுதி கொண்டிருக்கும் நான் அவர் உயிரோடு இருப்பாரானால் அவர் முன்னால் நின்று பேசி இருக்க முடியுமா என்று தெரிய வில்லை.

அவர் இறந்து விட்டார் என்பதை நம்பமுடியாமல் இருக்கின்றோம். உயிரோடு இருக்கின்றார் என்பதையும் உறுதி படுத்த முடியாமல் உள்ளோம் .

ஆதர்ச புருசனாய் நம் மனதால் ஏற்று கொள்ளப்பட்ட ஒருவனின் மரண செய்தியை நம்புவதற்கு திராணி இல்லை நம்மிடத்தில்.

போர்க்களத்தில் அவருக்கு உண்டான பிரச்சனைகள் என்ன ? வீர மரணம் அடைந்தாரா? அல்லது வேதனையோடு தப்பித்து போனாரா ? என்று தெரிய வில்லை.

சாகசங்களை படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் அதனை செய்யும் போது இருப்பதில்லை .

Thursday, May 21, 2009

இலங்கை தமிழரின் இப்போதைய தேவை ஓர் உலகளாவிய அரசியல் தலைவனே!

இப்போது மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக அலைந்து கொண்டு இருக்கிறான் தமிழன் . யாராவது வருவார்களா வந்து நம்மை காப்பார்களா என ஒவ்வொரு கதவாக தட்டி பர்ர்த்தும் உலக சமுதாய மக்கள் பாரா முகம் காட்டியே இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் செத்தழிய உறுதுணையாக இருந்துள்ளனர் . மனித உரிமை , போர்குற்றம் , உலக நாடுகள் சபை இவை எல்லாம் கேலிக் கூத்தாகிபோயுள்ளது . ஒரு சிறிய நாட்டை கூட தன் அதிகாரத்தால் பணியவைக்கமுடியாத ஒரு உலக நாடுகள் சபை இருந்துதான் என்ன பயன். எங்கள் நாட்டின் பிரச்சனையில் தலை இட வேண்டாம் என்கிறார் இலங்கை அதிபர், பிறகு தங்கள் நாட்டிற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்கிறார் . இலங்கைக்கு தாங்கள் விடுத்த வேண்டுகோள்களும், எச்சரிக்கைகளும் காற்றில் பறக்க இப்போது உலக நாடுகள் எல்லாம் கெர்ஜிக்கும் காகித சிங்கங்களாக தோன்றுகின்றன . . எல்லாம் முடிந்தது வெற்றி நாம் அடைந்தோம் , சாத்தான் தோற்று போனான் என் கொண்டாட்டம் நடக்கிறது. இனியும் ஒரு உலக சமுதாய சடங்கு பாக்கி உள்ளது, அது உலக சபைகளின் பிரதிநிதியாக சிலர் வந்து இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்குவதுதான் . இந்த சூழ்நிலையில் உலக தமிழ் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓர் தலைமை தேவை படுகிறது . நாம் ஓங்கி வளர்ந்திருக்கின்றோம் , உலகம் முழுவதும் பரவி இருக்கின்றோம் ஆனால் ஒற்றுமை நம்மில் இழந்தது காணப்படுகின்றோம் . உலகம் முழுவதிலும் ஆங்காங்கு போராட்டம் ஒவ்வொரு விதமாக நடத்தி பயன் ஏதும் இல்லாமல் போனதிற்கு காரணம் தமிழ் சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் போராடததுதான் எனலாம். இலங்கை தமிழர்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் ஓர் உலகளாவிய தலைவனே இப்போது உடனை தேவை.

Monday, May 18, 2009

ஓர் ஆணின் ஏக்கம் !!!


அலசி போட்ட பாவாடையும் ,ரவிக்கையும் என்று காயும் என் வீட்டு கொடியில்!

கசங்கிப்போன மல்லிகை சிதறல் என்று கிடக்கும் என்வீட்டு குப்பையில்!

வீட்டை
கூட்டி ,வாசல் தெளிக்கும் மெல்லிசை என்று கேட்டிடும் என் காலை பொழுதில்!

உறக்கம் தெளிந்ததும் தேனிர் அருந்தும் உவகை என்று கிடைத்திடும்!

மோகம் தீர்ந்த ஆழ்ந்த உறக்கம் என்று என் இரவு கண்டிடும் !!

Monday, May 11, 2009

போடுங்கம்மா ஓட்டு!!!



மண்டை ஓடு
சின்னத்திற்கே
உங்கள் ஓட்டு

ரத்த வெள்ளத்தில் ராஜபக்ஷே

Friday, May 8, 2009

நம்ம ப்ளாக்


டேய் மக்கா நம்ம ப்ளாக் -கும் ஒரு ஷேப்புக்கு வந்துகிட்டு இருக்கு இப்ப ரொம்ப சந்தோசம் தானே !

கொஞ்சம் சிரியுங்களேன் !!!


கொஞ்சம் சிரியுங்களேன் அன்பாய்!
உச்சம் குளிர்ந்து போகட்டும் உள்ளங்கள்!
உஷ்ணக்காற்றால் நிறைந்திருக்கிறது
இவ்வுலகு !

விடியல்


கையாலாகாத கவலைகளுடன்
ஆற்ற வேண்டிய கடமைகளை
ஆற்ற இயலா அவதியுற்று
எங்கோ தெரியும் எதிர்கால
வெளிச்சத்தை
எண்ணி
இதோ விடியபோகிறது
மற்றும் ஒரு நாள் என் வாழ்வில் !

சுமை


தலையில் சுமை !
வயிற்றுக்காக !
வயிற்றில் சுமை!
வாழ்க்கைக்காக!!!

Thursday, May 7, 2009


இந்த தேர்தல்

வந்தாலும்

வந்தது ...

தெரியாதனமா கேட்டுபுட்டேன்


தனி ஈழம் அமைக்க இந்திய ராணுவத்தை அனுப்புவாங்கலாமே உண்மையா?

கலியுக பாரதி

கலியுக பாரதி
இவன்
நீதியை

நிலை நாட்டுவதில்
வீரன்

மதுரை தேர்தலில் பாரதி:

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா