Wednesday, November 26, 2014
Wednesday, May 1, 2013
கிழிபடும் கம்யுனிஸ்ட்களின் முகத்திரை
என்ன நடக்கிறது நம் நாட்டில். இங்கு ஒரு அரசு செயல்படுகிறதா? அல்லது மேய்ப்பன் இல்லாத ஆடுகளா நாம் ? நூற்றி இருபதுகொடி மக்கள்தொகையும் உலகின் மூன்றாவது பெரிய ராணுவமும்,அணு ஆயுத வல்லமையும் கொண்ட ஒரு மிகப்பெரிய நாட்டிற்குள் மற்றொரு நாடு மிக அலட்சியமாக் 19 கிலோ மீட்டர் வரை உள்ளே நுழைந்து டென்ட் போட்டு உட்கார்ந்து இருக்கிருக்கிறது.
இதனை பார்த்து வீறுகொண்டு எழுந்து எதிரிகளை விரட்டி அடிக்க வேண்டிய அரசாங்கமோ ஒரு சாதாரண குடிமகனை போன்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறது. இது இப்படி இருக்க. இந்த நாட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மந்திரிகளாக இருக்கும் ஒரு சிலரோ முட்டாள் தனமாக பேசிக்கொண்டு மக்களை திசை திருப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
பிரதமர் இது லோக்கல் பிரச்சனை என்கிறார். மற்றொரு மந்திரி இது ஒரு சிறிய பிரச்சனை என்கிறார். மற்றொருவர் ஆக்கிரமிக்குள்ளான இடம்
சர்ச்சைக்குள்ளான இடம் என்கிறார். தவிர அங்கு மக்கள் வசிக்கவில்லை என்கிறார். மக்கள் வசிக்க வில்லை என்கிற காரணத்திற்காக அதனை மற்றொரு நாட்டிற்கு கொடுத்து விடலாம் என்கிறாரா?
இந்த பிரச்சனையை மிக சாதரணமாக கையாளுவதாக அரசாங்கம் காட்டிக்கொள்ள விரும்பினால் அதற்காக இப்படி கோழைத்தனமாக நடந்து கொள்வதையா தேர்ந்தெடுப்பது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாட்டின் ஒரு மந்திரி அங்கு செல்வது எத்தனை ஒரு பேடித்தனமான செயல் என்பதை ஏன் இந்த அரசாங்கம் நினைத்து பார்க்கவே மாட்டேன் என்கிறது .
எதிக்கட்சிகள் என்னதான் கூச்சல் போட்டு கத்தினாலும் இந்த அரசாங்கத்தின் செவிட்டு காதில் விழவே இல்லை. இந்த சுழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயளாளர் டி.ராஜா கூறும்போது இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் அணுக வேண்டும் என்று கூறுகிறார். தவிர சல்மான் குருஷித்தின் சீன பயணத்திற்கு ஆதரவும் தருகிறார்.
ஒரு வேளை அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்த காரியத்தை செய்து இருந்தால்இவர்கள் இந்நேரம் கொதித்து எழுந்து தேச நலன், நாட்டின் பாதுகாப்பு என்று பக்கம் பக்கமாய் டயலாக் பேசி இருப்பார்கள். ஆக்கிரமித்து இருப்பது சீனாவாக இருப்பதனால் பொறுமையாக கையாளச் சொல்கிறார்கள் போலும் .
இந்த கம்யுனிஸ்ட்களின் தேசப் பற்றை பார்க்கும் பொழுது பற்றிகொண்டுதான் வருகிறது. நாட்டு மக்கள் இவர்களை நம்புவதை மறுபரிசலனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டதாகத்தான் கருதுகிறேன். ஏனென்றால் இவர்களின் முகத்திரை நன்றாக கிழிந்து நிஜ முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது .
இவர்களுக்கு இந்தியாவைவிட கம்யுனிச கொள்கைகள்தான் முக்கியம். கயுனிச நாடான சீனாதான் இவர்களுக்கு முக்கியம். இதுவரை இவர்கள் சீனாவிற்கு எதிராக ஏதாவது பேசி இருக்கிறார்களா என்பதை யாரவது செய்தி தாளில் பார்த்து சொன்னால் அவர்களுக்கு பரிசு தருவதற்கு தயாராக இருக்கிறேன்.
என்னை பொருத்தவரை நாம் எந்த கருத்தை , கொள்கையை கொண்டவர்களாக இருந்தாலும், நம்முடைய சொந்த நாட்டின் பற்று கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். நம் தாய் நாட்டிற்கு விரோதமாய் எவன் வந்தாலும் அவனை எதிரியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர அவன் மதத்தால், கொள்கையால் நம்மை ஒத்தவன் என்று கரிசனம் காட்டினால் இந்த தேசத்தை காட்டிகொடுத்த பழிக்கு ஆளாக நேரிடும்.
இனியாவது கம்யுனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு சாதகமாக செயல்படட்டும்.
இப்போது அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு வருவோம். ஏன் நம் நாட்டு தலைவர்கள் 1962 பயத்திலேயே வாழ்கின்றனர். அப்போது செய்த தவறையே செய்கின்றனர். ஒரு வேளை போர் ஏற்பட்டால் அதில் சீனாவிற்கும்தான் பாதிப்பு ஏற்படும் 1962 ராணுவம் அல்ல நம் ராணுவம் இப்போது. நம் அரசியல் வாதிகள் நம் ராணுவத்தின் பலத்தினை குறைத்து மதிப்பிடுகின்றனாரா?
இல்லை இதி வேறு ஏதேனும் உள்குத்து வேலை இருக்கிறதா?
ஒரு வட கொரியாவால் அமெரிக்காவை மிரட்ட முடிகின்றது, அமெரிக்காவின் ஏவுகணை சோதனையையே தள்ளிபோட வைக்க முடிகிறது.
இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் ஒரு நாட்டை பாது காப்பது அந்த நாட்டின் ராணுவமும், ஆயுதங்கள் மட்டும் அல்ல அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைமைதான் என்பது புலப்படுகிறது.
அப்படி ஒரு சக்தி வாய்ந்த தலைமை இந்த நாட்டிற்கு எப்போதுதான் கிடைக்கும் என்றுதான் தெரிய வில்லை.
இது எல்லாவற்றையும் விட ஒரு சந்தேகம் விடாமல் என் மனதை சுற்றிகொண்டே வருகிறது. அது நம் நாட்டின் எல்லை எந்த முறையில் பாது காக்கப்படுகிறது என்பது தான். 19 கிலோ மீட்டர் தூரம் நம் நாட்டிற்குள் ஒரு நாட்டின் ராணுவத்தால் மிக எளிதாக வர முடிகின்ற அளவிற்குத்தான் நம் நாட்டின் எல்லை பாதுகாக்கப்படுகின்றதா?
அவர்கள் உள்ளே வரும் வரை நம் நாட்டின் ராணுவம் என்னதான் செய்து கொண்டு இருந்தது?
என்னைபோன்ற ஒரு சாதாரண குடி மகனால் இப்படி எழுதுவதை தவிர வேறு என்ன செய்ய முடிகிறது . உயிர் ஒன்று தான் இருக்கிறது.
இந்நாட்டிற்காக அதனை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
என் தாய் நாடு ஒரு வலிமையான நாடாக உலக அரங்கில் இருப்பதை என் வாழ்நாளில் பார்த்து விட்டு போவேனோ தெரியவில்லை .

Subscribe to:
Posts (Atom)