Wednesday, December 9, 2009

தெலுங்கானா பிரச்சனையும் ஈழப் பிரச்சனையும்


நினைத்தார் முடித்தார் . பணிந்தது மத்திய அரசு . புதிய மாநிலம் உருவாகும் விரைவில். ஆனால் வாய்சொல்லில் வீரர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் ஈழ போர் ஆரம்பித்தபோது பேசினார்கள் , நடக்கும் போதும் பேசினார்கள் முடிந்த பின்பும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் . மத்திய அரசை எதிர்ப்பதை போல் நடித்தார்கள் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிபோனார்கள் . திருமா உண்ணா விரதம் நாடகத்தை ஆரம்பித்தார் . தொண்டர்கள் எல்லோரும் திருமாவின் உயிரை காப்பாற்று என்று பஸ்ஸை கொளுத்தினார்கள் . முதல்வர் கேட்டு கொண்டார் என்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் . தான் எடுத்து கொண்ட ஒரு செயலை முடிக்காமல் பாதியில் கழன்று கொண்ட ஒரு தலைவர்தான் நமக்கு இருக்கின்றார்.

அடுத்து கலைஞர் தன்னுடைய நாடகத்தை ஆரம்பித்தார் . காலையில் ஏழுமணிக்கு நடை பயிற்சிக்கு வந்தவர் அப்படியே உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் . தமிழுக்காக தன்னுடைய உயிரை கொடுக்கபோவதாக கூறினார் . அப்புறம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டு அவரும் பழரசம் சாப்பிட்டு விட்டு சென்றார் . அவரும் தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் இன்றும் பல வசனங்களை பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.

அவர்கள் எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்தது நாம் எது செய்ததாளும் அதற்கு மத்திய அரசு பணியாது என்பதை தான். ஆனால் இரண்டு எம் எல் களை கொண்ட ஒரு ஒல்லிகுச்சி தலைவர் தன்னுடைய மன உறுதியால் மத்திய அரசை அசைத்து காட்டி உள்ளார் . தான் எடுத்து கொண்ட காரியம் முடியும் வரை அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை . இன்று அவர் சொல்லித்தான் ஒரு அரசு கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது .

ஆயிர கணக்கில் தமிழ் உயிர்கள் கொல்லப்பட்ட போதும் வசனம் பேசிய வர்கள் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை தமிழகத்தில் .

ஆனால் ஒரு நல்ல செயல் தலைவனை தான் தமிழன் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றான்.


....
....
....

Thursday, November 26, 2009

பிரபாகரனை வைத்து பணம் பண்ணும் பத்திரிக்கைகள்


புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு விடியலை பெற்று தருவார் என்று எல்லாம் எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் இப்படி அற்ப ஆயுளில் சென்று விட்டதை எண்ணி உள்ளுக்குள் புழுங்குவதை யாரிடம் சொல்ல என்று கலைஞர் சமிபத்தில் அறிக்கை வெளி இட்டு இருந்ததை படித்ததின் மூலம் பிரபாகரனின் மரணத்தை ஒரு வழியாக தமிழக அரசு உறுதி படுத்தி விட்டதாக கொள்ளலாம் .

இப்போது ஒரு விடயம் என் மனதிற்குள் வந்து செல்கிறது . நக்கீரனில் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் இது ஆயிரம் ஆயிரம் மடங்கு உண்மை என்ற செய்தி என்னவானது. வந்த பத்து நிமிடத்தில் வித்து தீர்த்தது நக்கீரன் . நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறும் நக்கீரர் ! இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார். ஆனால் ஆங்கில நாவலை தாண்டிய விறுவிறுப்பு இருந்தது அந்த கதையில். சபாஷ் நக்கீரரே.

பிரபாகரன் மரணம் என்பதை அன்று இருந்த சூழ்நிலையில் எவரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை .அதை நன்கு பயன்படுத்தி கொண்ட கோபால் அவர்களுக்கு நன்றி பணமாகுக .

பிரபாகரனின் படத்தை போட்டாலே பத்திரிகை விற்று தீர்ந்திடும் மாயத்தை கண்டு பிடித்து விட்ட பத்திரிக்கைகள் வாரம் ஒன்றாக செய்தி வெளியிட்டு தங்கள் ஈழ தாகத்தை பணம் குடித்து தீர்த்து கொள்கின்றன . ஆனந்த விகடனில் வாரம் ஒரு பிரபாகரன் செய்தி தவறாமல் இடம் பிடிக்கிறது . அவரின் படம் போஸ்டரில் தொங்குகிறது. இதில் குமுதமும் தான் சளைத்தது இல்லை என்கிறது. நக்கீரனை பற்றி சொல்ல வேண்டாம்.

ஆக மொத்தம் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிறதை போல செத்தும் வாழ வைத்து கொண்டு இருகிறார் பிரபாகரன் இந்த உண்மை தமிழர்களை.

குறிப்பு : இந்த செய்தியை பிளாகில் எழுதுவதன் மூலம் என்னுடைய நோக்கமும் இப்படித்தான் இருக்கின்றதோ ?


.....
....
...

Sunday, November 1, 2009

தமிழக எம் பி -களின் இலங்கை பயணம் - இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம் .


திரை விமர்சனம் - தமிழக எம் பி களின் இலங்கை பயணம் .

நடிப்பு : டி.ஆர். பாலு , கனி மொழி , திருமாவளவன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் .

எழுத்து, இயக்கம் - திரு . கலைஞர் கருணாநிதி .

மதிப்பெண் : 100


சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி பிரபலமான அதன் மூலம் முதல்வரும் ஆன திரு கருணாநிதி அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தள்ளாத வயதிலும் , பல வேலை பளுகளுக்கு மத்தியிலும் ஒரு அழகான , உயிரோட்டமான காவியத்தை படைத்திருக்கிறார் .

கதைப்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு பதினோரு எம். பி. கள் இலங்கை சென்று அங்கு கஷ்டத்தில் இருக்கும் ஈழ தமிழர்களின் பாடுகளை அறிந்து அவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்கின்றனர்.

கதை என்னவோ சிறியதாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் கலைஞரின் கற்பனை திறனையும் , அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது . கலைஞர் ஒரு புறம் சிறந்து விளங்குகிறார் என்றால் டி. ஆர் . பாலு மறுபுறம் தன் நடிப்பில் பிச்சு உதறுகிறார் . ஒரு சில இடங்களில் அவர் பேசிய பல வில்லத்தனமான வசனங்களை எடிட் செய்து எடுத்து விடாமல் இருந்திருந்தால் இன்னமும் அவர் நடிப்பின் பரிமாணம் நன்கு வெளிப்படிருக்கும் .

தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது கனி மொழிக்கு பொருந்தும் . ஒரு சில அழும் காட்சிகளில் அவருடை முன்னேற்றம் தெரிகிறது.

தேடி போய் ஆப்பு வைத்து கொள்ளும் கேரக்டர் திருமாவளவனிற்கு. அதனை நன்றாக செய்துள்ளார் . வில்லன் ராஜ பக்ஷே வைத்த ஆப்புவை வாங்கிய பிறகு அவர் பேசும் டயலாக்கில் தியேட்டர் அதிருகிறது . கீப் இட் அப். திருமா அவர்களே

படத்தின் முடிவில் வில்லன் ராஜ பக்ஷே நாயகர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று இயக்குனர் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

படத்தில் இதைப்போல் ஒரு சில குறை பாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் இது ஒரு மிக சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை .

கலைஞரின் ஆஸ்காரை தாண்டிய சாதனை இது.

நன்றி கலைஞர் அவர்களே உங்களிடம் இருந்து இதைப் போல் இன்னும் பல காவியங்களை எதிர் பார்க்கிறோம் .அதைப்போல் தங்களின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இருக்கும் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை என்கிற திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

பயபுள்ள விமரிசன குழு
.


கிசு கிசு :
கலைஞரின் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை பல திருப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது . அதில் ஒரு காட்சியில் நாயகன் வில்லனை பணியவைக்க மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட நினைக்கிறான் . இதை புரிந்து கொண்ட வில்லன் நாயகனுக்கு டெல்லியில் செக் வைக்கிறான் . அதை தொடர்ந்து நாயகனின் கூட்டம் ரத்தாகிறது.

இந்த திரை விமர்சனத்தை பற்றிய உங்களின் விமர்சனம் வரவேற்கப்படுகிறது .


......
.....

Friday, September 18, 2009

நேரு செய்த தப்பும் செவிடன் காதில் ஊதிய சங்கும் .

விழித்திரு ! எதிரி வருகிறான் .

இந்த தேசம் கண்ணீர் வடிக்கிறது!
என்றுதான் இந்த நாட்டிற்கு ஒரு ஒரு வீரமும் விவேகமும் கலந்த ஒரு தலைவன் கிடைப்பானோ என்று .

நாளா புறமும் வளைத்து கொண்டிருக்கிறான் சீனாக்காரன் . நம்முடைய ஆட்சியாளர்கள் இப்போதுதான் விமானத்தில் மூன்றாம் வகுப்பில் போகலாமா என்பதை பற்றி பேச்சி கொண்டு இருக்கிறார்கள்.

சிக்கிமில் சீன இராணுவம் சுட்டு நம் வீர்கள் இருவர் படு காயம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள் . லடேக்கில் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் வந்து சீனா என்று அங்குள்ள பாறைகளில் சிவப்பு கலரில் எழுதிவிட்டு போகிறார்கள் . அருணாச்சல் பிரதேசத்தில் எந்த ஒரு வசதிகள் செய்தாலும் அதனை கடுமையாக எதிர்க்கிறார்கள் . இந்தியாவை சுற்றி ஒரு வலை பின்னல் போல் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிருக்கும் "காட்டு கத்தல் கம்யுனிஸ்டுகள்" இதற்கெல்லாம் வாயே திறக்க வில்லை. சீன ஆக்கிரமிப்பை குறித்து நடக்க இருந்த கூட்டத்தை கூட தள்ளி வைத்து விட்டார்கள் நம் தலைவர்கள் . எவ்வளவு முன்னெச்சரிக்கை.

சீன அரசாங்கம் ஒரு சர்வாதிகார கொள்கை உடைய பயங்கர ராணுவ பலம் கொண்ட ஒரு முரட்டு அரசாங்கம் அதனை எதிர் கொள்ள நாம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் . இந்திய முழுவதும் அலறுகிறது . நம் ஆட்சியாளர்களை
தவிர . சீனர்களை நம்பி நம்முடைய அயலுறவு கொள்கை மென்மையாக இருக்கலாகாது.


இந்த தூங்க மூஞ்சி நிலை நீடித்தால் இந்தியா ஒரு கோழைத்தனமான தோல்வியை வலு கட்டாயமாக ஏற்கவேண்டி இருக்கும்.

நேரு காலத்தில் ராணுவத்தை நவின படுத்தாமலும் , தயார் நிலையில் வைத்திருக்காமலும் இருந்ததால் கேவலமாக சீனாவிடம் அடி வாங்க வேண்டி இருந்தது . அந்த துக்கத்தில் அவரும் போய் சேர்ந்தார் .

இப்போது இருக்கும் அரசாங்கமும் நேரு செய்த அந்த தவறையே செய்த கொண்டு
இருக்கிறது . இந்தியாவே கூக்குரல் இட்டும் அது செவிடன் காதில் ஊதும் சங்காக தான் உள்ளது.

உண்மையிலேய இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன் ...

...

Friday, August 21, 2009

பொக்கிஷமும் படமும் சேரனின் முத்தின மூஞ்சும் !


சேரனின் பொக்கிஷம் படம் பார்த்தவர்கள் அவரின் முத்தின முகத்தை காண சகிக்காமல் ....
சேரனுக்கு ஒரு கடிதம் , சேரன் அவர்களுக்கு ஒரு கேள்வி , .... சந்தேகம்
இதில் நீங்கள் நடிக்க தான் வேண்டுமா? என்று அவரை நார் நாராய் கிழித்து .. அவரின் முத்தின முகத்தை படத்தின் கதையை விட மிக பிரபலமாக்கி விட்டனர் திரை விமரிசனத்தில் .

முத்தின மூஞ்சோடு யார்தான் சினிமாவில் நடிக்க வில்லை . எழுபதுகளில் நடிக்க ஆரம்பித்து இன்றும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கெல்லாம் இருப்பது என்ன இளம் மூஞ்சா ...

எண்பதுகளில் நடிக்க ஆரம்பித்த நாயகர்களுக்கும் குளோசப் ஷாட் வைக்கவா முடிகிறது ...

அப்படி இருக்க சேரன் மட்டும் முத்திய முகத்துடன் நடிப்பதில்
என்ன தவறு இருக்கிறது நண்பர்களே ...

கந்தசாமியின் முகம் மட்டும் எப்படி இருக்கிறது? ...

சரி இப்ப விஷயத்திற்கு வருவோம் .. உண்மையில் பொக்கிஷத்தில் சேரனின் முகம் முத்தி தெரியவில்லை . அவர் செய்த (மிகப் பெரிய ) தவறு என்ன வென்றால் தன்னுடைய மீசையை எழுபதுகளில் இருப்பதை போல வடிவமைத்து கொண்டதுதான் . ஒரு வேலை எழுபதுகளில் அப்படி இருந்ததா ? என்றால் தெரிய வில்லை . ஆனால் அவர் மீசையை கத்தரித்து கொண்டதால்தான் அவர் முகத்தின் வசீகரம் மாறி அகோரமாய் தெரிந்தது . மீசையை அதிகமாய் கட் பண்ணியதால் பல்லும் வெளியே துருத்தியது போல தெரிந்தது .

நன்கு வளர்ந்த அடர்த்தியான மீசையை அதன் அடர்த்தியை குறைப்பதால் இப்படி தோன்றலாம் . பேரன் பேத்தி எடுத்த நாயகர்களையே மேக்கப் போட்டு இளமையாக காட்டும் போது சேரனுக்கு மேக்கப் போடுவது அத்தனை கடினமானதும் அல்ல . அவர் அதிகமாக போட்டு கொள்ளவில்லை . ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனித்து செய்பவர் இதை கவனிக்காமல் விட்டு விடுவதற்கு அவர் மசாலா இயக்குனர் இல்லை .

அடுத்த படத்தில் அவர் நன்கு வளர்ந்த ஒரிஜினல் மீசையோடு வரப் போகிறார் . அப்போது இதே நண்பர்கள் சேரன் இப்போது இளமையாக தெரிகிறார் ... என்ன செய்தார் என பதிவு எழுத போகிறீர்கள் .

ஆகையால் அநேகமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சேரனின்
மீசையே துன்பத்திற்கு காரணம் .

பல நாட்களாக நான் ஆராய்ந்து கண்டு பிடித்த இந்த அரிய கண்டு பிடிப்பிற்கு தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்தவும் !!!

நன்றி !
...

Friday, August 14, 2009

ஆதி கேசவனும் அந்த குடிசை வாசிகளும்


எத்தன பேர் குடிசை போட்டுக்க
போறீங்க
?

ஒரு ஐம்பத்து பேர் அண்ணே !

ஐம்பத்து பேரா ? ஐம்பத்து குடும்பம்னு சொல்லுடா!

சொல்பவன் தலையை சொரிகிறான் ஆமாண்ணே !

ஐம்பத்து குடும்பன்னா பிரச்சனை ஆயிடுமேடா!

ஆதி கேசவன் புருவங்களை சுருக்கி யோசிக்கின்றார் .


ம்... ஒரு குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூவா கொடுத்துட சொல்லிடு
நான் பாத்துக்கறேன் !

டேய் சொக்கா எதோ நீ நம்ப ஆளா போயிட்டதால தான் நான் இத பண்ணுறேன்
ஐம்பத்து குடும்பத்துக்கு மேல அதிகமா போனா நீதான் மாட்டுவே !
என்ன புரியுதா ?

அப்பறம் பணத்த சாயங்காலம் கொண்டு வந்து அம்மா கையில கொடுத்துடு .

புறப்பட தயாராய் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஸ்கார்பியோவின் உள்ளே
ஆதி கேசவன் சென்று அமர்ந்தார் .

ஆளும் கட்சியின் ஓரளவு முக்கியம் வாய்ந்த பொறுப்புகளை பெற்றுள்ள ஆதி கேசவன் அந்த பகுதியின் கவுன்சிலரும் கூட.

சிங்கார சென்னையை அலங்கரிக்கும் பல திட்டங்களை செயல் படுத்தும்
பொறுப்புள்ள பல கவுன்சிலர்களுள் ஆதிகேசவனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

அதில் ஒரு திட்டம் தான் அடையார் ஆற்றின் ஓரத்தில் குடிசைகளை அமைத்தல்
அதற்குதான் இப்போது அனுமதி கொடுத்து விட்டு வந்தார்.

குடிசைகளை அமைக்க ஒரு தொகை , மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்து
குடிசைகள் முழுகினால் நிவாரணம் வாங்கி தர ஒரு தொகை , போலீஸ் தொல்லையோ , வட்டாச்சியர் தொல்லையோ வராமல் இருப்பதற்கு ஒரு தொகை என அவ்வப்போது காசு பாத்தாலும் அவர்களை தன்னுடைய கட்சி வேலைக்கும் பயன் படுத்த தவறுவதில்லை .

சொக்கன் மாதிரியான ஆட்கள் அப்படி சேர்ந்தவர்கள் தான் . அவர்களுக்கும் கட்சி பாதுகாப்பு.
இவருக்கும் வேலை முடிகிறது.

சமிபத்தில் நீதி மன்ற உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை புல் டோசர் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் இப்போது ஆதி கேசவன் மூலம் அவர்கள் புனர்வாழ்வு பெறுகின்றனர். இதுவும் எத்தனை நாள் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அதுவரை விலாசம் தேடி வரும் லட்சுமியை ஏன் விட வேண்டும் .

துர்நாற்றம் வீசும் கழிவு நீர் ஆறாக மாறியுள்ள அடையாற்றின் கரைகளில் ஒன்று இரண்டு என்று ஐம்பத்து குடிசைகள் திடீரென முளைத்தன .

ஆதி
கேசவனின் ஆசி இருப்பதை அறியாத சிலர் போலீசுக்கு பப்ளிக் போனிலிருந்து அனாமதேய கால் பண்ணினாலும் அதனால் எந்த பயனும் ஏற்ப்பட வில்லை.

குடிசைவாசிகளின் திறந்த வெளி கழிப்பிடமாக அங்கு இருக்கும் சாலைகள் மாற ஏற்கனவே அங்கிருந்த அபார்ட்மென்ட் வாசிகளின் சங்கங்கள் மூக்கில் கருப்பு துணி கட்டி, கைகளில் பதாகைகள் ஏந்தி ஒரு நாள் அடையாள எதிர்ப்பை காட்டினர் .

பலனில்லாத அந்த எதிர்ப்பு ஆதி கேசவனை கோபமடைய செய்ய அவரின் அடிப்பொடிகள் ஒன்றினால் அந்த போராட்டத்தை நடத்தினவருக்கு ஒரு மிரட்டல் போனது அதற்கே கைகால் ஆடி போன அவர் அடக்கம் அமரருள் உய்த்தார் .

போராட்டம் வெளிப்படையாக ஓய்ந்ததே தவிர நின்று விட வில்லை . திடீரன ஒரு நாள் ஒரு நாளிதழில் அடையார் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தெளிவான போட்டோவுடன் வந்தது . அதில் ஒரு கட்டம் கட்டிய செய்தியாக இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதிகேசவனின் ஆசி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது .

இதற்கு இடையில் ஒரு பொது நலன் வழக்கு நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்தது . அதில் இந்த ஆக்கிரமிப்பை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு அது மிக பெரிய வேலையாகிவிடும் . அதில் அங்கு குடியிருப்பவர்களுக்கு வேறு இடத்தில் தங்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

நாட்கள் சென்றது.

இப்போது அந்த இடத்தில் நூறு குடிசைகள் முளைத்து இருந்தது

இந்த முறை சொக்கன் ஆதிகேசவனை பார்க்க வந்தது தங்கள் சேரிக்கு மின் விளக்கும் , ரேஷன் கார்டும் கேட்டு தான் . ரேஷன் கார்டும் , தெரு விளக்கும்
வந்து விட்டால் நாமை யாரும் எளிதில் காலி செய்து விட முடியாது என்பது அவனுடைய கணக்கு.

அதை
எதிர் பார்த்தவர் போல ஆதி கேசவனும் புருவத்தை சுருக்கி யோசித்து கொண்டிருந்தார் .

டேய் சொக்கா இந்த முறை நான் உனக்கு நேரடியா எந்த உதவியும் செய்ய முடியாது

ஒரு ஐடியா சொல்றேன் ...

அத கேட்டு அந்த மாதிரி செஞ்சா , நீ கேட்ட மாதிரி நான் செஞ்சி தர முடியும் .
என்ன கேட்ப்பியா ?

என்ன அண்ணே ! நீங்க சொல்றத என்னக்கி கேட்காம இருந்திருக்கோம்.
சொல்லுங்கண்ணே !

அப்பன்னா .. நாளக்கி அங்க இருக்கிற குடுசைக்கி தீ வச்சீடு !

எண்ணனே சொல்லறீங்க ?

இங்க பாருடா சும்மா போயி நான் உங்களுக்காக பேச முடியாது .

இந்த மாதிரி எதாவது நடந்தா ? உங்க மேல ஒரு பரிதாபத்த நான் ஏற்படுத்தி அப்படியே நீ சொன்ன காரியத்தையும் முடிச்சி கொடுத்துருவேன் .

உனக்கு சரின்னா செய்யி இல்லனா வேணாம் !

அடுத்த நாள் காலை எல்லா தொலைக்காட்சிகளிலும் குடிசை தீப்பற்றி எறிந்த செய்தி தான் பிரதானமாக இருந்தது . லோக்கல் எம் எல் வுடன் ஆதி கேசவனும் வந்து பதிக்காப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் .

சில நாட்களில் அந்த இடத்தை வந்து பார்த்த மாநகராட்சியின் அதிகாரிகள் அங்கு இருந்தவர்களை பத்து நாட்களிற்குள் காலி செய்ய சொல்லி விட்டு சென்றனர் .

அவர்களுக்கான
வேறு இடம் பரிசிலனையில் இருப்பதாகவும் இப்போது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இழப்பீடு ஒன்றும் தர முடியாது என்றனர்.

ஆதிகேசவனை பார்க்க சொக்கன் ஓடினான் . ஆதி கேசவன் சி. எம். மீடிங்கில் பிஸியாக இருந்தார் .

குடிசைவாசிகள் அனைவரும் காலி செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் சொக்கனால் ஆதி கேசவனை பார்க்க முடிந்தது .

டேய் சொக்கா நானும் என்னால ஆனா மட்டும் பேசி பாத்துட்டண்டா
சி. எம் பிடி கொடுக்கவே இல்லடா .

எவனோ ஒருவன் கோர்ட்டுல போட்டிருக்கானாமே . நான் ஒன்னும் பண்ண முடியாதுன்னு கை விரிச்சிட்டார் .

சரி கவலை படாத உங்களுக்காக வேற இடம் சீக்கிரம் பாத்து கொடுக்க சொல்லி இருக்கேன் .

சொக்கன் புறப்பட்டான் .

நாளிதழில் குடிசை வாசிகளின் ஆக்கிரமிப்பு ,ஆதி கேசவன் ஆதரவு என்று செய்தி வந்த போதே ஆதி கேசவனுக்கு அந்த இடங்களை எல்லாம் காலி பண்ண வைத்து விட வேண்டும் என்று முதல்வரிடம் இருந்து உத்தரவு வந்ததையும் அதற்கு ஆதி கேசவன் கொஞ்ச நாள் அவரிடம் அவகாசம் வாங்கி இருந்ததையும் சொக்கன் ஒரு வேலை அறிந்து இருப்பானே யானால் அவரிடம் ரேசன் கார்டு வேண்டும் என்று கேட்க சென்றிருக்கவே மாட்டான் .

இந்த அதிர்ஷ்டம் தான் ஆதிகேசவனுக்கும் சொக்கனுக்கும்
இடையே இருக்கும் வித்தியாசம் .

இரவில் சுதந்திரம் வாங்கினோம் ! இன்னும் விடியவே இல்லை. !














ஒரு கசப்பான தோல்விக்கு தயாராகும் இந்தியா

இதோ
நாம் மற்றும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் . ஆனால் சமீப காலமாக செய்தித்தாளில் சீனாவின் சில்மிஷங்களைப் பற்றி வரும் செய்திகள் சந்தோசப் படும் விதமாக இல்லை. நம்முடைய கடற் படை தளபதி இந்திய இராணுவம் சீனாவிற்கு எந்த விதத்திலும் சமம் இல்லை என பகிரங்கமாக பேட்டிகொடுக்கிறார். அதே சமயம் சீனாவின் அதிகார பூர்வ வெப் சைட்டில் இந்தியாவை முப்பது துண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பாது காப்பு வல்லுநர் எழுதுகிறார்.

ஆனால் நம்முடைய தூங்க மூஞ்சி அரசியல் வாதிகளின் காதுகளுக்கு அது எட்டியதாக தெரிய வில்லை . நம்மோடு போட்டி போடும் பாக்கிஸ்தான் எல்லா விதத்திலேயும் நமக்கு சமமாக முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாப் பக்கத்திலேயும் எதிரிகளை கொண்டுள்ள நாம் எவ்வளவு விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.

இந்திய வரலாற்றில் இந்திய மன்னர்கள் அசட்டையாக இருந்ததால் தான் தொடர்ந்து வெளி நாட்டு மன்னர்களிடம் கேவலமாக தோற்க வேண்டி இருந்தது .

ஒரே நாடக இல்லாத போது இந்த நிலை என்றால் , ஒன்று பட்ட இந்தியாவும் தன் ஆயுத பலத்தை அதிகரிக்காமல் அசட்டையாக இருக்கிறது.

கீழே இருப்பது இரு நாடுகளின் ராணுவ ஒப்பீடு .
இந்தியா ராணுவ செலவாக வருடத்திற்கு முப்பது ஆயிரம் கோடி
செலவிடுகிறது
. அதில் பெரும்பான்மையான தொகை வீரர்களின் சம்பளம் .

சீனா வருடத்திற்கு எழுபது முதல் இருநூறு ஆயிரம் கோடி வரை செலவிடுவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ( US Library of congress : Central Intelligence Agency) தெரிவிக்கிறது.

இந்தியா

ARMY
Total Land-Based Weapons: 10,340
Tanks: 3,898 [2004]
Armored Personnel Carriers: 317 [2004]
Towed Artillery: 4,175 [2004]
Self-Propelled Guns: 200 [2004]
Multiple Rocket Launch Systems: 150 [2004]
Anti-Aircraft Weapons: 2,424 [2004]

NAVY
Total Navy Ships: 143
Merchant Marine Strength: 501 [2006]
Major Ports and Harbors: 9
Aircraft Carriers: 1 [2004]
Destroyers: 8 [2004]
Submarines: 18 [2004]
Frigates: 16 [2004]
Patrol & Coastal Craft: 43 [2008]
Mine Warfare Craft: 12 [2008]
Amphibious Craft: 7 [2004]

AIR FORCE
Total Aircraft: 1,007 [2004]
Helicopters: 240 [2004]
Serviceable Airports: 346 [2007]

சீனா

ARMY
Total Land-Based Weapons: 31,௩00

Tanks: 8,200 [2004]
Armored Personnel Carriers: 5,000 [2004]
Towed Artillery: 14,000 [2004]
Self-Propelled Guns: 1,700 [2004]
Multiple Rocket Launch Systems: 2,400 [2004]
Mortars: 16,000 [2001]
Anti-Tank Guided Weapons: 6,500 [2004]
Anti-Aircraft Weapons: 7,700 [2004]

NAVY
Total Navy Ships: 760
Merchant Marine Strength: 1,822 [2008]
Major Ports and Harbors: 8
Aircraft Carriers: 1 [2010]
Destroyers: 21 [2004]
Submarines: 68 [2004]
Frigates: 42 [2004]
Patrol & Coastal Craft: 368 [2004]
Mine Warfare Craft: 39 [2004]
Amphibious Craft: 121 [2004]

AIR FORCE
Total Aircraft: 1,900 [2004]
Helicopters: 491 [2004]
Serviceable Airports: 467 [2007]

Thursday, August 13, 2009

சென்னையை கலக்கும் ஆன்-லைன் ஜாப் மோசடிகள் .


நோகாமல் நோம்பு கும்பிடலாம் வாங்க என்று பண ஆசைகாட்டும் விளம்பரங்களை நாளிதழில்களில் செய்துவிட்டு சைலண்டாக கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது விவரம் தெரிந்த ஒரு ஏமாற்று கூட்டம் .

மாதம் 30,000 சம்பாதிக்கலாம் 50,000 சம்பாதிக்காலாம்.

ஆன் லைன் ஜாப்

தினந்தோறும் இரண்டு மணிநேரம் வேலை செய்தால் போதும்

வீட்டில் கம்ப்யுட்டர் இல்லா விட்டால் பிரவுசிங் சென்டரில் செய்யாலாம் என விளம்பரம் செய்வார்கள் .

விளம்பரத்தில் ஒரு வெப் சைட் ஐடி யை கொடுத்து பார்க்க சொல்லி இருப்பார்கள் . அல்லது செல் நம்பர் இருக்கும் . ஏற்கனவே பணம் சம்பாதிக்க முடியாமல் நொந்து நூலாகி இருக்கும் நொந்தகுமாரர்கள் உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்வார்கள் .
கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதாக சிலர் நினைத்து கொண்டு அந்த வெப்சைட்டை தேடி பார்ப்பார்கள் .
அதில் இவர்களின் ஆசையை கிளறிவிட டாலரில் தொகையை போட்டிருக்க . அதனை பற்றி முழு விபரம் அறிய ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் .
பண ஆசை யாரை விட்டது அதுவும் டாலரில் வந்தால் வுடனே நம்ப நொந்த குமாரர்கள் பணத்தை கட்டி விடுவர். அப்புறம் என்ன நடக்கும் . கீழே ...

ஆன் லைன் ஜாப் சிலவகை படும் .

டேட்டா என்ட்ரி ஜாப் .

பார்ம் பில்லிங் ஜாப்

மெயில் ரீடிங் ஜாப்

காபி பேஸ்ட்

பிளாக் ஆரம்பித்தல் .

பல்க் எஸ் எம் எஸ் அனுப்புதல்

ரெபரல் .

பெரும்பாலும் டேட்டா என்ட்ரி மற்றும் பார்ம் பில்லிங் ஜாப் களுக்கு நீங்கள் சுலபத்தில் எட்ட முடியாத டார்கெட் இருக்கும் தவிர குவாலிட்டி கண்ட்ரோல் என நீங்கள் செய்த தப்புகளுக்கு தகுந்த வாறு பணம் பிடிக்க படும். இதெல்லாம் அந்த கம்பெனி சென்னையில் இருந்து அதன் முகவரி தெரிந்து இருந்தால் தான். சென்னை இல்லாத ,முகவரி தெரியாத நிறுவனமா ? ... சொல்லவே தேவை இல்லை.

அடுத்து இ மெயில் ரீடிங் ஜாபில் உங்களை கிளுகிளுப்பூட்டும் வகையில் வேலையின் தன்மை மிக சுலபமாக இருப்பதாக தெரியும். இந்த வகை ஜாப் இருப்பதாக சென்னையில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்து அதற்காக வெறும் ஐந்நூறு ரூபாய்யை ஒரு தனி மனிதர் பெயரில் பேங்கில் கட்ட சொல்லி அதனுடைய வெப்சைட்டில் போட்டிருக்கிறது .

மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பாதிக்க சொல்லித்தரும் அந்த வெப்சைட் கூட அதனுடைய சொந்தமான டொமைனாக இல்லாமல் நெட்டில் இலவசமாக கிடைக்கும் டொமைன் நேமில் உருவாக்கப்பட்டிருக்கும் .
அப்புறம் நீங்கள் அந்த பெயருக்கு பணத்தை கட்டிய பிறகு உங்கள் இ மெயிலிற்கு இந்த, இந்த வெப் சைடில் உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டிர்கள் என்றால் பணத்தை அல்ல அல்ல குறையாமல் எண்ணலாம் என கூறி இருப்பர் .

நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவு பண்ணும்போது கூட அப்படித்தான் அதில் போட்டிருக்கும். அதேப்போல் உங்கள் எர்நிங்(earning) பகுதியிலும் காட்டும் . ஆயிரம் டாலர் , இரண்டாயிரம் டாலர் , பத்தாயிரம் டாலர் என கிளுகிளுப்பூட்டுமே தவிர அது உங்கள் அக்கௌண்டில் அந்து சேராது. பணம் சம்பந்தமாக அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் இ மெயில் அனுப்பினால் கூட பதில் இருக்காது.

அடுத்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும் ஜாபில் சில இந்திய நிறுவங்கள் தங்களுக்கு கிடைக்கும் வொர்க்கை வெளியில் கொடுத்து செய்கிறது இதற்கும் நம்மிடையே பணம் வசூலிக்கப்படும் .
வேலையும் கஷ்டமானது தவிர நேரம் அதிகம் இழுக்ககூடியது.
இதனையெல்லாம் வீட்டில் கம்ப்யுட்டரும் , அன்லிமிடெட் broadband connection -நும் இருந்தால் ரிஸ்க் எடுத்து ரசக் சாப்பிடலாம் .

மேலும் பிற ஆன்லைன் மோசடிகளை குறித்து அடுத்த பதிவில் எழுதுறேன்.

Thursday, July 30, 2009

இது என் ஐம்பதாவது பதிவு - நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! தமிழ் மணத்திற்கும் நன்றி !!

போகும் தூரம் அதிகம் !


பார்த்து கொண்டதில்லை , பேசிக்கொண்டதில்லை ஆனாலும் நண்பர்கள் நாம்.
நாடுகள் பல கடந்து சென்றாலும் , மாநிலங்கள் பலவானாலும் , ஊர்கள் வேறுபட்டாலும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டு தான் இருக்கின்றது !

மத்தியானமும் , சாயங்காலமும் தொட்டுக்கொள்ளும் ஒரு மூன்றாம் மணி வேளையில் நான் தற்செயலாகத்தான் தமிழ்மணம் வலைப்பதிவை பார்த்தேன் . உண்மையில் தமிழில் இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதை அப்போதுதான் கண்டுகொண்டேன். அது வரை தமிழில் வெப் துனியா தவிர மற்ற வர இதழ் களின் வலைப்பதிவைத்தான் பார்த்து கொண்டு இருந்தேன். தமிழ் மணத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை ...

இந்த நேரத்தில் எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டு எனக்கு பின்தொடர்பவர் வரிசையில் முதலாவதாக வந்து என்னை உற்சாகப்படுத்திய நண்பர் திரு. சுரேஷ் அவர்களுக்கும் அதன் பிறகு வந்த நண்பர் டாக்டர் திரு . தேவன் மாயம் அவர்களுக்கும் மற்றும் இப்படி ஒரு ஊடகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

அதேப்போல் எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும் , தோழியர்களுக்கும் நன்றி நன்றி .

மேலும் அனைத்து ஜாதி , மத , மதமில்லாத , பிரபலமான , பிரபலமில்லாத , இன்றுதான் தமிழ்மணத்தில் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

உலகம் முழுவதும் ஐம்பது நாடுகளில் இருக்கும் தமிழர்களை இந்த ஐம்பதாவது பதிவு சென்று சேர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இது நான் அடித்திருக்கும் முதலாவது fifty . இன்னும் நான் அதிக fifty களை அடிக்க உங்களின் வாழ்த்துக்களை வேண்டி நிற்கின்றேன்.

விழாக்கால தள்ளுபடி :
இன்று
என்னுடைய ஐம்பதாவது பதிவை முன்னிட்டு நீங்கள் உலகம் முழுவதும் எந்த கடையில் என்ன வாங்கினாலும் அதில் 50% தள்ளுபடி கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தள்ளுபடி கிடைக்காதவர்கள் உடனே எனக்கு பின்னூட்டம் இடவும்.

சூப்பர் தள்ளுபடி :
மேலும் நம் இளைய தளபதியின் ஐம்பதாவது படத்தின் first show first ticket ம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும் என்பதை பெரும் ஆரவாரத்திற்கு இடையில் தெரிவித்து கொள்கிறேன். இதனைப் பற்றி மேலும் அறிய பின்னூட்டம் இடவும்.

கொண்டாட்டம் :
இன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய ஐம்பதாவது பதிவை கொண்டாடும் விதமாக டாஸ்மாக கபாலி மற்றும் குவாட்டர் கோவிந்தனின் இன்னிசை கச்சேரி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பின்னூட்டம் :
இன்று ஒரு பின்னூட்டம் இட்டால் இரண்டு பின்னூட்டம் இலவசம். முந்துங்கள் இந்த சலுகை (மண்டையில் ) ஸ்டாக் உள்ளவரை மட்டுமே !

....

Wednesday, July 29, 2009

தமிழ்மணத்தை ரணகளப் படுத்தும் பத்து விஷயங்கள்



பார்ப்பன்யம் : ஆதரவு -எதிர்ப்பு

பெரிய பதிவர் vs சின்ன பதிவர்

ஓரினசேர்க்கை : ஆதரவு - எதிர்ப்பு

அனானியின் அட்டகாசங்கள் - ஹேக்கர்

விடைபெறுகிறேன் - வேண்டாம்

விடுதலைப்புலிகள் : ஆதரவு - எதிர்ப்பு

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் , இல்லை

மத சம்பந்தமான தீவீர பதிவுகள்

வரதட்சனை கொடுமை சட்டம் 498A

இது தவிர எனக்கு பிடித்த பத்து , பிடிக்காத பத்து
என்று பத்து விதமான பதிவுகள் ( இதையும் சேர்த்துத்தான்)


அடுத்த முறை பத்து பத்தாக பிரித்து எழுத கூடிய பத்து விஷங்களைப் பற்றி எழுதலாம் என உள்ளேன். என்ன சொல்கிறீர்கள் .

அப்புறம் இந்த பதிவு ஒரு குட்டி முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கு . கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

Monday, July 27, 2009

ஆட்டோக்காரன் !


என்னது ? வடபழனிலேந்து தி. நகர் போவ நூறு ரூபாவா?

என்னப்பா விளையாடுறியா ?

நான் ஒன்னும் விளையாடுல நீதாமா பெட்ரோல் வில தெரியாம இருக்க ?

அதுக்குன்னு இப்படியா ?
துரைசாமி ரோடுல கட் பண்ணி ஆர் 3 போலீஸ ஸ்டேஷன் வழியா போனா தி.நகர் பத்து நிமிஷம்தாம்ப்ப ...

நல்லா வாயிலேயே வழி சொல்றீயே அப்டே போவ வேண்டியது தானே . அப்ப்றம் எதுக்கு ஆட்டோ...

என்னாப்பா ரொம்ப ரூடா பேசற ..

அப்பறம் என்னமா? டி நகர் வரைக்கும் போயிட்டு சும்மாதான திரும்பி வரணும்

உன்ன யாரு சும்மா வர சொல்றது யாரையாவது ஏத்திக்கிட்டு வர வேண்டியதுதானே?

அதெல்லாம் சரிப்பட்டு வராது . .. நீ எவ்ளோ குடுப்ப?

நான் அறுவது ரூவா கொடுக்கறேன் .

தொண்ணுறு ரூபான்னா ஏறு
இல்லனா வேற அட்டோ பாத்துக்கோ என்ற ஆட்டோ காரனின் பதிலால் கோபமுற்ற அம்புஜம்மாள்
ரொம்பதான் எகத்தாளம் இவனுக்கு என்று தனக்குள் முனகிக்கொண்டு
வேறு ஆட்டோவிற்காக ரோட்டை பார்க்கலானாள்.

ச்சே சொல்லிவச்சாபோல ஒன்னு கூட காலியா வரமாட்டேன்குதே ? என பொருமினாள்.

ஆடி தள்ளுபடியில் நேற்று எடுத்த புடவைக்கு ஜாக்கெட் தைக்க வேண்டும்
தவிர பழைய குக்கரை போட்டு விட்டு புதுசு வாங்க வேண்டும்...

நேற்று மீனாவோடு வந்திருந்ததால் அலுப்பு தெரிய விலை ...

பழைய குக்கரை வேறு கையேடு கொண்டு வந்திருந்தாள் .
இப்ப என்ன செய்வது ...

அதே ஆட்டோகாரனிடம் போக வேண்டியது தான் ...

ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

இப்பல்லாம் தி.நகர் -ல சவாரி ஏத்த போலீஸ்காரன் எங்க உட்றான் ...
ஆட்டோ கொஞ்சம் நிக்க கூடாது வெரட்டிகிட்டே இருக்கான்... என ஆட்டோ காரன் பேசிக்கொண்டு வந்தான் .

ஆனால் பேரத்தில் தோற்றுவிட்ட அம்புஜமாளின் காதில் எதுவும் விழவில்லை .

ஆட்டோ கார பயலுகளே ! பகல் கொள்ள தான் அடிக்கிறான்க . என் நினைத்து கொண்டாள்.

போகும் போதே குப்பையா தெருவில் இருந்த டெய்லரிடம் ஜாக்கெட் துணியை
கொடுத்து விட்டு தி.நகர் ரங்கநாதன் தெருவின் ஆரம்பத்தில் இறங்கிக் கொண்டாள் .
ஆட்டோ காரனின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்து இருந்த பணத்தை கொடுத்து விட்டு கோபமாகவே முகத்தை வைத்து கொண்டு சென்றாள்.

பாத்திரக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது .
தான் கொண்டு வந்த பழைய குக்கரை கொடுத்து விட்டு புதிய குக்கரை பாத்து கொண்டிருந்தாள். ஒரு மணி நேர அலசலுக்கு பின்னர் ஒரு குக்கரை வாங்க முடிவு செய்தாள்.
பழைய குக்கருக்குன்டான தள்ளுபடி போக மீத முள்ள பணத்திற்கான
பில் வந்தது . பில்லை கொடுக்க பணத்தை எடுக்க பர்சை பார்க்கும் போதுதான் தெரிந்தது பர்ஸ் இல்லை என்று.

அடக்கடவுளே பர்ஸ் எங்கே போச்சி ?

ஆட்டோவிலே விட்டோமா ? அல்லது வர்ற வழியில கூட்டத்தில அடிச்சிட்டாங்களா ?

டெய்லரிடம் ஜாக்கெட் கொடுக்கும் போது கிழே விழுந்து விட்டதா ?

குழப்பத்தில் மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கும்போது வைத்திருந்தோமா? இல்லையா ?
என்பதை கணிக்க கடினமாக இருந்தது . மனது முழுவதும் கோபமே
நிறைந்திருந்தால் அப்போது நடந்தவற்றை மனதில் முன்னிறுத்தி பார்க்க முடியவில்லை.
கடையின் கேஷ் கவுண்டரில் இருந்தவனுக்கு அம்புஜமாளின் முகத்தில் இருந்த கலவரம் விஷயத்தை புரிய வைத்திருந்தது .

என்ன மேடம் பில்லு போடுறத்துக்கு முன்னாடி கேஷ் இருக்குதான்னு செக் பண்ணிக்க வேணாமா ? என்றான்.

அம்புஜத்திற்கு கண்ணிற் வெளிவர ஆரம்பித்தது .

ஒரு வேலை கடையில் விழுந்து கிடக்கிறதா ? என்று கீழே குனிந்து தேடி பார்த்துக் கொண்டே நடந்தாள்.

எங்கேயும் கிடைக்காமல் போகவே . தன்னுடைய பழைய குக்கரை வாங்கி கொண்டு அவமானமும், சோகமும் முகத்தில் அப்பிக்கொள்ள என்ன செய்வது என்று நினைத்தவளுக்கு மீனாவிற்கு செல் பண்ணலாம் என்று தோன்றியது.

ஆபீஸில் இருக்கும் கணவனையோ , காலேஜில் இருக்கும் மகனையோ கூப்பிடுவதை விட மீனாவை கூப்பிடுவதுதான் எல்லா வகையிலும் சவ்கரியம் .

ஆனால் அவளும் இன்று வெளியே போவதாக சொன்னாளே என நினைத்தவள் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் போன் செய்தாள்.

மீனா வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது . அதற்குள் அம்புஜம் நடந்து வெளியே வந்து திநகர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள்.

எப்படிக்கா ஆச்சி ? நீ ரொம்ப ஜாக்கிரதையா இருப்பியே?

ஆட்டோ காரன் மேல இருந்த கோவத்திலே வந்தேன் . கடையில வந்துதான்
பாத்தேன் . பர்ஸ காணல எவ்வளவு அவமானமா போச்சி தெரியுமா ?
பேசாம உன்கூடவே நாளைக்கு வண்டியில வந்திருக்கலாம் .
இப்படி பணத்த தொலைக்க தான் ரொம்ப அவசர பட்டிருக்கேன். என அழுதாள்.

அழாதக்கா ! இப்ப என்ன பண்ணலாம் .

போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா ?

கொடுத்தா மட்டும் எப்படி கண்டு பிடிப்பான் ?
எங்க தொலைஞ்சதுன்னு சொல்லுறது? என புலம்பினாள் .

அக்கா
, நாம இப்ப அந்த டெய்லர்கிட்ட போயி ஒரு வேளை அங்க இருக்குதான்னு பாப்போம் . என்றாள் மீனா .
ஆனால் டெய்லரும் இங்கு விழவில்லை என்று சொன்னான்.

இப்ப என்னக்கா பண்றது ... போலீஸ ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து வைப்போம் வா என்று கூப்பிட்டு போனாள்.

ஹெட் கான்ஸ்டபில் எல்லா விவரங்களையும் கேட்டு விட்டு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொன்னார். கம்ப்ளைன்ட் எழுதி கொடுப்பதில் எந்த பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை என்பதால் பெயருக்கு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள் .

அம்புஜமாளுக்கு ஆட்டோ காரனை நினைத்தால் இன்னமும் கோபம் கோபமாய் வந்தது. கிளம்பும் போதே தகராறு பண்ணான் காரியமே விடியல என் நினைத்தாள்.

அவர்கள் வெளியே வந்ததும் மீனா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் போது ஒரு ஆட்டோ வந்து நின்றது . அதிலிருந்து அந்த ஆட்டோ டிரைவர் அவசர அவசரமாக இறங்கினான் . அவன் அம்புஜம் இதுவரை திட்டி கொண்டிருந்த டிரைவர் .
என்னமா பர்சு காணலியா ?
பர்ஸ பத்ரமா வச்சிக்க கூடாதா? வண்டியில கிடந்தது . நான் பாத்ததால போச்சி சவாரி ஏர்ரவங்க யாரவது பாத்து இருந்தா அம்ம்புட்டு பணமும் போயிருக்கும் .
உங்களால நான் சவாரிய கூட ஏத்தாம வரேன் .

போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கத்தான் வந்தேன் . என்ன கம்ப்ளைன்ட் கொடுத்திட்டிங்களா என்றான். சரி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்திட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிடுங்க . நான் வர்ர்றேன் .

என்ன பெட்ரோல் செலவுதான் எனக்கு ? என்று புலம்பிக்கொண்டே ஆட்டோவிடம் சென்றான்.

கொஞ்சம் இருப்பா? என்று சொன்ன அம்புஜம் உள்ளே சென்று கம்ப்ளைன்ட் ஐ வாபஸ் வாங்கி விட்டு வந்தவள் மீனாவிடம் போய் எதோ பேசி விட்டு ஆட்டோ டிரைவரிடம் வந்து வடபழனிக்கு போப்பா என்றாள்.

வரும் போது இதே ஆட்டோவில் இதே ஆட்டோக்காரனை கொள்ளை காரனாய் நினைத்து மனதிற்குள் திட்டிக்கொண்டே கோபமாக வந்தவள், இப்போது அதே ஆட்டோவில் அதே ஆட்டோகாரனை பற்றி பெருமையாக நினைத்து சந்தோஷமாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள் .

...

Saturday, July 25, 2009

முனியம்மா




முனியம்மா வேலைக்கு சென்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகி விட்டது . அதுவும் இல்லாமல் இன்று இடியாய் ஒரு செய்தி அவள் மண்டையை தாக்கியது . அது அவளுக்கு எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிவதாக மருத்துவமனையில் கூறியதுதான்.

ஆட்டோ டிரைவரான அவளுடைய கணவன் மாரியப்பன் கடந்த ஆண்டு ஒரு லாரி விபத்தில் பலியாக அது முதல் தனி மரமாய் இருக்க வேண்டிய சுழல் .இந்த சூழலில்தான் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாய் காசிவிசுவநாதன் வீட்டிற்கு செல்லவேண்டி இருந்தது .

காசி விசுவநாதன் அந்த ஊரில் பணக்காரன் மட்டும் அல்ல அரசியல் செல்வாக்கும் கொண்டிருந்தான். வேலைக்கு சென்ற கொஞ்ச நாளிலே காசி விசுவநாதனின் எண்ணம் நன்றாக தெரிய ஆரம்பித்தது . மனைவி இல்லாத நேரங்களில் மிகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான் . ஒரு நாள் வெளிப்படையாய் சொல்லியே விட்டான் இங்க பார் நீ இங்க தொடர்ந்து வேல பாக்கனும்னா , அப்படி இப்படி இருந்து தான் ஆகணும் என்கிட்டே வேலை செய்யற எல்லாத்துக்கும் அதான். நீ சின்ன பொண்ணா இருக்கியேன்னு பாக்கறேன் .நீயே விருப்பப்பட்டு வரணும் என்ன புரியிதா என்று கூறினான் .

அடுத்த நாள் முனியம்மா வேலைக்கு செல்ல வில்லை . ஆனால் வீடு தேடி ஆள் வந்தது அம்மா கூப்பிடுகிறார்கள் என்று . இதைப்போல் முனியம்மா நிற்பதும் பிறகு ஆள் வந்து கூப்பிடுவதும் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை அவன் அவளை பலாத்காரமாய் கற்பழிக்க முயற்சிக்கவே அன்று ஓடி வந்தவள் இனி அங்கு வேலைக்கு செல்லவே கூடாது என நினைத்தாள் .

இதற்கு இடையில் தான் திடீரென உடம்பு ரொம்ப அசதியாகவும் , ஜொரமும் வரவே ஜி ஹெச் சென்று பார்த்த போது அங்கு ரத்தம் பரிசோதித்து பார்த்தவர்கள் இன்று முடிவை சொன்னார்கள் . முதலில் டாக்டர் நீ என்ன செய்கிறாய் , உன் கணவன் என்ன செய்கிறான் என கேட்டு விட்டு அவன் இறந்து விட்டான் என்று சொன்னதும் முனியம்மாவை ஒரு வித அற்பமாய் பார்த்து விட்டு,
ம்மா உனக்கு எய்ட்ஸ் நோயோட அறிகுறி தெரியுது நீ இனிமே ரொம்ப பத்திர மாக நடந்து கொள்ள வேண்டும் . கொஞ்சம் கட்டு பாடொடு வாழ்ந்தால் .... என சொல்லிக்கொண்டு போனார் ஆனால் எதுவும் அவளின் காதில் விழவில்லை . இடியே விழுந்த பின் விளக்கம் கேட்டு என்ன பயன் .

வீட்டுக்கு வந்த பின்பும் முனியம்மாவின் மனது ஒரு சூனியாமாகவே இருந்தது . தன்னுடைய கணவன் மாரியின் மீது தான் ஆத்திரம் வந்தது . தண்ணி அடிப்பதும் பல பெண்களோடு சகவாசம் வைத்திருப்பதும் தான் அவனுடைய அன்றாட வாழ்க்கையின் நெறிமுறையாக இருந்தது. அவன் இருந்த போதுதான் சுகப்பட வில்லை என்றால் செத்தும் கெடுத்து விட்டானே என்கிற கோபம் வந்தது . இந்த கோபம் பொதுப்படையாய் ஆண்கள் மீதே ஏற்பட்டது . இப்படி தன் வாழ்க்கை வீணாகி விட்டதே என நினைத்து படுத்து கொண்டிருந்தாள் .

அப்போது வீட்டு வாசலின் வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தாள். காசி விசுவநாதன் வீட்டில் இருந்து ஆள் வந்திருந்தான் . அம்மா கூப்பிட்டார்கள் என்று சொன்னான்.


இதுவரை கொண்டிருந்த ஆத்திரங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தவளாய் ஒரு முடிவோடுகிளம்பினாள் . அதில் ஒரு பழி வாங்கும் வேகம் இருந்தது.

...

Friday, July 24, 2009

அஜித் , விஜய் -பத்து வித்தியாசங்கள்


இவரு தல
அவரு தள 'பதி

இவரு அடிச்சா கண்ணு இருக்கும் காது இருக்கும் ...உயிரு மட்டும் இருக்காது .
அவரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிரது தெரியும்

இவரோட தீபாவளி படம் சிவகாசியில ரிலிசானது
அவரோட சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலிசானது

இவரு பில்லா படத்துல அந்த பக்கம் இந்த பக்கம்னு படம் பூரா நடந்துகிடே இருந்தார்
அவரு கில்லி படம் பூரா ஓடிக்கிடே இருந்தார்.

இவரு டான்ஸ் ஆடுனா கை மட்டும் ஆடும்
அவரு டான்ஸ் ஆடுனா கால் மட்டும் ஆடும்

இவரு நெஜமாவே கார் ரேசுல போனாரு
அவரு படத்துல கார் ரேசுல போனாரு

இவரு அமர்க்களமா போக்கிரித்தனம் பண்ணாரு
அவரு போக்கிரியா அமர்க்களம் பண்ணினாரு.

இவரு காதலுக்கு கோட்டை கட்டினாரு
அவரு காதலுக்கு மரியாதை செஞ்சாரு

இவரு காதலித்து கண்ணாலம் பண்ணினாரு
அவரு கண்ணாலம் பண்ணிட்டு காதலிக்கிறாரு .

இவர வச்சி அண்ணன் டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு
அவர வச்சி தம்பி டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு.

இன்னமும் சொல்லிக்கிடே போகலாம் ...
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க !

நன்றி: வருத்தப்படாத வாலிபன் M.A.Phd. Msc. Mphil.,












வாசனை - சிறுகதை


நுகர்வோர் கோர்ட்டின் வாயிலில் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தார் பஞ்சாமிர்தம். இன்று தான் தீர்ப்பு . தனக்கு எப்படியும் சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்கிற நம்பிக்கை அவரின் முகத்தில் தெரிந்தது .ஒன்றரை வருடமாக நடக்கும் கேஸ் இது. கேசிற்கான காரணம் இதான் .தான் செய்து கொண்ட மூக்கு ஆபரேஷனுக்கு பிறகு பஞ்சமிர்த்த்திற்கு வாசனைகள் எதுவும் நுகர முடிவதில்லை

கடந்த இரண்டு வருடங்களாக மூக்கடைப்பு ,மூக்கடைப்பு என கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் தன் நண்பர் வேதாசலம் மூலமாக கேள்விப்பட்டு சிகிச்சைக்காக குமரன் நர்சிங் ஹோமிங்கிற்கு வந்தார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மூக்கில் ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்று சொன்னதால் பஞ்சாமிர்தமும் ஆபரேஷன் செய்து கொண்டார் . ஆபரேஷன் செய்த சில நாட்களில் அவரருக்கு வாசனையை அறியும் சக்தி இழந்து போனதை உணர ஆரம்பித்தார் .

சாப்பாட்டின் வாசனை , ஊது பத்தி , சோப்பு, சென்ட் எதுவும் மூக்கில் எந்த சலனத்தையும் ஏற்படுத்த வில்லை. ஆபரேஷன் செய்த டாக்டர்ரை சந்தித்தபோது இதற்கும் ஆபரேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய டாக்டர் இதில் என் தவறு எதுவும் இல்லை என் கைவிரித்து விடவே பஞ்சாமிர்தம் மூர்க்கமானார் .

இந்த பிரச்சனையை தான் இப்படியே விடப்போவதில்லை என் கூறினார். முதலில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் . அதற்கு பதில் அனுப்பிய நர்சிங் ஹோம் நிர்வாகம் அவரின் குற்ற சாட்டுகளை மறுத்து இருந்தது . அதன் தொடர்ச்சியாகத்தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் பஞ்சாமிர்தம். நீதி மன்றத்தில் மருத்துவருக்கு எதிராக எல்லா குற்ற சாட்டுகளையும் நிரூபித்து மிக திறமையாக வாதாடினார். வாதி பிரதிவாதிகளின்
வாதங்களை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்தி வைத்து இருந்தது.

மணி சரியாக பத்தரைக்கு வந்த நீதிபதி புதிய கேசுகளை விசாரித்து ஒத்தி வைத்து விட்டு மதியம் பஞ்சமிர்தத்தின் கேசில் தீர்ப்பு கூறியவர் வாதிக்கு ஏற்பட்ட குறைபாட்டிற்கு மருத்துவரின் தவறான ஆபரேஷன்தான் காரணம் என்று கூறி மருத்துவ நிர்வாகம் ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடாகவும் தவிர கேசின் செலவாக இரண்டாயிரமும் தர உத்தரவிட்டது.

தன்னுடைய வாத திறமையால் பெற்ற வெற்றியை நினைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர் வீட்டருகே இருப்பாவர்கள் எல்லாம் கூட்டமாக கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த பஞ்சமிர்தத்தின் நண்பர் ஒருவரிடம் பஞ்சாமிர்தம் விவரத்தை கேட்க . என்ன உனக்கு தெரியலையா ? இப்ப இங்கு பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக் சுடுகாட்டில் இருந்து கொஞ்சம் நாளாக பிணங்களை எரிக்கும் போது வாடை வருகிறது வீட்டில் யாரும் இருக்க முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் என்று கூறியவர் பஞ்சாமிர்தத்தையும் கலந்து கொள்ள சொன்னார் . ஆனால் அதில் கலந்து கொள்ளாமல் சென்ற பஞ்சமிர்தாம் தன் மூக்கால் வாசனையை நுகர முடியாததிற்காக முதன் முறையாக சந்தோஷப்பட்டார் .

Thursday, July 23, 2009

நெகிழிச்சியுட்டிய ஐந்நூறு ரூபாய் !!!


பணம் கொண்ட வாழ்க்கையே ஒரு பரிசு !!!
பணம் கொண்டு பல பரிசுகளை வாங்க முடியும் !
ஆனால்
பரிசாக கொடுப்பதற்கு பணம் ஒரு பொருளல்ல .
பணத்தை பரிசாக கொடுப்பதற்கு அது ஒரு உயிரற்ற பொருளுமல்ல .

பணம் ஒரு அதிகார சக்தி.
அதனால் ஒரு இடத்தில் ஓய்ந்து
இருக்க முடிவதில்லை .

இப்படியான எண்ணங்கள்தான் என் மனதில் நேற்று இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தன .

நேற்று இரவு நான் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பொருட்கள் வாங்கி விட்டு பில்லை கொடுப்பதற்காக பணத்தை எடுத்த போது அதில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டில் காலி இடத்தில் "இது அம்மா கொடுத்த பரிசு . கல்யாணத்திற்கு கொடுத்தது" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்து.

எனக்கு அதை பார்த்த போது ஒருவேளை அதில் ஏதேனும் போன் நம்பர் எழுதி இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தால் போன் பண்ணி சொல்லலாம் என் நினைத்தேன் . ஆனால் இல்லை . உண்மையிலேய அந்த பணத்தை கடையில் கொடுக்க எனக்கு மனத்திற்கு கஷ்டமாக இருந்து.

கல்யாணத்திற்கு பரிசாக கொடுக்க எத்தனையோ பொருட்கள் இருக்க அம்மா பரிசாக பணத்தை எதற்கு கொடுத்து இருந்திருப்பார்கள் . தன் மகன் அல்லது மகளுக்கு இது தேவைக்கு உதவும் என்று தானே. அந்த மகன் அல்ல மகளோ இந்த பணத்தை செலவு செய்ய கூடாது என்று தானே அதில் இந்த வார்த்தையை எழுதி வைத்திருப்பாள் . ஆனால் முடிந்தாதா?

பணத்தை அப்படியே வைத்து இருக்க ஒரு வலிமை வேண்டும் .
பண வலிமைதான் அது.

பணம் இருந்தால் பணம் இருக்கும்.
பணம் இல்லா விட்டால் பணம் இருக்காது.
இது புரிந்து புரியாத சுழ்ச்சிமம் .

வாழ்க்கையில் பர பர வென நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் சில சமயங்களில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை நெகிழத்தான் வைக்கின்றன .

.....

அடி தடி வெட்டு குத்து -தமிழ்மணத்தில்


என்ன தான் நடக்கிறது நம் தமிழ்மணத்தில் .

பதிவர்கள் ஒருவர் மற்றவரை தாக்கி பதிவு போடுவது அப்படி போட்டவரை பின்னூட்டத்தில் பின்னி பெடல் எடுப்பது இதை தான் நான் சமீப காலமாக படித்து வருகிறேன்.

கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தின் வாசனையை நுகர்ந்து வரும் எனக்கு இப்போது அதில் கொஞ்சம் தீயும் வாடையும் சேர்ந்து வருவதாகவே படுகிறது .

கடந்த வாரம் ஒரு பதிவர் விடை பெறுகிறேன்
என்றார் . பிறகு ஒரு பதிவர் தமிழ்மணத்தில் பரிந்துரையில் ஏதோ குண்டக்க மண்டக்க நடக்கிறது என எழுதினார். இதில் மூத்த அல்லது பிரபல பதிவர்கள் ஒன்றாக கூடி செயல் படுகின்றனர் என்றார். அதற்காக அவரை பின்னூட்டத்திலும் பிறகு வந்த பதிவுகளிலும் கும்மி எடுக்க அவர் இப்போது போதும்(டா சாமி ) விடை பெறுகிறேன் என்கிறார்.

உண்மையிலேயே அப்படி ஒரு பாகு பாடு நம் தமிழ்மணத்தில்
இருந்து வருகிறதா?
புது பதிவருக்கு ராகிங்கெல்லாம் நடை பெறுகிறதா ?

இது ஒரு புறம் என்றால் ஆரியர் , திராவிடர் என்கிற வேறுபாட்டில்
குடுமிபுடி சண்டை ,பதிவு ,பின்னூட்டம் வேறு.

அப்புறம் பிரபாகரன் ஆதரவு , எதிர்ப்பு சண்டை.

இதுதவிர மதங்கள் சார்ந்த தர்க்க ரீதியான பதிவு தாக்குதல்கள் ஒரு தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு உள்ளது.

இதுதான் இப்படி இருக்கிறது என்றால் இடையில் சைக்கிள் கேப்பில் ஒரு பின்னூட்ட குண்டை தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிடும் அனானிகள் .

நம் தமிழ்குணம், தமிழ்மணம் முழுவதும் பரவி இருக்கின்றதா?

பதில்
சொல்லுங்கள் (அன்பான ) பதிவர்களே? (பணிவாகத்தான் கேட்கிறேன்)

குறிப்பு:
மேலே உள்ள படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படம்தேவைப்பட்டது அவ்வளவுதான்.


...

Monday, July 20, 2009

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!



இப்ப செய்தித்தாளை எடுத்தால் குறைந்தது ஒரு செய்தியாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பிரகஸ்பதிகளை பற்றி வந்து விடுகிறது. லஞ்சம் என்பது நம் கலாசாரத்துடன் ஊறிய ஒன்று. இதைப் போய் பொறி வைக்கிறேன் பிடிக்கிறேன் என்று கிளம்பினால் அப்புறம் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கும் நம் அரசு ஊழியர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் .

ஒருமுறை என் நண்பர் ஒருவரின் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிய போது தரகர் ஒரு ஜாதகத்தை கொடுத்தார் கூடவே இவர் வணிக வரி துறையில் வேலை செய்கிறார் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் என்றார். அவருக்குத்தான் அந்த பெண்ணை கட்டி கொடுத்தார்கள். ஒருவேளை அந்த மாப்பிள்ளை நேர்மையாக இருந்திருப்பாரேயானால் பெண் கிடைத்திருக்குமா ? கிடைத்திருக்கும் என்ன கொஞ்சம் நாள் ஆகும். ஏனென்றால் அவர்தான் பிழைக்க தெரியாத ஆள் ஆயிற்றே !

சில வருடங்களுக்கு முன்பு நான் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய ஒரு தனியார் நிறுவனத்திற்காக மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரியை சந்தித்த போது , எங்கள் நிறுவனத்தின் பொருளை வாங்க பத்து சதவித கமிஷன் கேட்டு "வேண்டுமென்றால் அந்த தொகையை உங்கள் விலையில் கூட்டியே கொடுங்கள் கவர்மென்ட் சொத்து புள்ள இல்லாத சொத்துதானே" என்றார். ஆஹா என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு. எனக்கு ஒரு புது மொழியை சொல்லிகொடுத்த திலகம் அவர்.

அனால் அவரைப்போல் பெருந்தன்மையாய் தமிழக அரசின் ஊழியர் இருக்க வில்லை . டெண்டரில் மிக குறைவாக விலை கொடுத்து பெற்ற ஆர்டர்ருக்கான
பேமென்டை லஞ்சம் கொடுத்தால்தான் தருவேன் என்று தீபாவளிக்கு மோதிரம் கேட்டு முறுக்கிக் கொள்ளும் புது மாப்பிள்ளையாய் அடம் பிடித்தார் . அப்புறம் வேறு வழி?...கொடுத்தோம். பெற்றோம்.

இதை தவிர ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின்
பொஞ்சாதி ,புள்ளைகள் பேரில் இருக்கும் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் செய்து தர சொல்லும் குணசாலிகள் ஒருபுறம் .

அந்த கால கட்டத்தில் எனக்கு அரசு ஊழியர்கள் என்றாலே கம்பெனிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்வி செல்லும் எச்சகல சிங்கங்களாகத்தான் தோன்றும் . (எச்சகல நாய் என்றால் அவர்களுக்கு கோபம் வந்து விடும் அதனால் தான் சிங்கம்) . இப்போது அரசு ஊழியர்களுடனான தொடர்பு அற்று போனாலும் நிகழ்வு மறந்து விட வில்லை.

இப்போது அரசாங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகாரிகள் முதல்கொண்டு , பியுன்கள் வரை பிடித்து கொண்டிருப்பதாக காட்டினாலும் . இது பெருங்கடலின் ஒரு துளியில் நூற்றில் ஒன்றுதான். லஞ்ச ஒழுப்பு துறையின் மூலமாக லஞ்சத்தை நிச்சயம் ஒழித்து விட முடியாது. இதன் மூலம் லஞ்சம் வாங்கும் முறை தான் மாறுமே ஒழிய , லஞ்சம் வாங்குவது குறையாது. புரையோடி போன புண்ணுக்கு வெளி மருந்து சரிவராது. புண்ணின் மூலத்தை கண்டு அழிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் மனநிலையே அதன் மூலம். அரசாங்கம் லஞ்சத்திற்கு எதிரார ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை எல்லா ஊடக மூலமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் சிறுவர்களிடம் தங்கள் தாய் தகப்பனிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியை வாங்க செய்ய வேண்டும் . நேர்மையாய் வேலை செய்யும் ஊழியருக்கு சிறந்த அரசு ஊழியர் என்கிற பட்டத்தை தர வேண்டும். அதனை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். லஞ்சத்திற்கு எதிரான விளம்பரத்தில் லஞ்சம் வாங்குபவர்களை சமுதாயம் வெறுப்பதாக காட்ட வேண்டும் . லஞ்சம் வாங்காதவர்களை கதாநாயகர்களாக மக்கள் அனைவரும் அவர்களை விரும்புவதாக காட்ட வேண்டும். கூடுமானால் அதற்கு என்று ஒரு பிரபல நடிகரையோ ,அல்லது முக்கிய பிரமுகரையோ (நிச்சயம் அரசியல்வாதிகளை கூடாது) பயன் படுத்தாலாம்.

ஒரு சாதாரண பாத்திரம் வளக்கும் பவுடருக்கு விளம்பரம் செய்து மக்கள் மன நிலையை மற்ற முடியும் என்றால் . இதில் முடியாதா ?

ஒரு முக்கிய விஷயம்:
என்னை போன்ற குட்டாளிக்கே இப்படி எல்லாம் யோசனை தோன்றும் போது தாங்கள் கை கழுவுவதை , கால் கழுவுவதை கூட விளம்பரம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன ? தெரியும் ஆனால் ஏன் நிறைவேற்ற மாட்டேன் என்கிறார்கள் .

தேவுடா ..இதை நான் எழுதிதான் தெரிய வேண்டுமா என்ன ?.


லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!

......ஹி ..ஹி . ஹி ஹு ஹு ஹு . வர்ட்டா .

Saturday, July 18, 2009

ஏன் இந்த பிராமிண விரோத போக்கு. ?


நம் வலைப்பதிவுகளில் பொதுவாக பிராமின சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே அதிக பதிவுகள் வருகின்றன ஏன் என்று தெரிய வில்லை. உடனே நீ அந்த சமுகத்தை சார்ந்தவனா ? என சிலர் கேட்க கூடும் .
அவர்களுக்கான பதில்? இல்லை என்பதுதான் .
ஆனால் நான் கேட்ப்பதெல்லாம் ஏன் நம் தமிழ் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் கோபப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

எல்லா சமுகத்தை போலவும் ,பிராமின சமூகத்திற்கு என்று ஒரு மத கோட்பாடு இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் . முஸ்லீம் மதத்தினருக்கு என்று இருக்கும் கோட்பாடுகளை விமரிசித்து இவர்கள் பேசுவர்ர்களா? பிராமிணர்கள் தமிழ் சமுகத்தை மதிக்க வில்லை என்றால் , முஸ்லீம் சமூகத்தினர் மதிக்கின்றாரா ? பாகிஸ்தான் இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால் மசூதியில் முஸ்லீம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதை பார்த்து இருக்கின்றேன். இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை நம் பகுத்தறிவு வாதிகள்.

ஒரு முஸ்லிமை பன்றி கறி சாப்பிட சொல்லி பாருங்களேன் அவர் எப்படி கோபப்படுவார் என்று. ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை தடை செய்கிறது.
அதேபோல இவர்களுக்கும் ஒரு கோட்பாடு இருக்கும் தானே. இதை மட்டும் ஏன் மக்கள் விரோத போக்காக பாக்க வேண்டும் .

என்னை பொறுத்த வரையில் ஹிந்துவோ ,முஸ்லிமோ , கிருத்துவரோ , ஹிந்துவில் ஒவ்வொரு சமுகத்தவரோ அவரவர் அவரவருடைய சித்தாந்தத்தில் கொண்ட நம்பிக்கையில் வாழ்ந்து விட்டு போகட்டுமே . இதில் குறை கூறுதல் எங்கிருந்து வந்தது .

நம் ஜனநாயகத்தில் கொலை குற்றவாளிகளுக்கு கூட அவர்களுடைய வாதத்தை சொல்ல அனுமதிக்கும் போது பதிவுகளில் மட்டும் எதிரடையான வாதங்களுக்கு இடம் கொடாமல் , அவர்களை இழிவாக பேசும் அது ஏற்கும்படியாக இல்லை. பொதுவாக ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் மற்றொருவர் மீது வரும் கோபம் அந்த நபர் சார்ந்து இருக்கும் சமுகத்தின் மீது வந்து விடுகிறது.

என்னை பொறுத்தவரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களாகிய நாம் நம் கருத்துக்களை பரிமாறி கொள்ள ஒரு நல்ல ஊடகமாக தான் இந்த வலைப்பதிவை பார்க்கிறேன். இதிலும் ஏன் இந்த விரோதம் ,கோபம் கொண்ட பதிவுகள் . ஜாதி ,மத ஏற்ற தாழ்வுகள் உலகெங்கிலும் உள்ளதுதான்.

நல்ல எண்ண அலைகளை மட்டுமே பரப்புவோம் . நம் வலை பதிவுகளில் இனி தமிழ்மணம் மட்டும் கமழட்டும்.

சக பதிவர்களுக்கு வாழ்த்துகள் !! மாற்று கருத்துகொண்ட பதிவர்களுக்கும் தான் !!

Friday, July 17, 2009

நான் பிரபல பதிவர் வந்திருக்கேன்.


நூத்து கணக்கான பின்னுட்டங்கள், வாசகர் பரிந்துரையில் தமிழ்மணம் மகுடம் எங்கு பாத்தாலும் என்னுடைய பதிவை பத்தியே பேச்சு என நான் ரொம்ப ஆசைப்பட்டாலும் அதுக்கு கொஞ்சம் குறைய நம்முடைய வலைப்பதிவர்கள் வந்து
டேய் மக்கா நீயும் பிரபலம் தான்டா
சும்மா பட்டையை கிளப்பு என முதுகில் தட்டி சொன்னதும்
கொக்கு பர பர , மைனா பர பர என மனது ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

பயப்புள்ள இப்ப நீ தனி ஆளு இல்ல , உனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்குடா

உண்மையிலேயே பிரபலமாக இருக்கும் பதிவர்களின் காதிலிருந்து வரும் புகைகளுக்கு நான் பொறுப்பல்ல .

இந்த பயப்புள்ளயையும் ஒரு மனுஷனா மதிச்சி பின்னுட்டம் போட்ட நல்ல பிரபல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

இனியாவது ஒழுங்கா யோசிச்சி நல்ல எழுத பாரு என்ன தெரியுதா என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

சரிங்க்ணா .

...

Thursday, July 16, 2009

ஒரு பிரபல பதிவரின் ஆதங்கம்.


'தமிழ்மணத்தில் ' எப்ப பாத்தாலும் பிரபல பதிவர் , பிரபல பதிவர் என்று எழுதுகிறார்களே எனக்கு மட்டும் என்ன கொறைச்சல் என என்னை நானே பிரபல பதிவர் என்று அழைத்துக் கொள்கிறேன்(வேறு வழி ) .

இந்த தலைப்பை பாத்தாலாவது நாலு பேர் வந்து நம்ம வலைப்பதிவில் தலையை காட்டிவிட்டு போக மாட்டார்களா ? என்கிற ஆதங்கம் தான் எனக்கு.

வந்ததுதான் வந்தீக அப்படியே ஒரு பின்னுட்டத்தையும்
தட்டி விட்டுட்டு போங்க .

Tuesday, July 14, 2009

ஆட்டோ டிரைவர்கள்(தமாஷான ) போராட்டம்


தமிழகத்திற்கு சேவை செய்யும் நம் ஆட்டோ டிரைவர்களின் நியாயமான போராட்டம் மக்களின் பேராதரவை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மிக குறைந்த கட்டணத்தில் ,பணிவன்புடன் பயணிகளை ஏற்றி செல்லும் நம் ஆட்டோ காரர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் .அவர்கள் என்ன மனம்போன போக்கிலா கட்டணம் வசூலிக்கிறார்கள் .

நம் ஆட்டோகாரர்கள் அப்படி என்ன அதிகமாக கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் வீதம் மாதத்திற்குள் நுற்றி ஐம்பத்து லிட்டர் பெட்ரோல் ,டிசல்,கேஸ் மானிய விலையில் கேட்கிறார்கள் . அரசாங்கம் அதை கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே.

இதை பொது மக்களாகிய நாங்கள் எங்கள் ஆட்டோ நண்பர்களுக்காக உரிமையுடன் கேட்கிறோம். அரசாங்கமே உடனே செவி கொடு.

இதுக்கும் ஒரு போராட்டத்தை நடத்த முன் வரும் கம்யுனிச தோழர்களுக்கு: உங்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?

இது போராட்டங்கள் மாதம்


இந்த மாதத்தில் மட்டும் எத்தனை விதமான போராட்டங்கள்.

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்க கோரி போராட்டம்.

தங்கள் சம்பளத்தை உயத்தை கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் .

இதே காரணத்திற்காக கால்நடை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் .

தமிழகத்தில் பொட்டாசியம் கார்பைடு தட்டு பாடு நிலவுவதால் தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி( பாலை ரோட்டில் கொட்டி) போராட்டம் .

தமிழகத்தில் உளுந்து தட்டு பாடு உள்ளதால் அப்பளம் தயாரிப்பாளர்கள் போராட்டம்.

சமச்சீர் கல்விமுறையை அமுல் படுத்தவும் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த கோரியும் போராட்டம், தடியடி.

ஆட்டோ களுக்கு மானியத்தில் பெட்ரோல்,டிசல் ,கேஸ் வழங்க கோரி ஆட்டோ டிரைவர்கள் வரும் பதினேழாம் தேதி போராட்டம் .(ரொம்ப தமாஷான போராட்டம்)

தங்களது சம்பளத்தை உயாத்த கோரி சத்துணவு பணியாளர்கள் போராட்டம்.

இது தவிர இலங்கை தமிழருக்காக , பெட்ரோல் விலையை உயர்த்தியதற்காக
அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டம்.

இந்த போராட்டம் எல்லாம் சட்ட சபை நடப்பதால் கவனத்தை ஈர்க்க நடை பெறுவதாக கொண்டாலும் உலக வரலாற்றை திரும்பி பார்க்கும் போது
பேரரசருக்கு வயதாகும் போது குட்டி ,குட்டி மன்னர்கள் அடங்காமல் அவனை எதிர்க்க முற்படுவது தான் நினைவிற்கு வருகிறது .

பாடாவதியான மாயாவதியும் - முகமுடி கிழிக்கும் கம்யுனிஸ்டுகளும்


அதிகாரம் கைக்கு வந்தால் ஆணவம் தலைக்கு ஏறிவிடுவது சகஜம்தான் என்றாலும் மாயாவதிக்கு கொஞ்சம் அதிகமாகவே ஏறிவிட்டதாக தெரிகிறது. எந்த மாயாவதி என்று கேட்பவர்களுக்கு உ.பி. முதல்வர் என கூறினால் புரியும்.

நம் ஜெயலலிதாகூட முதல் முறை ஆட்சிக்கு வந்த போது இப்படி தான் எங்கும் ,எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைத்து தொட்டதுக்கெல்லாம் அவர் பெயர் வைத்தார் . நல்லவேளை பிறக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் தன் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. எங்கு பார்த்தாலும் அவர் கட் அவுட்கள் முளைத்திருக்கும். அவர் வீட்டில் கிளம்ப ஆரம்பிக்கும் போதே சென்னையின் எல்லா ரோடுகளிலும் ட்ராபிக் நிறுத்தப்படும் . அவர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பின்பு முழுவதும் திருந்தினார என்பது தெரிய வில்லை . ஆனால் இந்த மாதிரியான வெளிப்படையான ஆடம்பரங்களை நிறுத்திவிட்டார். தோல்வியிலிருந்து கற்ற பாடம்.

ஆனால் மாயாவதி இன்னமும் பாடம் கற்றதாக தெரிய வில்லை. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு பண்ணி தனக்கு சிலை வைத்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் உ.பி யை முன்னுக்கு கொண்டு வருவதில் இல்லை.

அடுத்து கேரளா கம்யுனிஸ்டுகள் விஷயத்திற்கு வருவோம் . எங்காவது ஊழல் என்ற பேச்சு அடிப்பட்டால் உடனே ராஜனாமா செய் . என்று கூட்டம் போடுவதிலும் ,போஸ்டர் அடித்து ஓட்டுவதிலும் மும்மரமாக இருப்பவர்கள் தங்கள் தலைவர்கள் செய்ததை மட்டும் ஒத்து கொள்ளவே மாட்டார்கள் . அவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டால் மட்டும் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி .

கேரளா மாநில செயலாளர் பிரனாய் ராயின் ஊழல் சம்பந்தமாக ஆதாரங்கள் சேகரித்த பிறகுதான் சி.பி.ஐ . ஆளுநரிடம் அனுமதி கேட்டது . அனுமதி அளித்த ஆளுநர் வசை மாறி பொழியப்பட்டார். இப்போது கேரளா முதல்வர் அச்சு பொலிட்பிரோ விலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் பிரனாய் ராயின் ஊழலை மறைக்காதது தான்.

தன் கட்சியில் இருக்கும் ஒரு ஊழல் பேர்வழியை தண்டிக்க முடியாதவர்கள் . ஊருக்கு உபதேசம் செய்வார்கள் .

வாழ்க கம்யுனிசம் .

Monday, July 13, 2009

இந்தியாவிற்காக பரிதாபப்படுங்கள் !!!



ஒரு நல்ல நாட்டை எப்படி மோசமாக நிர்வகிக்கலாம் என்பதற்கு இந்தியா தான் முன்னுதாரணம்.

எகிப்தில்
நம் பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கிறார் என்கிற செய்தியை பார்த்த பொது இப்படித்தான் எனக்கு தோன்றியது.

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிர வாதிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் தான் இனி அதனுடன் பேச்சிவார்த்தை என்கிற இந்திய அரசாங்கத்தின் நிலைபாட்டில் ஏன் இந்த பெரும் மாற்றம். அமெரிக்காவின் தூண்டுதலா ? அப்படி என்றால் இந்திய இறையாண்மை அமெரிக்க இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தான் உள்ளதா? தாலிபன் தீவீர வாதிகளை ஒடுக்கவேண்டுமானால் அமெரிக்கா , இந்தியாவை பேச்சவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிளாக் மெயில் செய்து இந்தியாவை பணியவைத்து விட்டது.

மும்பை தீவீரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத நிலையில் அதனுடன் பேச்சிவார்த்தைக்கு ஒத்து கொண்டதன் மூலம் இந்தியா ஒரு மென்மையான தேசம் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த உலகிற்கு நிரூபித்து உள்ளது.

இந்தியாவும் , இந்தியர்களும் வலிமையாக இருந்தாலும் அதன் தலைவர்கள் கோழைகளாக, உலகின் அழுத்தத்தை தாங்கும் வலிமை இல்லாதவர்களாக இருப்பதால்தான் இந்தியாவிற்கு எதிராக தீவீரவாதிகள் தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது.

நம் நாட்டின் பாராளு மன்றத்தையே தாக்கினால் கூட கொஞ்ச நாள் அதைப்பற்றி கார சார மாக பேசி விட்டு பிறகு அதை மறந்து விடுவது தான் நம் தலைவர்களின் குணாதிசயம். பாராளு மன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக மரண தண்டனை விதிக்க பட்ட அப்சல் லுக்கு இன்னமும் தண்டனை நிறைவேற்ற பட வில்லை.
தன்னுடைய இறையாண்மை குள்ளேயே நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் எப்படி எப்படி மற்றொரு நாட்டை பணிய வைக்க முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு நாடு ஜனத்தொகையில் மட்டும் பெரியதாக இருந்து பிரயோஜனம் இல்லை. கொள்கையில் பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு ஏழ்மை நாடாக இருந்தது ஆனால் இந்திரா காந்தி பாகிஸ்தானோடு போர் புரிவதற்கு அது தடையாக இருக்க வில்லை .இன்று இந்தியாவின் நிலை வேறு.

நாம் பொறுமையாக இருப்பதினால் போரை நிறுத்திவிட வில்லை தள்ளிபோட்டு கொண்டு தான் செல்கிறோம் . ஒரு நாள் நாம் வேறு வழி இன்றி எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கும் .

கடைசியாக ஒரு செய்தி:

சீனா இந்தியாவை தாக்கலாம் என இந்தியன் டிபன்ஸ் ரிவிவின் எடிட்டர்
பாரத் வர்மா கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிஉள்ள காரணம் : சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் பாதிப்பினால் எழுந்துள்ள அசாதரண சுழல் , பாகிஸ்தானில் உள்ளநாட்டு போரினால் அது முன்பு போல இந்தியாவின் மேல் கவனம் செலுத்த முடியாமை, இந்தியாவின் ,அமெரிக்கா ,ஐரோப்பிய நெருக்கங்கள் போன்றவைதான் .

அதற்காக சீன கடலில் அதனுடைய போர் கப்பல்களை அதிகப்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகின்றார். இந்தியா போன்ற மென்மையான (நன்கு கவனிக்கவும் ) நாடுகளை தாக்கி அதன் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயல்வதாக தெரிவிக்கிறார.

கலீல் ஜிப்ரனின் கவிதை ஒன்று :

எந்த தேசம் பழம் பெருமைகளை பேசி
அதன் நிகழ்கால துயரங்களை மறக்க நினைக்கின்றதோ
அதற்காக பரிதாபப்படுங்கள்.

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா